திக்குத்தெரியாத தொலைவில் பணியிடங்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 6, 2014

திக்குத்தெரியாத தொலைவில் பணியிடங்கள்.


பட்டதாரி ஆசிரியர் நியமன கலந்தாய்வில் நீதிமன்ற தடை யால் பணி நியமனஉத்தரவு வழங்கப்படவில்லை. தொலைதூர இடங்களே காட்டப்பட்ட தால் கைக்குழந்தைகளுடன் வந்திருந்த ஆசிரியைகள் இடங்களை தேர்வு செய்ய முடியாமல் திணறினர்.
தமிழக பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்று தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நியமிக்க கடந்த ஒருவாரமாக ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. முதுநிலை, இடைநிலை ஆசிரியர்கள் கலந்தாய்வு முடிந்து விட்டது.

இடைநிலை ஆசிரியர் பணிக்கு நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஒரு இடம் கூட இல்லை என அறிவித்து கலந்தாய்வு நடந்தது.இது போல் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு நெல்லை, தூத்துக்குடி, குமரி, மதுரை, சென்னை ஆகிய 5 மாவட்டங்களில் காலி இடங்கள் இல்லை என அறிவிக்கப்பட்டது. இதனால் 5 மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் உள்மாவட்ட கலந்தாய்வு நடைபெறவில்லை.இதையடுத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கு நேற்று வெளி மாவட்ட காலி பணியிடங்களுக்கான கலந்தாய்வு அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட் டது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக 400 முதல் 600 ஆசிரியர்கள் வரை பாடவாரியாக பங்கேற்றனர். இவர்களில் பெரும்பாலானோர்பெண்கள் ஆவர். பலர் கைக்குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். இவர்களில் சிலர் கலந்தாய்வு நடந்த வளாகத்தில் பிள்ளைகளை தொட்டில்கட்டி தூங்க வைத்தனர்.

நெல்லை சாப்டர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கலந்தாய்வில் 448 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.பாட வாரியாக சீனியாரிட்டிபடி தனித்தனியாக காலியிடங்கள் காட்டப்பட்டன. இது தொடர்பான பட்டி யல் நோட்டீஸ் போர்டில் ஒட்டப்பட்டது. இதை பார்த்த ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். காரணம்,விழுப்புரம், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை போன்ற தொலைவில் உள்ள வடமாவட்டங்களிலேயே அதிக காலியிடங்கள் இருந் தன. அந்த மாவட்டங்களில் சிறிய நகரம் அல்லது கிராமங்களில் பள்ளிகள் இருந்தன.அந்தப்பகுதியை கண்டுபிடிக்க தமிழ்நாடு வரைபடத்தின் உதவியுடன் ஆசிரியர்கள் முயற்சி செய்தனர். திக்குத்தெரியாத தொலைவிலேயே பணி யிடம் இருப்பதை அறிந்து எந்த இடத்தை தேர்வு செய்வது என தெரியாமல் ஆசிரிய ஆசிரியைகள் திகைப்படைந்தனர். இதனால் ஒவ்வொருவருக் கும் கலந்தாய்வு முடிய அதிக நேரம் பிடித்தது.நேற்று முடியாத பணியிடங்களுக்கான கலந்தாய்வு இன்றும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வையொட்டி சாப்டர் பள்ளி வளாகத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

பணி நிய மனம் வழங்க மதுரை உயர்நீதிமன்றம் தடையாணை பிறப்பித்துள்ளதால் இடங்களை தேர்வு செய்தவர்களிடம் அவர்களது பணியிடத்தை உறுதி செய்து கையொப்பம் பெற்றுஅனுப்பினர். பணி நியமன உத்தரவு பின்னர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.இதனால் உடனே பணியில் சேரலாம் என்ற நம்பிக்கையுடன் வந்த ஆசிரியர்கள்ஏமாற்றத்துடன் சென்றனர்.

44 comments:

  1. Good morning all taechers.........

    ReplyDelete
  2. மரியாதைக்குரிய நண்பர்கள் திரு. மணி
    திரு.விஜயகுமார் சென்னை. திரு.ஸ்ரீ. திரு.ஸ்ரீதர் மறற்றும் தேர்வான நண்பர்கள் அனைவரையும் வருக..ஆதரவு தருக..என அன்புடன் அழைக்கிறோம்
    selectedteachers.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. Why selected teacher come chennai

      Delete
    2. நன்றி Nithya Sri அவர்களே... நமக்கு பாதிப்பில்லாத வரை நாம் எதுவும் செய்ய போவதில்லை ஆனால் நமக்கு இதனால் பாதிப்பென்றால் நமக்காக நம் உரிமைக்காக நாம் தான் குரல் கொடுக்க வேண்டும்..

      ஆனால் அப்போது நாம் அனைவரும் ஒன்றிணைய போதிய கால அவகாசமில்லாமல் போகக்கூடும்.. அப்படி நடந்தால் அது காலம் தாழ்ந்த செயலாக அமையும் அதற்காக இப்போதே நாம் நமக்காக யோசிக்க வேண்டிய தருனம இது...

      Delete
    3. Sri sir itharku udane oru mudivu edukka vendum.......
      12000 teschers sernthu wet &govt atharava amaithiyana muraiyil namsthu karuththai thrivikka vendum...... enna seivathu indra mudivu edukka vendum.....

      Delete
    4. Sri sir itharku udane oru mudivu edukka vendum.......
      12000 teschers sernthu wet &govt atharava amaithiyana muraiyil namsthu karuththai thrivikka vendum...... enna seivathu indra mudivu edukka vendum.....

      Delete
    5. Blog open ஆகவில்லை, நண்பரே....

      Delete
    6. sri sir pls contact 9788855419
      iam paper 1 appointed candidate
      surulivel theni

      Delete
    7. i cant open( selectedteachers.blogspot.in) site?????????/

      Delete
  3. உண்மை தான்...எங்களுக்கு யோசிக்க கூட நேரம் கொடுக்கவில்லை.........எனக்கு விழுப்புரம்....தழுதாழி.....இதை பற்றி தெரிந்தவர்கள் கூறவும்

    ReplyDelete
    Replies
    1. Near mailam. Mailam is near TINDIVANAM.

      Delete
    2. Hi it is near MAILAM. Mailam is near TINDIVANAM.

      Delete
    3. mailam is near to thindivanam, may be 45 minutes from pondicherry city town, mailam murugar temple is very famous... everybody knows..

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. வேலையே முக்கியம் இடம் அல்ல

    ReplyDelete
  8. NITHYA SRI.....MAM
    என்னால் தங்களது வலை தளத்தை open செய்து பார்க்க முடியவில்லை...

    ReplyDelete
  9. counselling was not conducted proberly on05.sep.14.

    ReplyDelete
  10. counselling was not conducted proberly on05.sep.14

    ReplyDelete
  11. அந்தந்த மாவட்டங்களுக்குள் கிடைத்தவர்கள் கூட, அருகில் இருக்கும் இடங்களை தேர்வு செய்ய முடியா நிலையே இருந்தது. குறிப்பிட்ட காலியிடங்கள் கணினியில் காட்டப்படாமல் இருந்ததே இதற்கு காரணம் என்று பலரும் பேசிக்கொண்டனர். மறைக்கப்பட்ட காலி இடங்கள் ஏற்கனவே பணம் பெற்றுக்கொண்டு நிரப்பபட்டதாகவும் பேசிக்கொண்டனர். உண்மை நிலை என்னவென்று தெரியாமல் ஆசிரியர்கள் குழப்பமடைந்தனர்.

    ReplyDelete
    Replies
    1. somebody give money for get above 90 marks in TET exams. So they asked appoinment in TET marks. kindly note this points.

      Delete
    2. It is possible one. I accept it. Somebody may did it. Also some hardworkers include in this group.

      Delete
  12. Money does many. TRB and TN Govt are not exception. To run a vehicle fuel is important, similarly to run a sophisticated life money is important. So people in TRB and TN Govt. Blocked many places for money.

    ReplyDelete
  13. Dharshini mam i am near thazhuthali Govt Hr.Sec School, thazhuthali,mailam tk villupuram D.T good school please contact my mail id: murugavel213@gmail.com

    ReplyDelete
  14. குடியாத்தம் அரசு மேனிலைப்பள்ளி எங்குள்ளது. வரைபடத்தில் நெல்லூர்பேட்டை அரசுப்பள்ளி என்றுள்ளதே அது குடியாத்தம் பள்ளிதானா? நான் சென்னையைச் சேர்ந்தவள் என்பதால் ஒரு விவரமும் தெரியவில்லை. சேலத்து நண்பர்கள் உதவவும். நன்றி....

    ReplyDelete
  15. Same position in cuddalore rajesh , I have a small baby also posted in small village 78 km even though bus facilities also not available.

    ReplyDelete
  16. உண்மையிலே பாதிக்கப்பட்ட சமூகம் தன் கடின உழைப்பால் இந்த தகுதி தேர்வில் அதிக மதிப்பெண் மற்றும் அதிக வெய்டேஜ் எடுத்து கவுன்சிலிங் முடிந்து வேலைக்காக காத்திருக்கும் ஆசிரியர் சமூகமே.......

    இவர்களின் ஒரு நாள் சம்பளத்தை ஈடு செய்ய யாரால் முடியும்?????!!!

    சென்னை உயர் நீதி மன்றம் கொடுக்காத தடையானையை அதன் கிளை நீதிமன்றம் தடையானை பிறப்பித்ததன் மர்மம் என்ன?????


    இதற்க்கு விடிவுகாலம் எப்போது பிறக்கும்?????

    ஆசிரியராகும் வாய்ப்பு வெறும் கனவாகவே இருக்குமா????!!!

    ReplyDelete
    Replies
    1. Definitely we can get job. Amma govt help us. Porattcarargal 200 per. Naam 12000×5=60000

      Delete
  17. Dharshni mam na villupuram dt thazhuthali kum enga oorukum 3km than na help panra call me 9543255318

    ReplyDelete
  18. Dharshni mam na villupuram dt thazhuthali kum enga oorukum 3km than na help panra call me 9543255318

    ReplyDelete
  19. Dharshni mam na villupuram dt thazhuthali kum enga oorukum 3km than na help panra call me 9543255318

    ReplyDelete
  20. Dharshni mam na villupuram dt thazhuthali kum enga oorukum 3km than na help panra call me 9543255318

    ReplyDelete
    Replies
    1. excuse me meganadhan sir,villupuram district il munnur,high school nu select pannunen, dindivanam la irundhu 22 km la iruku.butanga high school illa.middle school dhan iruku..i am confused.adhan oru velai nan select pannunadhu vera munnur oh nu bayama iruku.yaaravathu therinja pls sollunga.

      Delete
    2. excuse me meganadhan sir,villupuram district il munnur,high school nu select pannunen, dindivanam la irundhu 22 km la iruku.butanga high school illa.middle school dhan iruku..i am confused.adhan oru velai nan select pannunadhu vera munnur oh nu bayama iruku.yaaravathu therinja pls sollunga.

      Delete
    3. excuse me meganadhan sir,villupuram district il munnur,high school nu select pannunen, dindivanam la irundhu 22 km la iruku.butanga high school illa.middle school dhan iruku..i am confused.adhan oru velai nan select pannunadhu vera munnur oh nu bayama iruku.yaaravathu therinja pls sollunga.

      Delete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. Only when the complete list vacancy position is given in writing, then the counseling may be taken as correct. Some places are said to be "blocked"

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி