"பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கு செப்., 25ல் தேர்வு துவங்குகிறது.இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் அனுப்பிய சுற்றறிக்கை:
தனித்தேர்வர்கள் ஹால்டிக்கெட்டை ஆக., 25 முதல் தேர்வுத் துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு செப்., 25ல் துவங்க உள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடக்கும். செப்., 25 தமிழ் முதல்தாள்; செப்., 26 தமிழ் இரண்டாம் தாள்; செப்., 27 ஆங்கிலம் முதல்தாள்; செப்., 29 ஆங்கிலம் இரண்டாம் தாள்; செப்., 30 இயற்பியல், பொருளியல்; அக்., 1 கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி; அக்., 4 வணிகவியல், ஹோம்சயின்ஸ், புவியியல்; அக்., 6 வேதியியல், அக்கவுன்டன்சி; அக்., 7 உயிரியியல், வரலாறு, தாவரவியல், பிசினஸ் கணிதம்; அக்., 8 கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், இந்திய கலாசாரம், கம்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, சிறப்பு தமிழ்; அக்., 9 பொலிடிக்கல் சயின்ஸ், புள்ளியியல், நர்சிங். இவ்வாறு தேர்வுகள் நடக்கும் என, தெரிவித்து உள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி