ஆசிரியர் கல்விக்கான வரைவு பாடத் திட்டம், இன்று, இறுதி செய்யப்படுகிறது.
நாடு முழுவதும், ஆசிரியர் கல்விக்கு, புதிய பாடத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பல மாநிலங்கள், புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்தி உள்ளன. தமிழகத்தில், திண்டுக்கல் காந்தி கிராமிய பல்கலை வேந்தர், பங்கஜம் தலைமையிலான நிபுணர் குழு, இரண்டாண்டு ஆசிரியர் கல்விக்கு, புதிய பாட திட்டத்தை உருவாக்கி உள்ளது. இதை இறுதி செய்வதற்கான கூட்டம், நேற்று, சென்னையில் துவங்கியது. மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன இயக்குனர், கண்ணப்பன் மற்றும் பாட நிபுணர்கள் பலர், கூட்டத்தில் பங்கேற்றனர். இன்றைய கூட்டத்திற்குப் பின், வரைவு பாடத்திட்டம் இறுதி செய்து, தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அரசு, அனுமதி அளித்ததும், பாட திட்டம் எழுதும் பணி துவங்கும். விரைவாக, அனுமதி வழங்கினால், அடுத்த கல்வி ஆண்டில், புதிய பாடத்திட்டம் அமலுக்கு வர, வாய்ப்பு இருக்கும்.
தாமதம் ஆனால், 2016 - 17ல் தான், அமலுக்கு வரும்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி