தமிழகத்தில் தனியார் மெட்ரிக் பள்ளிகள் கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிப்பதாக புகார் இருந்தது. தற்போது அந்நிலை மாறி, தற்போது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மற்றும் இந்திய இடைநிலைக் கல்வி சான்றிதழ் வாரியத்தின் (ஐசிஎஸ்இ) கீழ் செயல்படும் தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
தவிர, இப்பள்ளிகளில் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்ததாக, பள்ளி, கல்லூரிகள் அதிக அளவில் உள்ள நகரமாக கோவை மாவட்டம் உள்ளது. கோவை மாவட்டத்தில் சுமார் 275-க்கு மேற்பட்ட மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. தவிர சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ வாரியங்களின்கீழ் 50-க்கு மேற்பட்ட பள்ளிகள் மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்றன."சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ ஆகிய வாரியங்களின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் அதிகாரியாக பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்படுவார்' என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.அதைத் தொடர்ந்து, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் இப்பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான முதற்கட்டப் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது."தமிழக அரசின் கல்விக் கட்டண நிர்ணயச் சட்டம், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளையும் கட்டுப்படுத்தும்' என்றும், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இதனிடையே, கோவையில் உள்ள சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகள் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை முன்கூட்டியே தொடங்கும் வகையில் தற்போது விண்ணப்பங்களை அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும், தமிழக அரசின் கல்விக் கட்டண நிர்ணயச் சட்டத்தின் கீழ் அல்லாமல் கூடுதலாக கல்விக் கட்டணம் வசூலிப்பதாகவும், எல்கேஜி வகுப்புக்கு கல்விக்கட்டணம், நன்கொடை என சுமார் ரூ. 1 லட்சம் வரை வசூல் செய்வதாகவும், பெயர் குறிப்பிட விரும்பாத பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர்.விதிமீறும் சிபிஎஸ்இ பள்ளிகள்: அதேநேரத்தில், மத்திய இடைநிலைக் கல்வி வாரிய விதிகளின்படி, பள்ளிகளுக்கு முதல் வகுப்பில் இருந்து 12- ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடத்த மட்டுமே இணைப்பு வழங்கப்படுகிறது.சிபிஎஸ்இ விதிமுறைகள் இவ்வாறிருக்க, எல்கேஜி, யுகேஜி போன்ற மழலையர் வகுப்புகளுக்கு எவ்வாறு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.சிபிஎஸ்இ பள்ளிகளில் ஒவ்வொரு கல்வியாண்டிலும் மாணவர் சேர்க்கை என்பது, அந்த வருடத்தின் தொடக்கத்தில், அதாவது பிப்ரவரி மாதத்தில் தான் தொடங்குகிறது. அதே நேரத்தில் சிபிஎஸ்இ பள்ளிகளில் முதல் வகுப்பில் இருந்து தான் வகுப்புகளை நடத்த இணைப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு எந்த அடிப்படையில் சிபிஎஸ்இ பள்ளிகள் மாணவர் சேர்க்கை நடத்துகிறன என்பது கேள்விக்குறியாக உள்ளதாக கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.இயக்குநர் விளக்கம்: இதுதொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ராமேஸ்வர முருகனிடம் கேட்டபோது, "சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் எல்கேஜி,யுகேஜி வகுப்புகளுக்கு முன்கூட்டியே மாணவர் சேர்க்கை நடத்துவது குறித்துவிசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி