TNTET - 10 நாள்களுக்குள் இரண்டு தேர்வுப் பட்டியல்களும் வெளியிடப்படும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 8, 2014

TNTET - 10 நாள்களுக்குள் இரண்டு தேர்வுப் பட்டியல்களும் வெளியிடப்படும்.


பட்டதாரி ஆசிரியர்கள் 13 ஆயிரம் பேரும், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேரும் நியமிக்கப்பட உள்ளனர - 10 நாள்களுக்குள் இரண்டு தேர்வுப் பட்டியல்களும் வெளியிடப்படும்.

10 நாள்களுக்குள் பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டு தேர்வுப் பட்டியல்களும் வெளியிடப்படும் இடைநிலை., பட்டதாரி ஆசிரியர்கள் 13 ஆயிரம் பேரும்முதுநிலைப்பட்டதாரி, ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேரும் நியமிக்கப்பட உள்ளனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள், இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) வெளியிடப்பட்டுள்ளது. இதில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாள் தேர்வு, மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களின் தேர்வுப் பட்டியல் ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், தேர்வுப் பட்டியல் வெளியிடப்படவில்லை. பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான அனைத்துப் பணிகளும் முடிந்தநிலையிலும் தேர்வுப் பட்டியல் வெளியிடுவதில் காலதாமதம் ஏற்படுவதாக தேர்வர்கள் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தினமணி நிருபரிடம் கூறியது: ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான பல்வேறு வழக்குகள் காரணமாக தேர்வுப் பட்டியலை வெளியிடுவதில் தாமதம்ஏற்பட்டது. இப்போது பெரும்பாலான வழக்குகள் நிறைவடைந்த நிலையில் ஆசிரியர்களை நியமிப்பதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் சில பாடங்களில் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களுக்கான ஆசிரியர் நியமனங்கள், வழக்குகள் காரணமாக நிலுவையில் இருந்தன. நீதிமன்ற உத்தரவுப்படி, விடைகள் மீண்டும் மதிப்பீடு செய்யப்பட்டு சான்றிதழ்சரிபார்ப்புக்கு அழைக்கப்படும் நபர்களுக்கான திருத்தப்பட்ட பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுப் பட்டியல், எஞ்சியுள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுப்பட்டியல் ஆகியவை தொடர்பாக பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துள்ளன. எனவே, இந்த இரண்டு தேர்வுப் பட்டியல்களும் ஒரு வாரம் அல்லது 10 நாள்களுக்குள் வெளியிடப்படும்.

22 comments:

  1. Tamil medium MBC chemistry canditate please call me 7708572932

    ReplyDelete
  2. 13000 bt poda vaippu irukka
    govt enna mudiu panna potho

    ReplyDelete
  3. 11000 vacant than announce ment vathu irukku, ithu enna puthusa 13000

    ReplyDelete
  4. இவ்வளவு காலம் .............
    பொறுமையா இருந்த...........நமக்கு...........
    பத்து நாட்கள்.........ஹா ஹா ஹா

    ReplyDelete
  5. Epadi aaaaaaa sollunga birthday vanthudum tet 2013 ku

    ReplyDelete
  6. Paper 1 urdu candidates contact me via Email and I will send the all 47/53 urdu Weightage list. Email: cm_mubarakali@yahoo.co.in

    ReplyDelete
  7. hi friends
    if you are in madurai, please help me to find O.C.P.M Hr.Sec.School ,Madurai. I am from nellai. please give the route& landmarks

    ReplyDelete
    Replies
    1. pls use online search.....

      Delete
    2. i got the address via online, i want the bus route & stop. Any way thanks

      Delete
  8. எத்தனை ஓரிரு நாட்கள் , எத்தனை ஓரிரு வாரங்கள், எத்தனை ஓரிரு பத்து நாட்கள், எத்தனை ஓரிரு மாதங்கள் அப்பப்பா முடியலப்பா இது இப்படியே தொடர்ந்து ஓரிரு வருடங்கள் என ஆகாமல் இருக்கனும் கடவுளே ....

    ReplyDelete
  9. List varathu nu therithu but mamasu varum endru athir parkirathu irruku

    ReplyDelete
  10. hi sir tamil major'la sc mark highest evalonu sollunga plz...

    ReplyDelete
    Replies
    1. எங்க பக்கத்து வீடு அக்கா. 73.45, அவுங்க Friend. 69, 74, 74,

      Delete
  11. 1: மூன்று வாரம்
    2:10 நாட்கள்
    3:1வாரத்தில்
    4:மேனுவலாக பார்ப்பதால் 1வருடத்தில் பைனல் லிஸ்ட் வெளியாகும் என TRB அதிகாரி தெரிவித்தார்.

    ReplyDelete
  12. DELAY !!!


    NOT POSSIBLE SEP 05 !!!
    NOT POSSIBLE SEP 05 !!!
    NOT POSSIBLE SEP 05 !!!


    DELAY !!

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. We don't believe you !!
    I know you very well !!
    Bramanda medai also not possible on sep 05. !!

    ReplyDelete
  15. innum 10 days list vittu appurum ennaiko order vanthu eppa join panni yaaru veetila saavu varathoo theriyala..... nichiyam itharku kalaam bathil sollum....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி