தனியார் வங்கியில் 50 வணிக வளர்ச்சி அதிகாரி பணியிடங்களுக்கு, மதுரைமாவட்ட வேலைவாய்ப்பு பதிவுதாரர்களுக்கு அக்டோபர் 10ஆம் தேதி நேர்காணல் நடைபெற உள்ளதாக, மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் கூறியிருப்பது: தனியார் வங்கித் துறையில் 50 வணிக வளர்ச்சி அதிகாரி பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. மேற்காணும் பணியிடத்துக்கு பட்டப்படிப்புடன், 26 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். இதேபோன்று, மதுரையிலுள்ள பிரபல தனியார் நிறுவனத்துக்கு லைப் அட்வைஸர் பணிக்கு 50 நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். கல்வித் தகுதியாக ஏதாவதொரு பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ மூன்றாண்டுகள் படித்திருக்க வேண்டும். வயது 25 முதல் 45-க்குள் இருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ. 17,400 பெற வாய்ப்புள்ளது. மதுரையில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேற்காணும் இரு தனியார்நிறுவனங்கள் நடத்தும் வேலைவாய்ப்புச் சந்தையில் பங்கேற்று பயனடைய விரும்பும் பதிவுதாரர்கள், தங்களது அசல் கல்விச் சான்றிதழ், வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டையுடன், அக்டோபர் 10ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு, மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி