இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வித் துறை புதன்கிழமை பிறப்பித்துள்ளது. பள்ளிக் கல்வித் துறையில் மாவட்டக் கல்வி அலுவலர் அளவிலான மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் என 120-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ளன. இதில் 60-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருந்தன. இந்தப் பணியிடங்களுக்கு பதவி உயர்வு தேர்வுப் பட்டியலில் இருந்த தலைமையாசிரியர்களுக்கு ஆகஸ்ட் இறுதியில் மாவட்டக் கல்வி அலுவலர் பயிற்சியும் வழங்கப்பட்டது.
ஆனால், தலைமையாசிரியர்களுக்குப் பதவி உயர்வு வழங்குவதில் காலதாமதம் ஆவதாகப் புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், பதவி உயர்வுக்கான தேர்வுப் பட்டியலில் இருந்த உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் 49 பேருக்கு பதவி உயர்வு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
பதவி உயர்வு பெற்ற காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை
1. கே.பாஸ்கர் ராவ் அரசு உயர்நிலைப் பள்ளி, முருக்கம்பட்டி, திருவள்ளூர் மாவட்டம் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், சென்னை.
2. எம்.ஜி. கந்தசாமி (அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி, அத்திமாஞ்சேரிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டம்) மாவட்டக் கல்வி அலுவலர், தென் சென்னை.
3. ஆர்.சுரேஷாதேவி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, ஏகனாம்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டம் உதவி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை.
4. தி.மலர்விழி அரசு மேல்நிலைப் பள்ளி, சோமங்கலம், காஞ்சிபுரம் மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், திருவள்ளூர்.
5. பி.ராஜகோபால் அரசு உயர்நிலைப் பள்ளி, மாகாண்யம், காஞ்சிபுரம் மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், வடசென்னை.
6. பி.ஆர்.விஜயலட்சுமி அரசு உயர்நிலைப் பள்ளி, ஏமப்பூர், விழுப்புரம் மாவட்டம் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், காஞ்சிபுரம்.
7. க.நாகராஜ் மாகாண மகளிர் மேல்நிலைப் பள்ளி, எழும்பூர் மாவட்டக் கல்வி அலுவலர், சென்னை (கிழக்கு).
8. இ.அருள்பிரகாசம் அரசு உயர்நிலைப் பள்ளி, சி.அரசூர் அஞ்சல், கடலூர் மாவட்டம் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர், சென்னை.
ஓய்வு பெற்றவருக்கு பதவி உயர்வு:
மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக இருந்த சொ.ரவி என்பவர் கடந்த மார்ச் மாதத்திலேயே பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இந்த நிலையில், பதவி உயர்வுப் பட்டியலில் இருந்து அவர் பெயர் நீக்கப்படாததால் அவருக்கு மாவட்டக் கல்வி அலுவலராக இப்போது பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறை இந்த கவனக் குறைவைத் தவிர்த்திருக்கலாம் என தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
*********************************************************
ReplyDeleteஇடைநிலை ஆசிரியர்களுக்கு
அழைப்புக் கடிதம்
**********************************************************
"""""" கூடுதல் பணியிடங்கள் வேண்டுதல் சார்பாக """"""
SGT
இடம் : சென்னை மெரினா
நாள் : 14.09.2014
நேரம்:காலை 10 மணி
மிக முக்கியமான செய்தி:
கூடுதல் பணியிடங்கள் வேண்டி நாம் செய்யும் செயல்பாடுகள் அனைத்தும் போராட்டம் என்ற பெயரில் அல்லாமல் , மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு விடுக்கும் பணிவான கோரிக்கையாக அமையவேண்டும்.
ஒரு தொலைக்காட்சி நிறுவனம் நமது பணிவான கருத்துக்களை ஒரு வாரகாலத்திற்கு பின்னர் பதிவு செய்துகொள்வதாக அவகாசம் கேட்டுக் கொண்டது. பின்னர் அவர்களின் ஆலோசனைப்படியே நமது கோரிக்கை மற்றும் கருத்துக்களை நாமே Digital Camera மூலமாக படம் பிடித்து குறுந்தகடுகள் மூலமாக மிக முக்கியமான 42 நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டியுள்ளது .மேலும் இத்துடன் 15 பக்க கோரிக்கை மனு இணைத்து அனுப்பி வைக்கப்படும். எனவே குறைந்தது ஒரு நூறு பேராவது ஒரு நாள் மட்டுமே 14.09.2014 அன்று சென்னை வரவேண்டும். வருகின்ற ஒவ்வொருவரும் தங்களது பாதிப்புகளையும், கருத்துக்களையும் மிக முதிர்ச்சியோடு பதிவு செய்ய வேண்டும். இது நிச்சயம் நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு செல்லும்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்யப்படபோகும் செயல்பாடுகளினால் பொதுமக்களுக்கோ, காவல்துறைக்கோ மற்றும் நமது அரசுக்கோ சின்னதொரு இடையூறு கூட ஏற்படா வண்ணம் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
***மிக மிக முக்கியமான விஷயம் ஒன்றினை நீங்கள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
நமது நோக்கம் நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே ..தவிர ,மீடியாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல அல்ல. .***
நமது கோரிக்கை ""கூடுதல் பணியிட அறிவிப்பு"" வேண்டுதல் தொடர்பானது மட்டுமே.
இதுவே கடைசி முயற்சியாகவும், நோக்கம் நிறைவடையும் வகையிலும் அமைதல் வேண்டும்.
வரும் ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் ஒன்றிணைவோம்.
***************************
!! SUNDAY 14.09.2014 !!
!! COME TO CHENNAI !!
!! JOIN AT MERINA !!
!! DEMAND +VACCANCY !!
***************************
WE EXPECT YOUR DEEP INVOLVEMENT & SUPPORT
வரவிரும்புவோர் தொடர்பு கொள்க
95433 91234 Sathyamoorthy
9597239898
09663091690 Sathyajith
பாதிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்காக facebok ல் ஒரு பக்கத்தை திறந்துள்ளோம். பாதிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அல்ல்து Arun Nanban என டைப் செய்து பார்க்கவும்..
Deletehttps://www.facebook.com/pages/பாதிக்கப்பட்ட-பட்டதாரி-ஆசிரியர்கள்/721544717925180
எதிர்க்கட்சிகள் மற்றும் தேர்வு எழுதியவர்களின் கோரிக்கைகளின் படி தான் தமிழக முதல்வர் 5 சதவீத தளர்வினை அறிவித்து தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் தற்போது போராடுவது அந்த தளர்வு மதிப்பெண் மூலம் தேர்ச்சி பெற்று பட்டியலில் இடம் பெற்றவர்களை பட்டியலில் இருந்து வெளியேற்றத்தான் என்பது எதிர்க்கட்சியினருக்கு ஏன் புரியவில்லை??? அவர்களுக்கு புரிய வைப்பதற்க்கு ஏதேனும் முயற்சிகள் செய்ய வேண்டாமா???
ReplyDelete