வெயிட்டேஜ் விவகாரத்தில் போராடும் பட்டதாரி ஆசிரியர்களை முதல்வர் அழைத்துப் பேச வேண்டும் - தினகரன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 3, 2014

வெயிட்டேஜ் விவகாரத்தில் போராடும் பட்டதாரி ஆசிரியர்களை முதல்வர் அழைத்துப் பேச வேண்டும் - தினகரன்

போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்களுடன் முதல்வர் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தற்போது பட்டதாரி ஆசிரியர்கள் 10 நாட்களாகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றார்கள். நேற்று கூட ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக் கோரி பட்டதாரி ஆசிரியர்கள் 4 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம், அனைத்து நாளேடுகளிலும் பெரிதாக வெளிவந்து என்னுள்ளே பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.


தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் 60 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அதில் சுமார் 45 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு சான்று சரிபார்ப்பும் நடத்தப்பட்டாகி விட்டது. கடந்த மாதம் பட்டியல் வெளியிட்டார்கள். அதன்படி 14,700 பேர் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றதாகக் கூறப்பட்டது.














ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில், கல்லூரிகளில் பயிற்சி பெற்று தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணிக்கான தகுதிச் சான்றை தமிழக அரசு தான் தந்துள்ளது. தமிழக அரசு இவ்வாறு சான்றிதழ் கொடுத்தவர்களுக்கு, மீண்டும் ஒரு தகுதித் தேர்வை நடத்துவது என்பது ஏன் என்று தான் புரியவில்லை.

அதிலும் வெயிட்டேஜ் என்ற பெயரில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் 12ம் வகுப்பிலும், பயிற்சிப் பள்ளித் தேர்விலும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் 12ம் வகுப்பிலும், கல்லூரித் தேர்விலும், பயிற்சிக் கல்லூரித் தேர்விலும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், வழங்கப்படுகிற மதிப்பெண்களை வெயிட்டேஜ் மதிப்பெண்களாகத் தந்து, தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களோடு கூட்டி வரும் மொத்த மதிப்பெண்களின் அடிப்படையிலும் பணி நியமனம் தற்போது நடைபெறுகிறது.

இந்த வெயிட்டேஜ் மதிப்பெண்ணை கூடுதலாக கிராமப்புறங்களில் வாழ்வோர், தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், குடும்பத்தில் முதல் பட்டதாரிகள் ஆகியோரில் 90 சதவீதம் பேர் பெறவே முடியாது என்பதையும் அதற்கான சூழ்நிலைகளையும் அனைவரும் அறிவர்.

வெயிட்டேஜ் மதிப்பெண்கள் முறையால், 1988&2000 வரை படித்தவர்கள் மிகவும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றன. இதற்குக் காரணம் அப்போதைய காலக் கட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மட்டும் படித்து 600 முதல் 800 மதிப்பெண்கள் வரை மட்டுமே பெற முடிந்தது. ஆனால் தற்போது 2000ம் ஆண்டுக்குப் பிறகு ஒரே பள்ளியில் 100க்கு மேற்பட்டோர் 1000 மதிப்பெண்களுக்கு மேல் பெறக் கூடிய சூழ்நிலை உருவாகியிருக்கின்றது.
பல்வேறு பல்கலைக் கழகங்களில், பல்வேறு பாடத் திட்டங்களில் படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறவும் வாய்ப் புகள் பெருகியிருக்கின்றன. இந்த வெயிட்டேஜ் மதிப்பெண் காரணமாக 30 வயதுக்கு மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து முடிந்த பின்னரும் வேலை கிடைக்காத சூழ்நிலை உருவாகியிருக் கிறது.

அதனால் தான் இந்த வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக் கோரி கடந்த சில நாட்களாகத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் ஆகஸ்ட் 21ம் தேதி உண்ணாவிரதத்தை நடத்தி முடித்து, முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து முறையிட முயற்சித்து, கைதாகி பின்னர் விடுதலையானார்கள். அவர்களுடைய கோரிக்கை ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும்.

வெயிட்டேஜ் முறையை முழுவதும் ரத்து செய்ய வேண்டும் என்பது தான். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நேற்று நடத்திய பேரணியில் கலந்து கொண்ட 4 பேர் குளிர்பானத்தில் பூச்சிக் கொல்லி மருந்தைக் கலந்து குடித்து, அவர்களைக் காவல் துறை யினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளது.

அவர்களுடைய போராட்டம் பற்றி அரசாங்கம் இதுவரை அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை. அனைத்துப் பிரச்னைகளிலும் அலட்சியம் காட்டுவது போல இல்லாமல், ஆசிரியர் பிரச்னை தலையானது என்பதை மனதில் கொண்டு, தமிழக அரசு, குறிப்பாக முதல்வரோ அல்லது அந்தத் துறை அமைச்சர் என்று இருப்பவரோ போராட்டம் நடத்தும் ஆசிரியர்களின் பிரதிநிதிகளை உடனடியாக அழைத்துப் பேசி, சுமூகமாக ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

கருணாநிதி வலியுறுத்தல்

41 comments:

  1. all the best my dear friends do not forget our kalviseidhi

    ReplyDelete
    Replies
    1. ----------------------—-
      முக்கிய செய்தி
      -------------------------

      வரும் 5/9/2014 அன்று TRB யிடம் சான்றிதழ் திரும்ப கொடுக்கும் போராட்டம் மிகப்பெரிய அளவில் நடைபெரும்.

      அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டுகிறோம். நம்மை சுயநலவாதிகள் என்று ஏளனம் செய்கிறார்கள். நாங்கள் சுயநலவாதிகள் இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

      நமது போராட்டம் தகுதிதேர்வு எழுதிய 4 லட்சம் பேருடைய உரிமை போராட்டம் என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

      இந்த வெயிட்டேஜ் முறையை மற்றவேண்டும். இல்லையென்றால் இது நமது எதிர்காலத்தையும் பாதிக்கும்.

      வாருங்கள் நண்பர்களே சென்னைக்கு வரும் வெள்ளிகிழமை ஆசிரியர் தினத்தன்று. அன்று நமது வெற்றி நிச்சயம்.

      நெல்லை 9543079848
      கருர் 9894174462
      கருர் 9597477975
      நாமக்கல் 9003435097
      கோவை 9843311339
      தி.மலை 7305383952
      சேலம் 9442799974
      வேலூர் 9944358034
      திருச்சி 9003540800



      வாழ்க வளமுடன்.

      Delete
    2. TET passed candidates seniority wise posting is RIGHT WAY.

      Delete
    3. Dear Sir/Madam, I got 96 mark in english Major, my wtg 63.79, but not selected, I am feel now very bad and i have decided I am not living in tamilnadu in future, because the government no response for our TET-2013 for loosing job people, so i will change the native and family also near by karnataka state.....

      So My dear friends this tamilnadu government no giving security for our teacher life....

      Example: Last 15 days they are fighting with government till now no response.......

      Delete
    4. இந்த weightage முறை முற்றிலும் தவறானது botany இல் low weightage ஆதாவது 50 cut off க்கு வேலை.

      Delete
  2. T.N.P.SC போன்றத் தேர்வுகளை லச்சக்கணக்கானவர்கள் எளுதுகின்றார்கள்,இவர்களின் தேர்வானது போட்டித்தேர்வில் யார் அதிக மதிப்பெண் எடுத்துள்ளார்கலோ அவர்களில் தொடங்கி பிறகு படிப்படியாகக்குறையும்.ஆனால் T.R.B? தேவையில்லாமல் குழப்பத்தை உண்டாக்கியது.போராடுபவர்களின் நியாயத்தை உணர வேண்டும். P.G. T.R.B யில் கூட இம்முறை உள்ளபோது T.N.TETக்கு ஒரு நியாயமா?

    ReplyDelete
  3. my home town is dharmapuri bt i want to wrk in coimbatore. english major. pls help me by updating vacancy positions. if i attend tmrw's counselling which places may i get?

    ReplyDelete
  4. Tnpsc,pgtrb pondra thervugal potti thervugal, tet enbathu thaguthi thervu than, potti theru alla..

    ReplyDelete
    Replies
    1. Aanaal potti thervai vida kadumaiyagavu sikkalaagavum irrukkum thaguthi thervirkkum athey muraiyathaan pinpattra vendum

      Delete
    2. Potti thervai pol thaguthi thervai pinpatra mudiyathu mam..

      Delete
    3. இந்த weightage முறை முற்றிலும் தவறானது botany இல் low weightage ஆதாவது 50 cut off க்கு வேலை.

      Delete
    4. 2013 - 2014 vaccancy list where

      Delete
  5. ----------------------—-
    முக்கிய செய்தி
    -------------------------

    வரும் 5/9/2014 அன்று TRB யிடம் சான்றிதழ் திரும்ப கொடுக்கும் போராட்டம் மிகப்பெரிய அளவில் நடைபெரும்.

    அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டுகிறோம். நம்மை சுயநலவாதிகள் என்று ஏளனம் செய்கிறார்கள். நாங்கள் சுயநலவாதிகள் இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

    நமது போராட்டம் தகுதிதேர்வு எழுதிய 4 லட்சம் பேருடைய உரிமை போராட்டம் என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

    இந்த வெயிட்டேஜ் முறையை மற்றவேண்டும். இல்லையென்றால் இது நமது எதிர்காலத்தையும் பாதிக்கும்.

    வாருங்கள் நண்பர்களே சென்னைக்கு வரும் வெள்ளிகிழமை ஆசிரியர் தினத்தன்று. அன்று நமது வெற்றி நிச்சயம்.

    மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.

    நெல்லை 9543079848
    கருர் 9894174462
    கருர் 9597477975
    நாமக்கல் 9003435097
    கோவை 9843311339
    தி.மலை 7305383952
    சேலம் 9442799974
    வேலூர் 9944358034
    திருச்சி 9003540800

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. 2013 - 2014 vaccancy list where

      Delete
    2. Mr. saravanan all the best. surely honest and hardwork will win. don't leave this matter hereitself. If here not possible go to supreme court.
      Otherwise wait till kalainger will come. He will come and surely give post to this candidates. God bless u candidates. I pray god to get job now itself. God is here no problem. He also given some message.

      Delete
  6. All the best friends.... God also leave us alone(above 90) without showing mercy.... I am going for counseling without joy....

    ReplyDelete
  7. நண்பர்களே இன்றைய ஆர்ப்பாட்டம் சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ வளாகத்தில் வாருங்கள் உரிமைகளை வென்றெடுப்போம்....

    Contact : Rajalingam Puliangudi
    95430 79848

    ReplyDelete
    Replies
    1. Sir good morning and all the best manam thalaramal porada kadavulai venduhiren vetri nichchayam

      Delete
    2. ராஜலிங்கம் நண்பரே இன்று நெல்லை அதிவிரைவு வண்டியில் நானும் என் மனைவியும் கிளம்புகின்றோம். தங்கள் முயற்சிக்கு நன்றி நண்பரே

      Delete
    3. rajalingam ungal porattam vetri adaiya valthukkal...

      Delete
    4. porattam vetri pera kadavulai vendikolgiren

      Delete
  8. Hello Friends those who interesting in managment job around chennai please mail me jegansaran@gmail.com.

    urgentwanted PG ENGLISH,PG ECONOMICS,PG COMMERCE,

    BT SCIENCE 3(SC CANDITATET), 1 BT TAMIL,

    TELUNGU MEDIUM WITH TET 1 SCIENCE,1 HISTRY,1PG CHEMISTRY

    THOSE WHO INTEREST TO WILLING PLEASE MAIL ME

    ReplyDelete
  9. thanks to KALAIGNAR and KALVISEITHI for felt our sadness

    ReplyDelete
  10. AMMA inum mounam kaapadu yeno???? Thamgal mel migunda mariadaium nambikaium kondu ullom. Inda poratathiruku sumugamana mudivinai edungal. Pls fill current year vacancies also. In that so many candidates wil get job and tat wl b vry useful. Help and save all candidates.

    ReplyDelete
    Replies
    1. Kantippaga Amma action eduppanga .... teacher neenga english major

      Delete
  11. நண்பர்களே தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடி வெல்லும் என்பது இயற்கை.


    நண்பர்களே தங்களின் போராட்டம் கண்டிப்பாக வெற்றி பெறும்

    ReplyDelete
  12. mattram nigalnthal marupadium final list counsilng ?

    ReplyDelete
  13. PORATTA KALATHIL ULLA NANBARKALAE...THANGALUKU PORULATHARA UTHAVI THEVAIPATTAL....ORU 5 NABARKALIN BANK DETAILS ,COMMENT LA THERIVIKAVUM...OVVORUVARUM 100 RUBAI 100 PER UTHAVI SEITHAL KUDA THANGALUKU SIRITHALAVATHU UTHAVIKARAMAGA IRUKUM...NANRI....

    ReplyDelete
  14. PORATTA KALATHIL ULLA NANBARKALAE...THANGALUKU PORULATHARA UTHAVI THEVAIPATTAL....ORU 5 NABARKALIN BANK DETAILS ,COMMENT LA THERIVIKAVUM...OVVORUVARUM 100 RUBAI 100 PER UTHAVI SEITHAL KUDA THANGALUKU SIRITHALAVATHU UTHAVIKARAMAGA IRUKUM...NANRI....

    ReplyDelete
    Replies
    1. சரியான யோசனை .நானும் உதவிசெய்ய காத்திருக்கிறேன்

      Delete
    2. 2013 - 2014 vaccancy list where

      Delete
  15. Selvanayag sir s m English major and teacher

    ReplyDelete
    Replies
    1. i also english major and ur weightage mark...do u working

      Delete
  16. hi any one say p1 second list varuma bckku adithiravidar school la vacancy kuduppangkala 75.17 bc p1

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி