டி.இ.டி., தேர்வை ரத்து செய்ய வேண்டும் தபாலில் வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 11, 2014

டி.இ.டி., தேர்வை ரத்து செய்ய வேண்டும் தபாலில் வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு.


"ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்து, பழைய முறையை பின்பற்றவேண்டும். இல்லையென்றால் குண்டு வெடிக்கும்' என, மர்ம நபர் எழுதிய கடிதம், கொல்லிமலை அரசு பள்ளி தலைமையாசிரியருக்கு வந்துள்ளது.
இச்சம்பவம் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வாழவந்திநாட்டில், அரசு பழங்குடியினர்உறைவிட மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, சுற்று வட்டாரத்தை சேர்ந்த மலைவாழ் இனத்தை சேர்ந்த, 515க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளியின் தலைமையாசிரியராக, கலைவாணி உள்ளார். நேற்று முன்தினம் மதியம், 2 மணிக்கு போஸ்ட்மேன், ஸ்டாம்ப் ஒட்டாத தபால் ஒன்றை, பள்ளி தலைமையாசிரியர் கலைவாணியிடம் கொடுத்துச் சென்றார். அந்த கவரை பிரித்து படித்த அவர், கடும் அதிர்ச்சி அடைந்தார்.

கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

ஆசிரியர் தகுதித்தேர்வை (டிஇடி) ரத்து செய்து விட்டு, பழைய முறையை பின்பற்ற வேண்டும். இல்லையென்றால், பள்ளி கட்டிடம், ஓட்டு கேட்க வரும் அரசியல்வாதிகள், சேந்தமங்கலம் தொகுதி அனைத்து கட்சி, எம்.எல்.ஏ.,க்கள், வீடுகளில் வெடிகுண்டு வெடிக்கும். சேந்தமங்கமலம் தீவிரவாதமா? ஆசிரியர் என்றால், தி.மு.க., அரசியல் என்றால் அ.தி.மு.க., டெட் தேர்வில் எஸ்.டி., எத்தனை பேர் வெற்றி பெற்றுள்ளனர். எஸ்.டி.,க்கென ஒரு சீட் கூட இல்லை. எனவே, பழைய தேர்வுமுறையை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் எழுதப்பட்டுள்ளது. கையெழுத்து சரியில்லாமலும், அதிக எழுத்துப் பிழையுடனும் மூன்று பக்கத்தில் எழுதப்பட்டுள்ளது.

இது குறித்து, பள்ளி தலைமையாசிரியர் கலைவாணி, வாழவந்திநாடு போலீஸில் புகார் செய்தார். வாழவந்திநாடு போலீஸார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம், நாமக்கல் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

12 comments:

  1. ============
    EPPOTHU ?
    ============

    AMAITHI !

    VALAM !

    VALARCHI !

    ReplyDelete
    Replies
    1. இடைநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு. ...

      **WE NEED ADDITIONAL VACCANCY ONLY**

      75,74 weightage எடுத்தும் பணி வாய்ப்பு கிடைக்காத இடைநிலை ஆசிரியர்களே. ...
      உங்களது

      1.Tet reg number
      2. +2 mark
      3. Dted marks
      4. Tet mark
      5. Weightage.

      உடனடியாக சுருக்கமாக message செய்யவும்
      95433 91234
      09663091690

      ஒரு வாரத்திற்குள் நாம் மீண்டும் ஒருமுறை "ஓரே நாள்" மட்டும் சென்னை வரவேண்டும்.
      இன்று முதல் அனைவருடைய சிறுபங்களிப்பையாவது வெளிப்படுத்துங்கள்.
      முயற்சியே வெற்றிக்கு வழி.

      Delete
  2. Madurai distric selected candidate urgent call me urgent only madurai candidate please 8438426043.

    ReplyDelete
  3. இந்த வேலையை கூட செய்விங்களா... இது TET ஆ? இல்ல dead ஆ?

    ReplyDelete
  4. ===========
    இறைவா !!
    ===========

    17-08-2013 / 18-08-2013

    (EXAM DATES)

    QUESTION (1).
    ============

    WHY WERE THEY SILENT ON 17/18

    AGUST 2013?

    QUESTION (2).
    ============

    WHY THERE WAS NO AGITATION

    BEFORE 17/08/2013 AND 18/08/2013 ?

    அப்போது அமைதியாக இருந்து !!

    இப்போது ?

    1). எதிர்கட்சி

    2). போராட்டக்காரர்கள்

    3). SENIORS.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. 90 மார்க எடுத்த மூத்த பட்டதாரி நிலை
    படுதோல்வி

    ReplyDelete
  7. Tet yenpathu sirandha aasiriyarai uruvakuvathu'. Thiviravathiyai alla. Thiravatham thirvai tharadhu.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி