தமிழக அரசு ஊழியர்களுக்கான வீட்டுக் கடன் உச்ச வரம்பு 50 சதவீதமாக உயர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 28, 2014

தமிழக அரசு ஊழியர்களுக்கான வீட்டுக் கடன் உச்ச வரம்பு 50 சதவீதமாக உயர்வு


தமிழக அரசு ஊழியர்களுக்கான வீட்டுமனைக் கடன் உச்சவரம்பை 20 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட கடன் உச்சவரம்புத் தொகையானது,
மூன்று தவணைகளாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் வீட்டுமனை வாங்குவதற்கான கடன் தொகையின் உச்சவரம்பை 20 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்த வேண்டுமென தமிழ்நாடு தலைமைச்செயலக சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்தக் கோரிக்கையை ஏற்று, கடன் தொகையின் உச்சவரம்பானது 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை வீட்டுக் கடன், முன்பணத் தொகை பெறாத அரசு ஊழியர்கள் அவற்றைப் பெற்றிட வசதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், வீட்டுக் கடன் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.12.5 லட்சமாக உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை (பொறுப்பு) செயலாளர் பணீந்திர ரெட்டி புதன்கிழமை பிறப்பித்தார்.மூன்று தவணைகள் எப்படி? வீட்டு கடன் பெற தகுதி படைத்தவர்களுக்கு மூன்றுதவணைகளாக கடன் தொகைகள் வழங்கப்படும். முதல் தவணையாக, அனுமதிக்கப்பட்ட மொத்த கடன் தொகையில் 50 சதவீதத் தொகை அல்லது வழிகாட்டி மதிப்பின்படி ஒரு நிலத்தின் மதிப்பு அல்லது விண்ணப்பதாரர் கோரிய தொகை ஆகியவற்றில் எதுகுறைவோ அந்தத் தொகை முதல் தவணையாக அளிக்கப்படும்.இதன்பின், வீட்டுக் கூரை வரை கட்டுமானத்தை எழுப்புவதற்காக இரண்டாவது தவணைத் தொகை அளிக்கப்படும். அது அனுமதிக்கப்பட்ட மொத்த கடன் தொகையில் பாதியாக இருக்கும். இறுதி மற்றும் மூன்றாவது தவணைத் தொகையானது கட்டுமானம் முழுவதையும் முடிப்பதற்காக அளிக்கப்படும். இந்த மூன்று தவணைத் தொகைகளும் 10 மாதங்களுக்குள் அளிக்கப்பட வேண்டும்.

அதாவது முதல் தவணைத் தொகை 2 மாதங்களுக்குள், அடுத்தடுத்த தவணைத் தொகைகள் தலா 4 மாத இடைவெளிகளுக்குள்ளும் அளிக்கப்பட வேண்டும்.முதல் தவணைத் தொகையைப் பெற்ற அடுத்த ஆறு மாதங்களுக்குள் அந்த நிலத்தில் வீட்டுக்கான கட்டுமானத்தைத் தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் அதனை அரசு அடமானத்தில் எடுத்துக் கொள்ள விண்ணப்பதாரர் சம்மதிக்க வேண்டும் என்று அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தலைமைச் செயலக சங்கம் நன்றி: தங்களது கோரிக்கையை ஏற்று, வீட்டுக் கடனுக்கான உச்சவரம்பினை உயர்த்தியதற்கு தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பை சங்கத்தின் தலைவர் எஸ்.பீட்டர் அந்தோனிசாமி வெளியிட்டார்.

11 comments:

  1. salugai alittha tngov kku nandri..nandri...nandri...

    ReplyDelete
  2. December 4 muthal sattamandra koottatthodar nadaipera ullathu.....athu 10 naatkal nadakkalaam ena nunaikkiren....so naam ethirpparppathu thaamathamaagalaam...

    ReplyDelete
  3. வெய்ட்டேஜை ரத்துசெய்ய கோரியும், அடுத்த பணிநியமனங்களில் முன்னுரிமை தரக்கோரியும் மீண்டும் ஓர் புரட்சி; தயராக இருங்கள்

    கடந்த மாதம் செப்டம்பர் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெய்ட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி பலகட்ட போராட்டங்களை நடத்தினோம் இன்று வரை நமக்கு நியாயம் கிடைக்கவில்லை...

    தற்போது ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் அமைப்பின் நிர்வாகிகள் வரும் திங்கள் சென்னை செல்ல உள்ளனர்....

    வரும் டிசம்பர் 4ம் தேதி முதல் தமிழக சட்டபேரவை கூடவுள்ளது இந்நேரத்தில் நாம் நம் கோரிக்கைகளை முறையாக முதல்வர் மாண்புமிகு ஒ.பன்ணீர்செல்வம் அவர்களிடம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி அவர்களிடமும் மேலும் திண்டுக்கல் உறுப்பினர் பாலபாரதி மேடம் போன்ற சமூக சிந்தனையாளர்களிடம் மனு கொடுத்து நமக்கக குரல் கொடுக்க வேண்டுவோம்...

    ஒருவேளை நம் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டாள் போராடவும் தயாராக இருக்கிறோம் ஆசிரியர் சொந்தங்களே!!! நீங்களும் தயாராக இருங்கள்

    இதைப் படித்து விட்டு பேஸ்புக் மற்றும் வாட்ஸப், கல்வி வலைதளம் அனைத்திலும் பதிவிடுங்கள்....உங்களால் முடிந்த சிறு உதவியாவது செய்யலாமே!!!

    மேலும் உணர்வோடு பேச
    செல்லத்துரை 98436 33012
    கபிலன் 90920 19692
    ராஜலிங்கம் புளியங்குடி
    95430 79848

    ReplyDelete
    Replies
    1. Thirumbavum first la irundha???....

      Delete
    2. Namadu job Kedaikku m varai porada vendum. Be prepared. Manju mam all the best.

      Delete
  4. Gvt salugai koduthalum.. job kodutha double thanks Sollom.

    ReplyDelete
  5. All the best. They are help you and join with you.

    ReplyDelete
  6. Intha loan vaankum procedure therinthaal sollunkale manju (private illa) at
    government rules

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி