அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதியத்தை நிர்வாகத்திடம் வழங்க உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 23, 2014

அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதியத்தை நிர்வாகத்திடம் வழங்க உத்தரவு


அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கானஊதியத்தை பள்ளி நிர்வாகத்திடமே வழங்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடர்பாக, புரசைவாக்கத்தில் உள்ள சர்.சி.எம்.டி.முத்தையா செட்டியார் ஆண்கள் பள்ளியின் தாளாளர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:எங்கள் பள்ளிக்கு அரசு நிதி உதவி வழங்கப்படுகிறது. இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கான ஊதியம் அரசிடமிருந்து நேரடியாகவே அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அவ்வாறு வழங்காமல், பள்ளி நிர்வாகத்திடமே ஊதியத்தை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் பிறப்பித்த உத்தரவு:கடந்த 2011-ஆம் ஆண்டு பள்ளி நிர்வாகத்துக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், இருவருக்கும் இடையே பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.எனவே, கடந்த 2012-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கான ஊதியம் அவர்களிடம் நேரடியாக வழங்கப்படும் என மாவட்டக் கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ், பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கான ஊதியம் சம்பந்தப்பட்ட பள்ளிச் செயலாளரிடமே வழங்கப்பட வேண்டும். இதற்கு முழு அதிகாரம் படைத்தவர் மாவட்டக் கல்வி அதிகாரிதான்.இதை நடைமுறைப்படுத்தாதது அவர் செய்த தவறாகும். தாங்கள் நினைப்பதைத்தான் நிர்வாகம் செய்ய வேண்டும் என ஆசிரியர்களும், ஊழியர்களும் நினைக்கக் கூடாது. கல்வி அதிகாரிகளும் அதை அனுமதிக்கக்கூடாது.எனவே, மனுதாரர் பள்ளியின் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கான ஊதியத்தை பள்ளி நிர்வாகத்திடமே வழங்க வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி