ஒட்டன்சத்திரம் : கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கும்""பொது மாறுதல் கலந்தாய்வு'' வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் சங்க மாவட்ட கூட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடந்தது.
மாவட்ட தலைவர் சவுந்தரராஜன் தலைமை வகித்தார். கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வுவழங்கிய அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடத்தை முதுகலை ஆசிரியர் பணியிடமாக தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. திருப்பூர் மாவட்ட உறுப்பினர் சிவா, மகளிரணி செயலாளர் அனிதாதேவி நன்றி கூறினர்.
பகுதி நேர பட்டதாரி ஆசிரியர் வேலை சீக்கிரம் நிரந்தரம் ஆகிவிடும். இரண்டு பள்ளிகளில் பணிபுரிந்து மாதம் தற்போது நிரந்தரம் ஆகும் வரை 10000 சம்பாதிக்கலாம் என்ற ஆசை வார்த்தைகளைக் கூறி ஒரு லட்சம் முதல் 3 லட்ச ரூபாய் வரை பெற்றுக் கொண்டு தற்போதுள்ள அரசியல்வாதிகள் சந்தோசமாக இருக்கிறார்கள். பணம் கொடுத்து மாதம் 5000 மட்டும் வாங்கிக் கொண்டு வட்டி கூட கட்டமுடியாமல் மூன்றாண்டுகளாக கடும் துயரத்தில் இருந்து கொண்டிருக்கிறார்கள். வாக்குறுதி கொடுத்தவர்கள் நிறைவேறச் செய்வார்களா? அய்யோ! பாவம்! யாரும் வாய் திறக்க மாட்டேன் என்கிறார்களே!
ReplyDelete