அங்கீகாரம் இல்லாத மெட்ரிக் பள்ளிகள் அட்டவணை தயாரிக்க அரசு உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 24, 2014

அங்கீகாரம் இல்லாத மெட்ரிக் பள்ளிகள் அட்டவணை தயாரிக்க அரசு உத்தரவு.


அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகள் விபரங்களைசேகரிக்குமாறு மெட்ரிக்குலேஷன் பள்ளி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்கக இயக்குநர் பிச்சை, தொடக்கக் கல்வி மற்றும் பள்ளி கல்வி இயக்கக இயக்குநர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

மெட்ரிக்குலேஷன் மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகளில், குறைந்தபட்ச இடவசதி ஒரே அமைவிடத்தில் ஏற்படுத்தாத பள்ளிகள் சார்பில் இடவசதி சார்ந்த விதியை மாற்றியமைக்க வல்லுனர் குழு அமைக்கப்பட்டு, அக்குழுவின் மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பரிந்துரைகள் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து அங்கீகாரமின்றி செயல் படும் பள்ளிகள் தொடர் பான விபரங்களை, அரசி டம் சமர்பிக்க தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளிகள் தொடர்பான விபரங்களை படிவமாக வழங்க வேண்டும் என அறிவித்துள்ளார்.இந்த படிவத்தில் பள்ளியின் வகை, இன்றைய தேதி வரை அங்கீகாரம் பெற்ற மொத்த பள்ளிகள் எண்ணிக்கை, அங்கீகாரம் பெறாத பள்ளிகள் எண்ணிக்கை, இடப்பற்றாக்குறை காரண மாக அங்கீகாரம் நிலுவை யில் உள்ள பள்ளிகள் எண்ணிக்கை, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் செயல்படுதல் காரணமாக அங்கீகாரம் நிலுவையில் உள்ள பள்ளி கள் போன்ற விபரங்களை சேகரித்து அனுப்ப வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. MEETING IN CHENNAI !!

    ஆசிரியர் காலிப்பணியிட

    ஆய்வுக்கூட்டம் சென்னையில்

    ஆக.,26ல் நடக்கிறது!!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி