ஆதரவற்ற நலிந்த குழந்தைகளுக்கு உதவிக்கரம் நீட்டிவரும் “மைம்'' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 17, 2014

ஆதரவற்ற நலிந்த குழந்தைகளுக்கு உதவிக்கரம் நீட்டிவரும் “மைம்''



“G மைம்ஸ்டுடியோவின் நிர்வாக இயக்குனர் மைம் கோபி . மைம் கலையை உயிர் முச்சாக கொண்டு அக்கலையை வளரும் இளைய தலைமுறைக்கு கொண்டு சென்று அதில் வெற்றியையும் கண்டு வருபவர் .சினிமாவுக்குரிய நடிப்பு பயிற்ச்சியையும் கற்ப்பித்து வருபவர் .தான் மட்டுமே சமுதாயத்தில் மேலோங்கி இருக்க வேண்டும் என்ற பெரும்பாலான மனிதர்களுக்கு மத்தியில் ஆதரவற்ற ,நலிந்த ஊனமுற்ற குழந்தைகளுக்கு அவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் கடந்த இரண்டு வருடமாகமாஎன்ற நிகழ்ச்சியை நடத்தி இந்த தெய்வ குழ்ந்தைகளுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றார் .

இந்த நிகழ்ச்சியில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு துறைகளில் பணியாற்ற்றுபவர்கள் இக்குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர் .சென்னை காமராஜர் அரங்கத்தில் நவம்பர் 16 தேதி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது பிரத்யேகமாகமாஎன்ற நிகழ்ச்சி பார்வையாளர்களை கண் கலங்க வைத்தது , இயக்குனர் பிரபு சாலமன் , பாண்டி ராஜ் , ரஞ்சித் ,பாலாஜி மோகன் , நடிகர் கார்த்தி, காளி , ஜான் விஜய் , அசோக் , கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் . இவ்விழாவில்அன்பு மலர்இல்லத்தில் உள்ள 61 குழந்தைகளுக்கு ஒரு ஆண்டிற்கான கல்வித்தொகை வழங்கப்பட்டது ..
யாரேனும் இக்குழந்தைகளுக்கு உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ள
ஜிமைம் ஸ்டுடியோ
மைம் கோபி -09884032100
அஜித் – 09841236904
கோம்ஸ் -09884500004


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி