ஆசிரியர் தகுதித் தேர்வு தேவையில்லை - சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தீர்ப்பு!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 3, 2024

ஆசிரியர் தகுதித் தேர்வு தேவையில்லை - சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தீர்ப்பு!!!

 

29.07.2011 முன்னர் பட்டதாரி ஆசிரியர்களாக அரசு உதவிபெறும் சிறுபான்மை அற்ற பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவையில்லை என்றும் மற்றும் ஆண்டு ஊதிய உயர்வு((increment) ஊக்க ஊதிய உயர்வு (incentive)தேர்வுநிலை ஊதிய உயர்வு(selection grade) ஆகியவை உடனே வழங்கிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

TET Judgement Copy - Download here

.

6 comments:

  1. வரவேற்கிறோம்.... மேலும் TET தமிழ் நாட்டில் GO pass ஆனது 16.11.2012.....அன்றைய தேதிக்கு முன்பு வரை நியமனம் செய்யப்பட்ட இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் TET லிருந்து விலக்கு அளிக்க தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.... அண்டை மாநிலங்கள் அனைத்தும் அந்தந்த மாநில அரசுகள் வெளியிட்ட GO தேதிக்கு முன்னர் நியமனம் ஆசிரியர்களுக்கு விலக்கு அளித்துள்ளனர்

    ReplyDelete
  2. சம வேலைக்கு சம ஊதியம் தான் கொடுக்க மனமில்லை... இந்த கருணை கோரிக்கை யை யாவது இந்த அரசு நிறைவேற்ற வேண்டும்

    ReplyDelete
  3. தனியார் பள்ளிகளில் மாடாய் உழைக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பற்றி கவலை பட ஒரு நாதியும் ( நீதிபதி யும்) இல்லை. உயிர் போய்க் கொண்டு இருக்கிறது... உடல் நடமாடிக் கொண்டு இருக்கிறது... அரச பள்ளிகள் வேலை நாட்கள் 180... தனியார் பள்ளி வேலை நாட்கள் கிட்டத்தட்ட 300 மறைமுகமாக செயல்படும் நாட்கள் வேறு... அரசு பள்ளிகள் செயல்படும் நாட்களில் மட்டுமே தனியார் பள்ளிகள் செயல்பட வேண்டும் என்று தானே அங்கீகாரம் வழங்கி இருப்பார்கள்... எவனோ எக்கேடு கெட்டு போனா என்ன என்று தானே திராவிட கட்சிகள் இரண்டு அரசியல்வாதிகளும் ( தனியார் பள்ளி நிர்வாகிகள்) கவலை இல்லாமல் கள்ளா கட்டிக் கொண்டு இருக்கிறார்கள்... எங்களைப் போன்ற அடிமைகளுக்கு அரசு ஆசிரியர் போன்ற சூழ்நிலை கிடைத்திடுமா?

    ReplyDelete
    Replies
    1. ஐயா, ஒரு விஷயத்த மறந்துட்டீங்க. ஆளும் கட்சி எதிர்கட்சியில் இருக்க அரசியல் வாதிங்க, அவங்க பினாமிங்க தான் தனியார் பள்ளியே நடத்துறாங்க. அப்புறம் சட்டம் எப்படி போடுவாங்க.

      Delete
    2. மிகவும் கொடுமையான செயல் கல்வி சந்தைமயமாக மாறிவிட்டது இதில் அதில் அதிகம் படித்த ஆசிரியர்கள் பாவம்

      Delete
  4. Unknown நண்பரே... கவலை வேண்டாம்... நிலைமை மாறும்.... தொடர்ந்து கற்று கொண்டே இருங்கள்.... நீங்கள் ஒரு அரசு பள்ளி ஆசிரியர் ஆக வாழ்த்துக்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி