பேராசிரியர் காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்ப அண்ணா பல்கலை. முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 11, 2014

பேராசிரியர் காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்ப அண்ணா பல்கலை. முடிவு

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் உறுப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள 400-க்கும் அதிகமான பேராசிரியர், உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்ப பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

பணி நியமனத்துக்கு அரசின் நிதிக் குழு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, அதற்கான பணிகளை பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது. இதற்கான அறிவிப்பு செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

இதுகுறித்து, அண்ணா பல்கலைக்கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியது: பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் பேராசிரியர் பணியிடங்கள் ஏராளமாகக் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்ப அரசின் நிதிக் குழு அண்மையில் அனுமதி அளித்தது.

இதனைத் தொடர்ந்து, எந்தெந்தக் கல்லூரிகளில் எவ்வளவு காலிப் பணியிடங்கள் உள்ளன என்பதைக் கண்டறியும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தக் கல்லூரிகளில் 400-க்கும் மேற்பட்ட பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் என்று தெரிகிறது.

காலிப் பணியிடங்கள் கணக்கெடுக்கப்பட்டவுடன் பேராசிரியர் நேரடி நியமனத்துக்கான அறிவிப்பு செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்றார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி