C-TET:தேர்வு முடிவு வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 19, 2014

C-TET:தேர்வு முடிவு வெளியீடு.


கேந்திரீய வித்யாலயா, நவோதயா வித்யாலயா பள்ளிகள், திபெத்தியபள்ளிகள் மற்றும் யூனியன் பிரதேச அரசின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையில் ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால் சி-டெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகும்.
சி-டெட் தேர்வை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) கடந்த செப்டம்பர் 21-ம் தேதி நடத்தியது. தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஆறரை லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வெழுதினர். தமிழகத்தில் மட்டும் ஏறத்தாழ 7 ஆயிரம் பேர் தேர்வில் கலந்துகொண்டனர். இந்த நிலையில், சி-டெட் தகுதித்தேர்வு முடிவை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.தேர்வு முடிவுகளை www.ctet.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

3 comments:

 1. Dear admin,
  please publish genuineness information to get it from tnteu and state board

  ReplyDelete
 2. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4-பொதுத் தமிழ்-1
  தமிழகத்தில் காலியாகவுள்ள 4 ஆயிரத்து 963 குரூப் 4 பணியிடங்களுக்கான
  அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
  மேற்கண்ட பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு வருகின்ற டிசம்பர் மாதம் 21-ஆம்
  தேதி நடைபெறுகிறது. இதற்கு பயன்படும் வகையில் 6 முதல் 12 ஆம்
  வகுப்பு வரையான சம்ச்சீர் பாடப்பகுதிகள் அனைவருக்கும் பயன்பட
  வேண்டுமென்ற நோக்கில் வினா - விடைகளாக .....

  ஆறாம் வகுப்பு:
  வாழ்த்து
  திருவருட்பா
  கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்என் எண்ணில் கலந்தே இருக்கின்றான் - பண்ணில் கலந்தான்என் பாட்டில் கலந்தான் உயிரில் கலந்தான் கருணை கலந்து-திருவருட்பா
  * திருவருட்பாவை எழுதியவர் - இராமலிங்க அடிகளார்
  * சிறப்பு பெயர் - திருவருட்பிரகாச வள்ளலார்
  * பிறப்பிடம் - கடலூர் மாவட்டம் மருதூரில் பிறந்தவர்.
  * பெற்றோர் - இராமையா - சின்னமையார்
  * வாழ்ந்த காலம்: 05.10.1823 - 30.01.1874
  * எழுதிய நூல்கள்: ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறைகண்ட வாசகம்.
  * பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க இராமலிங்க அடிகளார்
  அமைத்தது - அறச்சாலை
  * அறிவு நெறி விளங்க வள்ளலார் நிறுவியது - ஞானசபை
  * சமர சன்மார்க்க நெறிகளை வழங்கியவர் - இராமலிங்க அடிகளார்.
  * இராமலிங்க அடிகளார் பாடிய பாடலின் தொகுப்பிற்கு பெயர் - திருவருட்பா.
  * வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய மனம் கொண்டவர் - இராமலிங்க
  அடிகளார்
  * வள்ளலார் பாட்டை "மருட்பா" என்று கூறியவர் - ஆறுமுக நாவலர்.
  * கடவுளை "கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்", என்றும் "உயிரில்
  கலந்தான் கருணை கலந்து" என்றும் பாடியவர் - இராமலிங்க அடிகளார்.
  * நூல்கள்: ஜீவகாரூன்ய ஓழுக்கம், மனுமுறை கண்ட வாசகம்.
  * வள்ளலாரின் பாடல்கள் அனைத்தும் திருவருட்பா என்னும் தலைப்பில்
  தொகுக்கப்பட்டுள்ளன.
  * சிறப்பு: சமரச சன்மார்க்க நெறியை வழங்கினார்.
  * மத நல்லிணக்கத்திற்கு சன்மார்க்க சங்கத்தையும், உணவளிக்க அறச்சாலை,
  அறவுநெறி விளங்க ஞான சபையையும் நிறுவினார்.
  * வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய கருணை மனம் இவருடையது.
  * கருணை நிறைந்த இறைவன் என் கண்ணில், சிந்தனையில், எண்ணத்தில்,
  பாட்டில், பாட்டின் இசையில், என் உயிரில் கலந்து இருக்கிறான்.

  அறிவுரைப் பகுதி: திருக்குறள்:
  அன்புடைமை
  சொற்பொருள்: ஆர்வலர் - அன்புடையவர் புன்கணீர் - துன்பம் கண்டு பெருகும் கண்ணீர் என்பு - எலும்பு. இங்கு உடல், பொருள், ஆவியைக் குறிக்கிறது. வழக்கு - வாழ்க்கை நெறி நண்பு - நட்பு மறம் - வீரம், கருணை (வீரம் இரண்டிற்குமே அன்புதான் அடிப்படை என்பது பொருள்) அன்பிலது - அன்பில்லாத உயிர்கள் என்பிலது - எலும்பில்லாதது(புழு) பூசல் தரும் - வெளிப்பட்டு நிற்கும் ஆருயிர் - அருமையான உயிர் ஈனும் - தரும் ஆர்வம் - விருப்பம் (வெறுப்பை நீக்கி விருப்பத்தை உண்டாக்கும் என்று பொருள்) வையகம் - உலகம் என்ப - என்பார்கள் புறத்துறுப்பு - உடல் உறுப்புகள் எவன் செய்யும் - என்ன பயன்? அகத்துறுப்பு - மனத்தின் உறுப்பு, அன்பு

  பிரித்து எழுதுக:
  அன்பகத்தில்லா = அன்பு + அகத்து + இல்லா - அன்பு உள்ளத்தில் இல்லாத
  வன்பாற்கண் = வன்பால் + கண் - பாலை நிலத்தில்
  தளிர்த்தற்று - தளிர்த்து + அற்று - தளிர்த்ததுபோல
  வற்றல்மரம் - வாடிய மரம் *

  இவரின் காலம் கி.மு. 31 என்று கூறுவர்.
  * இதனை தொடக்கமாக கொண்டே திருவள்ளுவர்
  ஆண்டு கணக்கிடப்படுகிறது.
  * சிறப்பு பெயர்: தெய்வப்புலவர், நாயனார், செந்நாப்போதர்
  * இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மூன்று பெரும்
  பிரிவுகளை உடையது.
  * அதிகாரங்கள்: 133
  * அதிகாரத்திற்கு 10 குறட்பாக்கள் வீதம் 1330 குறட்பாக்கள் உள்ளன.
  * இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  * திருக்குறளின் வேறு பெயர்கள்: உலக பொதுமறை, முப்பால், தமிழ்மறை.
  உலகப் பொதுமறை எனப் போற்றப்படுகிறது.
  * திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை: கிறித்து ஆண்டு (கி.பி) + 31 =
  திருவள்ளுவர் ஆண்டு. எடுத்துக்காட்டு: 2013 + 31 = 2044. கி.பி.2013ஐத் திருவள்ளுவர்
  ஆண்டு 2044 என்று கூறுவோம்.

  உரைநடை: தமிழ்த்தாத்தா உ.வே.சா.
  * உ.வே.சா ஓலைசுவடி வேண்டி ஒருவரிடம் உரையாடிய
  நிகழ்ச்சி நடைபெற்ற இடம் ஈரோடு மாவட்டம் கொடுமுடி.
  * ஊர் - திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுறம்
  * இயற்பெயர் - வேங்கடரத்தினம்
  * ஆசிரியர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை.
  * அவரின் ஆசிரியர் வைத்த பெயர் - சாமிநாதன்
  * உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகனான சாமிநாதன் என்பதன்
  சுருக்கமே உ.வே.சா
  * இவரின் தந்தை - வேங்கடசுப்பையா
  * காலம் - 19.02.1855 முதல் 28.04.1942

  * 1942 இல் உ..வே.சா நூல்நிலையம் சென்னை பெசன்ட் நகரில்
  துவங்கப்பட்டது.
  * உ.வே.சா நினைவு இல்லம் உத்தமதானபுரத்தில் உள்ளது.

  ReplyDelete
 3. குருவி குலமும் குருக்கு மூலமும் ஒன்னு . அதுக்கு ஒரு பழம் கார் ஒரு மூலம் திக் . போய் உன் டாக்டர பாரு உன் மூலம் சரியாக ... pada va raskal .....

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி