எஸ்.எம்.எஸ்.,சில் பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின வாழ்த்து. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 16, 2014

எஸ்.எம்.எஸ்.,சில் பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின வாழ்த்து.


லோக்சபா தேர்தலின் போது, தமிழக முதல்வர் ஜெயலலிதா வாக்காளர்களிடம் ஓட்டு கேட்பது போன்ற குரல் பதிவு, மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்பு, பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்கும் படி, மொபைல் போன் மூலம் எஸ்.எம்.எஸ்.,க்கள் அனுப்பும் பிரசாரம் சூடுபிடித்தது.

இந்நிலையில், மொபைல்போனில், பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின வாழ்த்து தெரிவித்து, மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். நாட்டின், 68வது சுதந்திர தினம் நேற்று, நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. நேற்று காலை, பெரும்பாலான மொபைல் போன்களுக்கு, (அகூ - MஐNஐNஆ) என்ற முகவரியில் இருந்து, பிரதமர் நரேந்திர மோடியே அனுப்பியது போன்ற எஸ்.எம்.எஸ்., வந்த வண்ணம் இருந்தன. அதில், 'சுதந்திர தின வாழ்த்துகள். நமது நல்ல செயல்களால் தேசத்தின் பெருமையையும், கவுரவத்தையும் காக்க உறுதி எடுப்போம்' என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி