குரூப் 2 பிரதான தேர்வுக்கான ஏற்பாடுகள் தயார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 5, 2014

குரூப் 2 பிரதான தேர்வுக்கான ஏற்பாடுகள் தயார்

குரூப் 2 பிரதானத் தேர்வுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. இதற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை தேர்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதுகுறித்து தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெ.சோபனா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

குரூப் 2 பிரதானத் தேர்வு வரும் 8-ஆம் தேதி முற்பகல், பிற்பகல் ஆகிய இரு வேளைகளிலும் நடைபெறுகிறது. முதன்மைத் தேர்வுக்குத் தகுதி பெற்றுள்ள விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு தேர்வாணைய இணையதளங்களானwww.tnpscexams.net.ய்ங்ற் மற்றும் www.tnpsc.gov.in-இல் வெளியிடப்பட்டுள்ளது. தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

முதன்மை எழுத்துத் தேர்வு இரு பகுதிகளாக நடைபெறும். காலையில் பொது அறிவு கொள்குறிவகைத் தேர்வு கணினி வழித் தேர்வாகவும், மாலையில் விரிவான விடை எழுதும் தேர்வாகவும் இருக்கும்.

முதன்மை எழுத்துத் தேர்வுக்கான தேர்வுக் கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும். இதுவரை தேர்வுக் கட்டணம் செலுத்தாத விண்ணப்பதாரர்கள், தேர்வுக் கட்டணத்தை செயலாளர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சென்னை-3 என்ற பெயரில் பெறப்பட்ட வங்கி வரைவோலையை வரும் 8-ஆம் தேதி தேர்வுக் கூடத்தில் அளிக்க வேண்டும் என்று சோபனா தெரிவித்துள்ளார்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி