பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலி : அரசுத் தரப்பு சான்றாவணங்கள் தாக்கல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 4, 2014

பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலி : அரசுத் தரப்பு சான்றாவணங்கள் தாக்கல்


கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியானதில், கீழ் கோர்ட்விதித்த தண்டனையை ரத்து செய்யக்கோரிய வழக்கில், அரசுத் தரப்பில் 565 பக்க சான்றாவணங்களை தாக்கல் செய்தனர்.
கும்பகோணம் கிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளியில், 2004 ஜூலை 16 ல் தீ விபத்து ஏற்பட்டது. 94 குழந்தைகள் தீயில் கருகி பலியாகினர். 18 பேர் காயமடைந்தனர்.பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனை, பள்ளி தாளாளர் சரஸ்வதி, தலைமை ஆசிரியை சாந்தலட்சுமி, மாவட்ட துவக்கக் கல்வி அலுவலர் பாலாஜி, துவக்கக் கல்வி அலுவலக கண்காணிப்பாளர் தாண்டவன் உட்பட 8 பேருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தஞ்சாவூர் கோர்ட் ஜூலை30 ல் உத்தரவிட்டது. இதை ரத்து செய்யக்கோரி புலவர் பழனிச்சாமி, சரஸ்வதி, சாந்தலட்சுமி, பாலாஜி, தாண்டவன், மாவட்ட துவக்கக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் துரைராஜ், மாவட்ட துவக்கக் கல்வி அலுவலக உதவியாளர் சிவப்பிரகாசம் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். முன்னாள் மாவட்ட துவக்கக் கல்வி அலுவலர் பி.பழனிச்சாமி, மாவட்டக் கல்வி அலுவலர் நாராயணசாமி உட்பட 11 பேரை கீழ் கோர்ட் விடுதலை செய்தது.

இதை எதிர்த்துஅரசுத் தரப்பில், ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் ஏ.செல்வம், வி.எஸ்.ரவி கொண்ட பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. அரசு கூடுதல் குற்றவியல் வக்கீல் ராமேஷ் ஆஜரானார். கீழ்கோர்ட்டின் 565 பக்க சான்றாவணங்கள், 18 சான்றாவண பொருட்களை அரசுத் தரப்பில் தாக்கல் செய்தனர். விசாரணையை டிச.,12 க்கு நீதிபதிகள்ஒத்தி வைத்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி