அனைத்துப் பள்ளிகளிலும் கழிப்பறைகள் கட்டித் தர வேண்டும் - தினமணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 10, 2014

அனைத்துப் பள்ளிகளிலும் கழிப்பறைகள் கட்டித் தர வேண்டும் - தினமணி

இலவசங்களை நிறுத்திவிட்டு அனைத்துப் பள்ளிகளிலும் கழிப்பறைகளை அரசு கட்டித்தர வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் வலியுறுத்தினார்.

இதுகுறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் 7,837 அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் இல்லை என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. பள்ளிகளில் கழிப்பறைகள் இன்றியமையாத தேவையாகும்.

இந்திய விடுதலையின் 68-வது ஆண்டு விழாவைக் கொண்டாட இருக்கும் நேரத்தில் பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் இல்லை என்பது வேதனையான விஷயமாகும்.

இலவசப் பொருகள் வழங்குவதற்காக அரசு செலவிடும் தொகையில் ஒரு சதவீதத்துக்கும் குறைவாக ஒதுக்கியிருந்தால்கூட அனைத்துப் பள்ளிகளிலும் கழிப்பறைகளை கட்டியிருக்க முடியும். தமிழகத்தின் நகரங்களில் 45 சதவீத மக்களும், கிராமங்களில் 73 சதவீத மக்களும் திறந்தவெளிகளை கழிப்பிடமாகப் பயன்படுத்துவதாக 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

எனவே, வீண் இலவசங்களை நிறுத்திவிட்டு, அதற்காகச் செலவிடப்படும் நிதியில் கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன்கூடிய பள்ளிகளைக் கட்டி, தரமான கல்வியை இலவசமாக வழங்க வேண்டும். மக்களுக்கு கழிப்பறைகளை இலவசமாக கட்டித்தர வேண்டும் என்றார் ராமதாஸ்.

10 comments:

  1. God bless us !! Good Sunday morning

    ReplyDelete
  2. ஞாயிறு வணக்கம்

    ReplyDelete
  3. MARUTHUVAR IYYA !!!

    Please Make TamilNadu Government Appoint Teachers first.

    ReplyDelete
  4. kalvi seithikku eniya kaalai vanakkam.

    ReplyDelete
  5. Good morning tet friends rainy sunday

    ReplyDelete
  6. அப்படியே அனைத்து பள்ளிகளிலும் காலியாக உள்ள அணைத்து ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப சொல்லுங்கள் .

    ReplyDelete
  7. அவர் என்னமோ வெளிநாட்டிலிதுந்து வந்நிருக்கிறாறோ????.
    மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்ட பிறகு தான் அவருக்கு தெரிந்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார்?????. வேதனையும் பட்டிருக்கிறார் பாவம்.???????????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி