சிதம்பரத்தைச் சேர்ந்த பேராசிரியருக்கு இந்திராகாந்தி தங்க பதக்க விருது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 23, 2014

சிதம்பரத்தைச் சேர்ந்த பேராசிரியருக்கு இந்திராகாந்தி தங்க பதக்க விருதுசிதம்பரத்தைச் சேர்ந்த பேராசிரியர் டி.விஸ்வலிங்கத்திற்கு (படம்) புதுதில்லி குளோபல் எக்கினாமிக் புகாரகரஸ் மற்றும் ரிசர்ச் பவுன்டேஷன் அமைப்பின் இந்திராகாந்தி சத்பவனா தங்கப்பதக்க விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரத்தைச் சேர்ந்த பேராசிரியர் டி.விஸ்லிங்கம் திருவாரூர் திரு.வி.க அரசு கலைக்கல்லூரி முதல்வராக பணியாற்றுகிறார். இவருக்கு புதுதில்லியைச் சேர்ந்த குளோபல் எக்கனாமிக் புராகரஸ் மற்றும் ரிசர்ச் அசோசியேஷன் என்ற அமைப்பு சிறந்த பணிக்கான இந்திராகாந்தி சத்பவானா கோல்ட் மெடல் அவார்டு வழங்கியுள்ளது. பெங்களூரில் நவ.19-ம் தேதி நடைபெற்ற விழாவில் பேராசிரியர் டி.விஸ்வலிங்கத்திற்கு, முன்னாள் கர்நாடக மாநில ஆளுநர் வி.எஸ்.மாலிமத் விருதினை வழங்கி கவுரவித்தார்.

பேராசிரியர் டி.விஸ்வலிங்கம் 32 ஆண்டுகளாக சிதம்பரம், நாமக்கல், காட்பாடி, சைதாப்பேட்டை குடியாத்தம் திருவாரூர், அரசு கல்லூரிகளில் விரிவுரையாளராகவும், பேராசிரியராகவும், கல்லூரி முதல்வராகவும் பணியாற்றி வருகிறார். ஓராண்டு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

3 comments:

 1. பேராசிரியருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ம.கோபி
  வேலூர் மாவட்டம்
  [சைதபேட்டை M.Phil (Education) 2001-2002 ]

  ReplyDelete
 2. congratulation sir,i am Ravichandran old student M.Ed.,(2007) for Institute of Advanced Study in Education,Saidapet.Chennai.

  ReplyDelete
 3. congratulation sir,i am Ravichandran old student M.Ed.,(2007) for Institute of Advanced Study in Education,Saidapet.Chennai.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி