"எண்ணும் எழுத்தும் கண்ணென தகும்'' : -இன்று உலக எழுத்தறிவு தினம்ஒருவர் சமூக, பொருளாதார வளர்ச்சி பெறுவதற்கு எழுத்தறிவு அவசியம். ஆண்டு முழுவதும் கற்றுக்கொள்வதற்கு எழுத்தறிவு அடிப்படை.
இது சமூகத்தில் அமைதி, வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏற்பட உதவுகிறது. உலகில் இனம், மொழி, வயது, சமூக பாகுபாடின்றி அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு செப்., 8ம் தேதி உலக எழுத்தறிவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. "எழுத்தறிவு மற்றும் நிலையான வளர்ச்சி' என்பது இந்தாண்டு மையக்கருத்து.ஒரு மொழியில், புரிதலுடன் சரியாக பேசவும், எழுதவும் தெரிந்தவரே எழுத்தறிவு பெற்றவர். எழுத்தறிவுபெற்றவராக கருத, குறிப்பிட்ட வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் என எந்த அளவும் தீர்மானிக்கப்படவில்லை. இது ஒருவரின் அடிப்படை உரிமை. எழுத்தறிவு பெற்றால் தான், ஜனநாயகத்தில் உரிமைகளை நிலை நாட்ட முடியும். எழுத்தறிவு பெறுவது "ஒருவரின் கடமை; கட்டாயம்'.
என்ன பயன் :
எழுத்தறிவு, அடிப்படைக் கல்வியின் இருதயம். எழுத்தறிவு பெறுவதன் மூலம் வறுமை, குழந்தை திருமணம்,மக்கள் தொகை பெருக்கம், வேலைவாய்ப்பின்மை, பாலின வித்தியாசம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை தடுக்க முடியும். எழுத்தறிவு மூலம், அமைதி மற்றும் ஜனநாயகத்தை நிலை நிறுத்த முடியும். எழுத்தறிவு பெற்ற பெற்றோர், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயங்கமாட்டர். உலகளவில் 15 வயதுக்குட்பட்டோர் எண்ணிக்கையில், 77 கோடியே 40 லட்சம் பேரும், 15 - 24 வயதுக்குட்பட்டவர்களில் 12 கோடியே 30 லட்சம் பேரும் எழுத்தறிவு அற்றவர்கள். எழுத்தறிவு பெறாதவர்களில் மூன்றில் 2 பங்கு பேர் பெண்கள். பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க அனைத்து நாடுகளும் முன்வர வேண்டும்.
இந்தியாவின் நிலை:
2011ன் படி, இந்தியாவின் எழுத்தறிவு, 74 சதவீதமாக உள்ளது. இதில் ஆண்கள் 82.14 சதவீதம், பெண்கள் 65.46 சதவீதம். இது 2001 கணக்கெடுப்பை விட 9.2 சதவீதம் அதிகம். தமிழக எழுத்தறிவு சதவீதம், 80.33 சதவீதமாக உள்ளது. இது 2001ஐ விட 6.9சதவீதம் அதிகம். 100 சதவீத எழுத்தறிவு என்பதை நோக்கி முன்னேற வேண்டியது காலத்தின் கட்டாயம்.
திரிபுரா முதலிடம் :எழுத்தறிவு சதவீதத்தில் நாட்டிலேயே முதலிடத்தில் திரிபுரா உள்ளது. இப்பட்டியலில் தமிழகம் (80.33) 14வது இடத்தில் உள்ளது. பீகார் (63.82) கடைசி இடத்தில் உள்ளது.
மாநிலம் சதவீதம்
1. திரிபுரா94.65
2. கேரளா93.91
3. லட்சத்தீவு92.28
4. மிசோரம்91.58
5. கோவா87.40
செய்தி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ReplyDeletehttp://unselectedcandidates.blogspot.in/
என்ற முகவரி தேர்வு பெறாத நண்பர்களின் கூட்டமைப்புக்காக தொடங்கப்பட்டுள்ளது எனவே உடனே அங்கு தொடர்பு கொள்க
கல்வி செய்தி அட்மின் அவர்களுக்கு
ReplyDeleteதயவு செய்து கருத்துக்களை பதிவிட அனுமதிக்குமாறு மிக பனிவுடன் கேட்டுக்கொள்கிறேன் மேலும் தற்போது தேர்வு பெற்றவர்கள் தேர்வு பெறாதவர்கள் என இரு பிரிவாக பிரிந்து தனித்தனியாக வலைதளம் தொடங்கி உள்ளனர் இதனால் கல்வி செய்தி இருந்து பிரிந்து சொல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவே இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்
தகுதி தேர்வுக்கு பிறகு மீண்டும் ஒரு தேர்வை நடத்த கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
ReplyDeleteதிருவண்ணாமலையை சேர்ந்த விஜயராஜ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், ’’தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள சுமார் 2 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு தமிழக அரசு தகுதி தேர்வை நடத்தியது. இந்த தேர்வில் 6 லட்சத்து 73 ஆயிரம் பேர் கலந்து கொண்டு தகுதி தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவு கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது.
இந்த தகுதி தேர்வு முடிந்த பிறகு மத்திய அரசின் தேசிய கல்வி கவுன்சில் விதிமுறைப்படி மீண்டும் ஒரு தேர்வு நடத்த வேண்டும். ஆனால் தகுதி தேர்வு மதிப்பெண்ணை வைத்து அரசு புதிய ஆசிரியர்களை நியமிக்கிறது. இது தவறானது. நான் கணித பாடத்தில் தகுதி தேர்வு எழுதி, அதிக மதிப்பெண் பெற்றுள் ளேன். இதில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு எல்லாம் வேலை கொடுத்துவிடுவார்கள்.
இது தவிர சான்றிதழ் சரிபார்த்து உடனே பணி வழங் குவது தவறானது. எனவே தகுதி தேர்வு எழுதி வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு அவர்கள் பட்டபடிப்பு மதிப் பெண்ணை வைத்து அல்லது தனி தேர்வு வைத்து அதன் பிறகு ஆசிரியர்களை நியமிக்க வேண் டும். இவ் வாறு அவர் வழக்கில் கூறியுள்ளார்.
இதனால் தான்,, weidage முரை வந்தது sir சொ posting conform,,
Deleteநீதிமன்றம் தகவல் சொல்லுங்க கல்விசெய்தி அட்மின் sir
ReplyDelete-------
ReplyDeleteஇன்றைய குழந்தை
ReplyDeleteநாளைய உலகம்.......
ஒரு குழந்தையை குறை சொல்லி
வளர்த்தாள்....வெறுப்பைக் கற்றுக்கொள்ளும்.....
பாராட்டி வளர்த்தாள் சுயமதிப்பைக் கற்றுக்கொள்ளும்.....
பகைமையைச் சொல்லி வளர்த்தாள் சண்டையிடும் மனப்பான்மையைக்
கற்றுக் கொள்ளும்....
சகிப்புத்தன்மையுடன் வளர்த்தாள்
பொறுமையைக்
கற்றுக் கொள்ளும்....
ஏளனம் செய்து வளர்த்தாள் சூச்சத்தைக் கற்றுக்
கொள்ளும்.........
ஊக்கவித்து வளர்த்தாள்
தன்னம்பிக்கையை
கற்றுக்கொள்ளும்....
புண்படுத்தி வளர்த்தால
குற்ற உணர்வைக்
கற்றுக் கொள்ளும்....
அங்கீகாரத்துடன்
வளர்த்தால
தன்னை நேசிக்க
கற்றுக் கொள்ளும்.....
If trb shoud nt released minority selection list with in two days otherwise we will go for high court.
ReplyDeleteஅட போங்கப
ReplyDelete