29 முதல் குரூப் - 4 கலந்தாய்வு.. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 21, 2014

29 முதல் குரூப் - 4 கலந்தாய்வு..


'நிரம்பாமல் உள்ள, குரூப் - 4 காலி இடங்களை நிரப்ப, இரண்டு,மூன்று மற்றும் நான்காம் கட்ட கலந்தாய்வு, வரும், 29ம் தேதி முதல், நவ., 1ம் தேதி வரை நடக்கும்' என, டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) அறிவித்துள்ளது.
செயலர், விஜயகுமார்அறிவிப்பு: கடந்த ஆண்டு நடந்த குரூப் - 4 தேர்வில், தகுதியானவர்கள், முதல் சுற்று கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு, பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. நிரம்பாமல் உள்ள காலியிடங்களை நிரப்ப, இரண்டு, மூன்று மற்றும் நான்காம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, வரும், 29ம் தேதி முதல், நவ., 1ம் தேதி வரை, சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடக்கும்.

இது குறித்த விவரம், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர், அசல் சான்றிதழ் மற்றும் சுய கையொப்பம் இட்ட சான்றிதழ்களுடன், கலந்தாய்வுக்கு வர வேண்டும். பத்தாம் வகுப்பை, தமிழ் வழியில் படித்தவர் எனில், அதற்கான முன்னுரிமையை பெற, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம், சான்றிதழ் பெற்று வர வேண்டும். இவ்வாறு, விஜயகுமார் தெரிவித்துள்ளார். மொத்தம், 3,469 இடங்களை நிரப்ப, ஏற்கனவே நடத்திய முதல் சுற்று கலந்தாய்வில், 2,500 இடங்கள் வரைநிரம்பியதாகவும், மீதம் உள்ள இடங்களுக்கு, தற்போது கலந்தாய்வு நடத்துவதாகவும், துறை வட்டாரம் தெரிவித்தது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி