ராமநாதபுரத்தை சேர்ந்த இவர், சென்னை மாநகராட்சி பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். ஒன்றாம் வகுப்பிலேயே ஒரு மாணவனை தமிழ் எழுத்துகளை வாசிக்க வைத்துவிட்டால், பள்ளி இடைநிற்றலை தவிர்க்க முடியும் என்றும், கனகலட்சுமி உறுதிபட கூறுகிறார்.
அவரிடம் உரையாடியதில் இருந்து... : உங்கள் தமிழ் கற்பித்தல் ஆராய்ச்சி குறித்து...
ஒரு குழந்தைக்கு ஆறு வயதில் தான், மூளை முழுமை பெறுகிறது. துவக்க பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்கள், இந்த வயது கொண்டவர்கள். இதனால், ஒன்றாம் வகுப்பில் ஒரு குழந்தைக்கு, 45 நாட்களில் தமிழை கற்றுக் கொள்ளும் வகையில் ஆய்வு செய்து, ஆசிரியர்களுக்கு கற்பிக்கும் முறையை விளக்கி, ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளேன்.
தமிழ் கற்பித்தல் ஆராய்ச்சியை தவிர, துவக்க பள்ளி மாணவர்களுக்காக வேறு ஏதேனும் ஆய்வு செய்திருக்கிறீர்களா?
எப்படி, 45 நாட்களில் ஒரு மாணவன் தமிழ் கற்றுக் கொள்ள முடியுமோ, அதேபோல, 38 நாட்களில் பூஜ்யம் முதல் 100 வரை, எண்களை கற்றுக் கொள்ள முடியும் என்று நிரூபிக்கும் வகையில், கணக்கு கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளேன். வாய்ப்பாடு தெரியவில்லை என்ற காரணத்தினாலேயே, ஒரு மாணவன் தேர்வில் கணக்குகளை போடாமல் வந்துவிடக்கூடாது. இதற்காக எளிய முறையில் வாய்ப்பாடு கற்பிக்கும் முறை அந்த புத்தகத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உங்கள் ஆராய்ச்சி புத்தகங் களுக்கு, சக ஆசிரியர்களிடம் வரவேற்பு உள்ளதா?
என்னுடைய கற்பிக்கும் பயிற்சி முறையை, மற்ற ஆசிரியர்களுக்கு சொல்லிக் கொடுக்க, பள்ளி கல்வித்துறையில் இருந்து மாவட்ட வாரியாக சென்று, துவக்க பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர். இதுவரை விழுப்புரம், கடலூர் மாவட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்துள்ளேன். அம்மாவட்ட ஆசிரியர்கள் இந்த கற்பிக்கும் முறையை மிகுந்த ஆர்வத்துடன் கேட்டு தெரிந்து கொண்டனர். பல ஆசிரியர்கள் என்னுடைய புத்தகத்தை கேட்டு வாங்கி சென்றனர்.
ராமநாதபுரத்தை சேர்ந்த நீங்கள், அங்கிருந்து சென்னை மாநகராட்சி பள்ளிக்கு மாற்றலாகி வந்து பணிபுரிவதன் நோக்கம்?
சென்னையில் குடிசை பகுதிகள் அதிகமாக உள்ளன. இங்குள்ள குடிசை பகுதி மாணவர்களிடம், பள்ளி இடைநிற்றல் அதிகமாக உள்ளது. இம்மாணவர்களின் கல்வி ஆர்வத்தை தூண்ட ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக, சென்னைக்கு மாற்றலாகி வந்தேன். நான் பணிபுரியும் எழும்பூர் மாநகராட்சி துவக்க பள்ளியில், மாணவர்கள் இடைநிற்றல் இல்லை. ஒருநாள் கூட பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் மாணவர்கள் வருகின்றனர். ஒன்றாம் வகுப்பில் ஒரு மாணவன் தமிழ் வாசிக்க பழகிவிட்டால், பள்ளி இடைநிற்றல் நிச்சயமாக இருக்காது.
துவக்க பள்ளி ஆசிரியர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?
எந்த குழந்தைக்கும் படிப்பு வராது என்று கிடையாது. சில குழந்தைகளுக்கு புரிதல் குறைவாக இருக்கும். இதனால், விஷயங்களை புரிந்து கொள்வதற்கு காலதாமதம் ஏற்படும்.
ஆசிரியர்கள் பொறுமையாக இருந்து, குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும். நம்மிடம் குழந்தைகள் அன்பாக பழகும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். மற்றபடி ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு ஆராய்ச்சியாளர் தான் என்பதில் மாற்று கருத்து இல்லை.
எந்த குழந்தைக்கும் படிப்பு வராது என்று கிடையாது. சில குழந்தைகளுக்கு புரிதல் குறைவாக இருக்கும். இதனால், விஷயங்களை புரிந்து கொள்வதற்கு காலதாமதம் ஏற்படும்
God bless all. Good morning.
ReplyDeletegood morning sir, how can i get this books? any available in sivagangai dist?
ReplyDelete