TET ஆசிரியர் பணி நியமனத்தில் குளறுபடியை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 8, 2014

TET ஆசிரியர் பணி நியமனத்தில் குளறுபடியை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்.


இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்தில் முதல்தலைமுறையினர்,இட ஒதுக்கீட்டு பிரிவினர் ஆகியோருக்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்நடத்துகின்றன.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், இந்திய மாண வர் சங்கம், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை, தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச் சங்கம், தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் ஆகியவை இணைந்து இன்று சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இடைநிலைமற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிநியமனங்களின் போது வெயிட்டேஜ் முறை கடைபிடிக்கப்படுகிறது. இதனால் முதல்தலைமுறையினர், இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். வெயிட்டேஜ் முறையை கடை பிடிக்கும் போது வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக தோன்றுகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக பல்வேறு வழக்கும் தொடர்ந்து நடப்பதால் பணி நியமனத்தில் பல குழப்பங்கள் ஏற்படுகின்றன. இதற்கு உரிய தீர்வை அரசு எடுக்கவில்லை. மேலும் மதிப்பெண் தளர்வு வழங்கும் அரசா¬ணையை ரத்து செய்தது தொடர்பாக அரசு மேல்முறையீடு செய்யவில்லை.பின்னடைவு காலிப் பணியிடங்களையும் நிரப்பவில்லை இதனால் மேற்கண்ட அமைப்புகள் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவர் சண்முகம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ், பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, மாணவர் பெற்றோர் சங்க செயலாளர் அருமைநாதன் உள்ளிட்டோர் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேச உள்ளனர்.

8 comments:

  1. சுப்ரீம் கோர்டில் கேஸ் பைல் செய்ய நினைப்பவர்கள் உடனடியாக சுப்ரீம் கோர்ட்டில் நேரடியாக வாதடக்கூடிய சுப்ரீம் கோர்ட் லாயர் நளினி சிதம்பரம் அவர்களை உடனடியாக அனுகவும். மேல்முறையீடு செய்ய குறைவான காலமே உள்ளதால் காலதாமதம் வேண்டாம்.

    சிலர் சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் பைல் செய்கிறோம் என்ற போர்வையில் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் யாரும் சுப்ரிம் கோர்ட் லாயர் கிடையாது. இவர்கள் அங்கு சுப்ரிம் கோர்ட்டில் வேறு லாயர் யாரையாவது வைத்து தான் வாதிடுவார்கள். அவர்களை பற்றி தெரியாமல் நாம் ஏமாற்றப்படுவோம். ஆகவே நேரடியாக வாதாடக்கூடிய சுப்ரீம் கோர்ட் லாயர் நளினி சிதம்பரத்தை சந்தியுங்கள், கேஸ் பைல் செய்து கொள்ளுங்கள். இதுதான் உங்களக்கு நல்லது.

    கேஸ் போடுபவர்களுக்கு மட்டும் தான் பணி நியமனம் உறுதி செய்யப்படும்

    ஆபீஸ் முகவரி.:-

    கீழ்பாக்கம் மெடிக்கல் காலேஜ் அருகில், டாக்டர் ரங்கராஜன் டவர்ஸ், 7 வது மாடி. ஆபிஸ் நெம்பர். 04426416803

    ReplyDelete
  2. Akilan sir, gud morning. Please enter your comment, we are waiting

    ReplyDelete
  3. Wats meaning second list please tel akilan sir and vijayakumar sir

    ReplyDelete
  4. prakash kumar vara work iruntha parunga? judgement ellorukum comman than athene csae podavakaluku madum?

    ReplyDelete
  5. hai dear brother and sisters and my friends today our friend mr ramesh going to trb and ask when published adw and minority list but they not responce but that time mr palli kalvi minister viramani anka vanthirukirar so avaridam manu kodukka pokirar nan evening ella details sum kandippa unkalidam pakirnthu kolkiren ( amma ku nethu jamin kidaikathathal entha week vidavendiyathu thalli pokuma enpathu puriyavilla so evening kandiipa oru mudivu edupom )

    thank you

    ReplyDelete
    Replies
    1. dear mr.akilan sir,entha news endralum udanadiyaga kalviseithiyil theriya paduthungal.daily ungal comment i ethir parthu kondirukiren.....thank u...

      Delete
    2. We are very thankful for your precious information Akilan sir.

      Delete
  6. DEAR TAMIL TEACHERS TET EXAM 2013 LA 90 MARKS AND ABOVE EDUTHAVARGAL CONTACT THIS NUMBERS VERY VERY IMPORTANT PLEASE CALL US
    Jaya kavitha Bharathi 9486948138 (Krishnagiri)
    S.Jovi Arun Chezhiyan 9894162685(Nagai)
    Sridhar 9500867071(Thanjavur)

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி