உதவிப் பேராசிரியர் நேரடி நியமனம்: இறுதி மதிப்பெண் பட்டியல் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 21, 2014

உதவிப் பேராசிரியர் நேரடி நியமனம்: இறுதி மதிப்பெண் பட்டியல் வெளியீடு.


உதவிப் பேராசிரியர் காலிப் பணியிட நேரடி நியமனத்துக்கான இறுதிமதிப்பெண் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) வெளியிட்டுள்ளது.
ஆங்கிலம், தாவரவியல், விலங்கியல், கடல்வாழ் உயிரின வளர்ப்பு ஆகிய நான்கு துறை உதவிப் பேராசிரியர் பணிக்கான இந்த இறுதி மதிப்பெண் பட்டில் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது.அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 1093 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பும் பணியை டி.ஆர்.பி. மேற்கொண்டு வருகிறது.கல்வித் தகுதி, பணி அனுபவம், நேர்முகத் தேர்வு ஆகிய மூன்று நிலைகளில் பெறப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.அதன்படி ஆங்கிலம், தாவரவியல், விலங்கியல், கடல்வாழ் உயரின வளர்ப்பு ஆகிய நான்கு பாடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இறுதிக் கட்டமான நேர்முகத் தேர்வு அக்டோபர் 13-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.

இவர்களுக்கான இறுதி மதிப்பெண் பட்டியல் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் இந்த நான்கு பாடங்களுக்கான இறுதித் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி