கல்வித்துறையில் 4,500 பணியிடங்களுக்கு பல லட்சம் பேர் போட்டி: வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் விரைவில் நேரடி நியமனம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 5, 2014

கல்வித்துறையில் 4,500 பணியிடங்களுக்கு பல லட்சம் பேர் போட்டி: வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் விரைவில் நேரடி நியமனம்

பள்ளி கல்வித்துறையில், ஆய்வக உதவியாளர், 4,500 பேர், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில், விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, பல லட்சம் பேர் காத்திருப்பதால், இந்த வேலைக்கு கடும் போட்டி இருக்கும் என தெரிகிறது.
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், அறிவியல் பாட செய்முறைக்காக, ஆய்வகங்கள் உள்ளன. இவற்றில், உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில், 4,500 உதவியாளர்கள், விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

கல்வித்துறை:

இதேபோல், பள்ளி துப்புரவாளர் பணியிடமும், கணிசமான எண்ணிக்கையில் நிரப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அரசாணை, ஓரிரு நாளில் வெளியாகும் என்றும், கல்வித்துறை வட்டாரம் கூறுகிறது.

இதுகுறித்து, அந்த வட்டாரம், மேலும் கூறியதாவது: ஆய்வக உதவியாளர் பணிக்கு, 10ம் வகுப்பு, அடிப்படை கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு வரை எனில், 35 வயதிற்குள் இருக்க வேண்டும்; அதிக கல்வித்தகுதி எனில், வயது வரம்பு கிடையாது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலி பணியிடங்களுக்கு ஏற்ப, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் இருந்து, பதிவு மூப்பு பட்டியல் பெற்று, சான்றிதழ் சரிபார்க்கப்படும். பின், மாவட்ட அளவிலான குழு, நேர்முகத் தேர்வு நடத்தி, குறிப்பிட்ட மதிப்பெண் வழங்கும். இது குறித்த, விரிவான வழிகாட்டுதல் அரசாணை, ஓரிரு நாளில் வெளியாகும். இவ்வாறு, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.

கடும் போட்டி:

ஆய்வக உதவியாளர் பணிக்கு, 20 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கலாம் என்பதால், இந்த பணிக்கு, கடும் போட்டி ஏற்படும். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலை கேட்டு பதிவு செய்துள்ளோர் எண்ணிக்கை, 50 லட்சத்திற்கும் மேல் உள்ளது. ஆய்வக உதவியாளர் பணிக்கு கல்வித்தகுதி, 10ம் வகுப்பு என்பதால், கிட்டத்தட்ட பதிவு செய்தோர் அனைவ ருமே போட்டியில் இருப்பர். பதிவு மூப்பு அடிப்படையில் பார்த்தாலும், இந்த பணியைப் பெற பல லட்சம் பேர் தகுதி உள்ளவர்களாக இருப்பர். எனவே, அவர்கள் அனைவரும் இந்த பணியைப்பெற கடும் முயற்சியை மேற்கொள்வர் என தெரிகிறது.

4 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. திரு கல்வி செய்தி அட்மின் அவர்களுக்கு ஒரு பணிவான கோரிக்கை நமது மக்கள் முதல்வர் அம்மா அவர்கள் தடைகளை வெல்ல அவர்களுக்கு ஆதரவாக இன்று ஒரு நாள் மட்டும் எந்த வித கருத்துக்களையும் அனுமதிக்காமல் அம்மாவுக்கு ஆதரவு தெரிவியுங்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் எங்களை போன்று தேர்வு பெறாதவர்களுக்கு அடுத்த பட்டியலில் முன்னுரிமை அளிக்க அம்மா உதவுவார்கள் எங்களின் நலனுக்காக தயவு செய்து இதற்கு உதவுங்கள்

   Delete
 2. Plz clarify my doubt....
  Trb notification avd 06/2014 for both TAMIL & MINORITIES languages notificatio was published...
  Tamil vacant filled with 5% relax...
  Wt about minority langauges ....
  5% relax aplicable for minority also....
  Wt about urs opnions....
  If 5% nt aplicable for minority means we shoud file a cause....
  Y TN govt give partciality with majorities and minorities.
  Plz explain & publish one clear artical ....
  Im below 90marks in urdu language SG.

  ReplyDelete
 3. Those who want to joint to file the case against G.O.71 to supreme court. Pls joint.
  Some lawyers file the case against GO71 to supreme court.
  1. Nalini Chithambram Madam (Chennai Group)
  2. Sankaran Sir (Chennai Group)
  3. Lajapathy Sir (Madurai Group)
  4. Amjath Khan Sir (Madurai Group)
  If u want to contact the above persons pls search the phone number through internet

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி