'கிரையோஜெனிக் இன்ஜின்' தயாரிப்பு : 'இஸ்ரோ' விஞ்ஞானி பெருமிதம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 19, 2014

'கிரையோஜெனிக் இன்ஜின்' தயாரிப்பு : 'இஸ்ரோ' விஞ்ஞானி பெருமிதம்

"விண்?வளி ஆராய்ச்சியில் கிரையோஜெனிக் இன்ஜின் தயாரிப்பு மூலம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது இந்தியா,” என இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் (இஸ்ரோ) எரிவாயு கழக இயக்குனர் கார்த்திகேசன் பேசினார்.

ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் 'இஸ்ரோ' சார்பில் விண்வெளி கண்காட்சி நடந்தது. இரண்டாம் நாள் விழாவில், தாளாளர் பாபுஅப்துல்லா தலைமை வகித்தார். பொருளாளர் செல்லத்துரை அப்துல்லா முன்னிலை வகித்தார். முதல்வர் மாரிமுத்து வரவேற்றார். 'இஸ்ரோ' மூத்த விஞ்ஞானிகள் நாகராஜன், முருகன், பேராசிரியர் ராஜசேகர் பேசினர்.

'இஸ்ரோ' எரிவாயு கழக இயக்குனர் கார்த்திகேசன் பேசியதாவது: மங்கள்யான் அனுப்பியதன் மூலம் ஆசியாவிலேயே முதல் நாடாக இந்தியா பெருமை பெற்றுள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில் அப்துல்கலாம் பங்கு மிகவும் இன்றியமையாதது. கடின உழைப்பு தான் அவருக்கு வெற்றியை தேடித்தந்தது. 25 டன் எடை கொண்ட 'கிரையோஜெனிக் இன்ஜின்' தயாரிப்பு பணி மகேந்திரகிரியில் நடக்கிறது. இன்ஜினில் திரவ நிலையில் ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் போன்ற எரிபொருட்கள் பயன்படுத்தப்படுவதற்காக பரிசோதனை நடத்தப்பட உள்ளது. 'கிரையோஜெனிக் இன்ஜின்' தயாரிப்பின் மூலம் உலக நாடுகளின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளது. இவ்வாறு பேசினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி