வெயிட்டேஜ் முறைக்கு எதிர்ப்பு அடையாள அட்டை திருப்பி கொடுத்து பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம் - தினகரன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 6, 2014

வெயிட்டேஜ் முறைக்கு எதிர்ப்பு அடையாள அட்டை திருப்பி கொடுத்து பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம் - தினகரன்

வெயிட்டேஜ் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டதாரி ஆசிரியர்கள் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை மற்றும் சான்றிதழ் களை மாநில தேர்தல் ஆணையத்தில் ஒப்படைக்க முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.




ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும்.
வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று காலை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பாக 200க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், ஆசிரியர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை மற் றும் சான்றிதழ்களை அந்த அலுவலகத்தில் ஒப்படை க்க முற்பட்டனர். ஆனால், அவர்களை போலீசார் உள்ளே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்.
இதனை தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர்கள் கோயம்பேடு விளையாட்டு நகரம் எதிரில் சாலையோரம் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது சேலத்தை சேர்ந்த பட்டதாரி ஆசிரியை சசிகலா(35), என்பவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.

தமிழகத்தில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் இடை நிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு முடிவெடுத்தது. அதன்படி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர்களுக்கான தகுதி தேர்வு அனுப்பப்பட்டது. அதில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோ�ர் எழுதியுள்ளனர். அவர்களில் 17,500 பட்டதாரி ஆசிரியர்களும், 11,000 இடை நிலை ஆசிரியர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பின்னர் இட ஒதுக்கீடு அடிப்படையில் 5 சதவிகித மதிப்பெண்கள் தளர்த்தப்பட்டது. அதனால் கூடுதலாக 58,000 பேர் தகுதி பெற்றனர்.
பின்னர் அரசு தகுதி தேர்வில் 60 சதவிகித மதிப்பெண்களும், மற்றும் ஆசிரியர் பயிற்சி பெற்ற மதிப்பெண்கள் 40 சதவிகிதமும், அடங்கிய வெயிட்டேஜ் முறையை அரசு அறிவித்தது.

இதனால் சில வருடங்களுக்கு முன் பயின்றவர்கள் வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்படுவதாக கூறி வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னர், அவர்கள் கோயம்பேடில் 100 அடி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆண்களும், பெண்களும் ஆக அனைவரும் கைது செய்யப்பட்டு, நெற்குன்றத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
மாநில தேர்தல் ஆணையம் முற்றுகை

ஆர்ப்பாட்டத்தின்போது மயங்கி விழுந்த பெண் முகத்தில் தண்ணீர் தெளிக்கின்றனர்.

9 comments:

  1. MY HUMBLE NAMASKARAMS TO THE FEETS TO ALL PROTESTORS. CONTINUE.. CONTINE ... CONTINUE... CONTINUE... CONTINUE... CONTINUE... CONTINUE... CONTINUE... CONTINUE ... TILL OUR GOALS ARE ACHIEVED

    ReplyDelete
  2. டி.என்.பி.எஷ்.ஷி. போலவே டி.ஈ.டி. மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை வெளியிடப்பட்டு தேவையான அளவிற்கு மட்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு பணியமர்த்தப்பட வேண்டும். இது மட்டுமே நல்ல தீர்வாக இருக்கும்

    ReplyDelete
  3. பென் என்றால் பேயும் மனம் இறங்கும். மயங்கி விழுந்து கிடக்கும்இந்த ஆசிரியை பார்த்தபிறக்காவது அம்மாவுக்கு மனம் இறங்கவேண்டும்.ஆராய்ச்சி மணி அடித்து நீதி கேட்ட பசுவிற்க்கு தன் மகனையே தேர் ஏற்றி கொன்று நீதி அளித்த அரசன் வாழ்ந்த இந்த நாட்டில் நம் முதல்வரும் நிச்சயம் போராடும் ஆசிரியர்களுக்கு நீதி வழங்குவார் என்று எதிர் பார்ப்போம்.நீதி வழுவிய நெடுஞ்செழியனாக அம்மா மாறமாட்டார் என்றும் நம்புவோம்.

    ReplyDelete
  4. Looking at the fainted teacher's face tears came in my eyes. We suffered while studying. Now we are suffering to get our own rights.. Truth never fails

    ReplyDelete
  5. amma neengal ninaithal yedhuvum nadakum we believe pls save them

    ReplyDelete
  6. One sort of teachers are fighting for their lives. Another sort of teachers are getting awards.
    What a democratic country it is!

    ReplyDelete
  7. are read about the NCTE rule? Every teacher should be read about NCTE (TET) rule and then againt the weightage system

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி