தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 7% அகவிலைப்படியை உயர்த்த கோரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 9, 2014

தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 7% அகவிலைப்படியை உயர்த்த கோரிக்கை.


தமிழக முதல்-அமைச்சருக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் மாநிலத்தலைவர் கு.பால்பாண்டியன் நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தற்போது 100 சதவீத அகவிலைப்படியை பெற்று வருகிறார்கள். கடந்த 1-ந் தேதி முதல் 7 சதவீத அகவிலைப்படி உயர்வினை மத்திய அரசு அறிவித்து, உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை மத்திய அரசு பணியாளர்கள் பெற்று வருகிறார்கள்.ஆனால்மத்திய அரசுக்கு இணையாக, உயர்த்தப்பட்ட 7 சதவீத அகவிலைப்படியானது வழங்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. எனவே வரவுள்ள தீபாவளி உள்ளிட்ட பண்டிகை கால செலவுகளை எதிர்கொள்ளும் வகையில் நிலுவையாக உள்ள 7சதவீத அகவிலைப்படியை கடந்த 1-ந் தேதி முதல் கணக்கிட்டு வழங்கிட உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

3 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி