தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான இரண்டாம் பருவ பாடங்கள் வீடியோ வடிவில்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 11, 2014

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான இரண்டாம் பருவ பாடங்கள் வீடியோ வடிவில்...


அன்புமிக்க ஆசிரியர்களுக்கு வணக்கம்!


திருச்சி மாவட்டம், தொட்டியம் ஒன்றியம், களத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் திரு.குருமூர்த்தி அவர்கள்
1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பாடங்கள் (கணிதம் தவிர) தொடர்பான வீடியோ காட்சிகளை பல்வேறு இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து, பாடப்பகுதிக்கு உரிய விளக்கங்களுடன் கூடிய வீடியோ காட்சிகளாக தயார் செய்துள்ளார்.
இவர் தயாரித்துள்ள வீடியோ காட்சிகளை பார்வையிட்ட திருச்சி மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு.பாரி அவர்கள் , இவரை பாராட்டியதுடன் மட்டுமல்லாமல் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல ஒன்றியங்களில் இந்த வீடியோ காட்சிகளை காண செய்ததன் அடிப்படையில் பெரும்பாலான பள்ளி தலைமை ஆசிரியர்கள் இந்த வீடியோ குறுந்தகட்டை வாங்கி தங்கள் பள்ளிகளில் பயன்படுத்தி பயன் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிட தக்கது.

இவர் தயாரித்துள்ள முதல் பருவத்துக்கான வீடியோ குறுந்தகட்டை நமது Trs Trichy முகநூல் , மற்றும் பல்வேறு கல்விசார் இணைய தளங்கள் செய்திகள் வெளியிட்டதன் அடிப்படையில் பல ஆசிரியர்கள் இவரின் குறுந்தகட்டை வாங்கி தங்கள் பள்ளிகளில் பயன்படுத்தியதுடன் மட்டுமல்லாது இவரின் உழைப்பை வியந்து பாராட்டினர் என்பது குறிப்படத்தக்கது

1,2,3,4,5 ஆம் வகுப்புகளுக்கு தலா ஒரு குறுந்தகடு வீதம் 5 குறுந்தகடுகளின் விலை ரூபாய்.200/- மட்டுமே. (குரியர் செலவு உட்பட).

மேற்கண்ட குறுந்தகடுகளை வாங்க விரும்புவோர் திரு.குருமூர்த்தி அவர்களின் தொலைபேசி எண்ணை மாலை 6 மணிக்கு மேல் தொடர்பு கொள்ளவும்

குருமூர்த்தி அவர்களின் தொலைபேசி எண் 9791440155

ஆசிரியர் திரு.குருமூர்த்தி, தான் தயாரித்துள்ள வீடியோ காட்சிகள் மூலம் தனது மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதை தான் இந்த படத்தில் காண்கிறீர்கள்!

1 comment:

  1. வாழ்த்துகள்

    தங்கள் குருந்தகடுகள் நன்றாக இருந்தது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி