இடைநிலை ஆசிரியரின் தற்போதைய ஊதிய வழக்கின் நிலை -SSTA - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 14, 2014

இடைநிலை ஆசிரியரின் தற்போதைய ஊதிய வழக்கின் நிலை -SSTA


நேற்று (12.09.2014) சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு எண் 33399/2013 விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ஊதியம் பெறுவதற்கான வழிகாட்டுதல்(DIRECTION) பெற்றுள்ளதாக தற்போதுவரை விசாரித்த தகவல்
தெரிவிக்கின்றன.
அரசுக்கு இந்த வழிகாட்டுதல் குறித்து எந்தஒரு அறிவிப்பும் இல்லை.
இன்று சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் நீதிமன்றம் மற்றும் அரசு  தரப்பிலும் முழுமையான தகவல் பெற இயலவில்லை. நேற்று வழக்கில் பெற்ற வழிகாட்டுதலை(DIRECTION) அரசு  நடைமுறைபடுத்தாவிட்டால்  மீண்டும் இதே ஒருநபர் நீதிமன்றத்தில் விசாரனைக்கு வரும் என தெரிகிறது. இந்த வழிகாட்டுதலை(DIRECTION) அரசு  அமுல்படுத்தாவிட்டால் இருநீதிபதி அமர்விற்கு கொண்டு செல்ல முடியாது என்றும்  தெரிகிறது. அரசு தரப்பிலும் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதும் இதுவரை தெரியவில்லை. அரசு தரப்பில் இடைநிலை ஆசிரியரின் ஊதியம் 9300+4200 தர உயர்நீதிமன்றத்தில் ஒப்புகொண்டதாகவும் தெரியவில்லை. 8 வாரங்களுக்குள் அரசு  இந்த வழிகாட்டுதலை(DIRECTION) அமுல்படுத்தாவிட்டாலோ அல்லது ஒப்புக்கொள்ளாவிட்டலோ மீண்டும்  இதே ஒருநபர் நீதிமன்றத்தில் விசாரனைக்கு வரும் என தெரிகிறது. இந்த ஒருநபர் நீதிமன்றத்தில் வரும் பெரும்பான்மையான வழக்குகளில்  சட்டத்தில் இடமிருந்தால் செய்து கொடுங்கள் (" CONSIDERED  AS  PER LAW " ) என்று தான் வழிகாட்டுதல்(DIRECTION) தரப்படுகிறது .ஒரு வாரமோ 10 நாட்களுக்குப் பின்னர் தான் நீதிமன்ற  வழிகாட்டுதல்(DIRECTION) அரசிற்கு தரப்படும். அதன் பின்னர் தான்  இது குறித்த அரசு சார்பில் பதில் மனு அல்லது எதிர் தரப்பு வாதம் தாக்கல் செய்யப்படும் என்றும்  தெரிகிறது. இது வரை இவ்வழக்கில் அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ததாக விசாரித்த வரை தெரியவில்லை.

எது எப்படி ஆயினும் இடைநிலை ஆசிரியர்  ஊதிய  வழக்கில் முதல்படியை தாண்டி உள்ளமைக்கு SSTA  மனமார வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. 

சென்னை உயர் நீதிமன்றத்தில் SSTA சார்பாக தொடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்  ஊதிய  வழக்கு எண்:4420/2014 இல் வழிகாட்டுதல்(DIRECTION) இல்லாமல் ஆணை (JUDGEMENT) பெறுவதற்காக  அனைத்து நடவடிக்கைகளும் விரைவு படுத்தப்பட்டுள்ளது. இன்னும் பல கட்டங்களை தாண்டி செல்லவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறோம். மேல் முறையீடு ஆனாலும் உச்ச நீதிமன்றம் சென்றாலும் SSTA இடைநிலை ஆசிரியர்  ஊதிய  வழக்கில் எந்தவித சமரசத்திற்கும் இடமளிக்காது ;  தொடர்ந்து போராடும். இடைநிலை ஆசிரியர்  ஊதியம்  கையில் (பணபலன் ) கிடைக்கும் வரை ஓயமட்டோம்.

8 comments:

  1. TATA மற்றும் SSTA ன் முயற்சிகள் மற்றும் செயல்பாடுகளுக்கு நன்றி, வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நல்ல முயற்சி .வெற்றி பெறும் வரை போராடுவோம் .

    ReplyDelete
  3. உங்களுக்கு அந்த ஒருநபர் பெற்று தருவதில் விருப்பம் இல்லை போலும்... அவர் செய்வதை விமர்சிக்காமல் நீங்க ஏதேனும் செய்ய முயற்சிக்கலாமே? அவர் பணம் போட்டு நடத்தும் வழக்கை விமர்சிக்காதீர் ... தயவுகூர்ந்து அடுத்தவரை குறைகூறாதீர்...

    ReplyDelete
  4. 1.6.2009 muthal 30.12.2010 varai promotion il senta idainilai aasiriyargalukku thanioothiyam 750 fixation il serkkapadavillai.idarkku enna muyarchigal merkondeergal enbathai theruvikkavum.

    ReplyDelete
  5. ஒருவர்: ஊதிய முரண்பாடு எள் முனை அளவும் குறைபாடின்றி களையப்படும்!

    மற்றொருவர்: தேர்தலுக்குப்பின் ஊதிய முரண்பாடு களையப்படும்!!!(தேர்தல் வாக்குறுதி)

    "நீதிமன்றம்தான் கண் திற‌ந்து பார்க்க வேண்டும்"

    ஊதிய முரண்பாட்டால் பாதிக்கப்பட்ட இடைநிலைஆசிரியர்கள்

    ReplyDelete
  6. அன்புள்ள இடைநிலை ஆசிரியர் பேரினமே,
    ஏற்கனவே பெரிசுகளை தலைவர்களாகக் கொண்ட சங்கங்களின் செயல்பாட்டால் இடைநிலை ஆசிரியர்களாகிய நாங்கள் மனதளவில் செத்துவிட்டோம்.உடலளவில் உயிர் வாழ்கிறோம்.மீண்டும் சண்டையிட்டு பெரிசுகளின் ஏளனத்திற்கு ஆளாக்கிவிடாதீர்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி