உலோகங்கள் துருப்பிடிக்காமல் தடுக்க வெள்ளைப்பூண்டு சாறு:பேராசிரியர் கண்டுபிடிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 24, 2014

உலோகங்கள் துருப்பிடிக்காமல் தடுக்க வெள்ளைப்பூண்டு சாறு:பேராசிரியர் கண்டுபிடிப்பு

“ உலோகங்கள் துருபிடிக்காமல் இருப்பதற்கு, வெள்ளைப்பூண்டு' சாறு உதவி புரிகிறது” என திண்டுக்கல் ஆர்.வி.எஸ். பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி பேராசிரியர் எஸ்.ராஜேந்திரன் தெரிவித்தார்.

தொழிற்சாலைகளில் இரும்பு மற்றும் உலோக பொருட்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சைக்கிள், இருசக்கர மோட்டார் வாகனம், பீரோ, இரும்பு, உலோக 'வாஷ் பேசின்' ஆகியவை மக்கள் தினசரி பயன்பாடுகளில் உள்ளன.

உப்புத் தண்ணீராலும், அதிகபடியான ஈரப்பதக்காற்றாலும் அதிவிரைவில் உலோகங்கள் துருப் பிடித்து திறன் குறைந்துவிடுகிறது. உலோகங்கள் துருப்பிடிப்பதை வெள்ளைப் பூண்டுகளின் சாற்றைக் கொண்டு முழுமையாக குறைத்துவிடலாம்” என பேராசிரியர் கண்டுபிடித்துள்ளார். இவர் 250க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதி வெளியிட்டுள்ளார்.

200 க்கும் மேற்பட்ட 'உலோகங்களின் அரிமானம்' பற்றிய ஆய்வு கட்டுரைகளை அறிவியல் கருத்தரங்குகளில் சமர்பித்துள்ளார்.இதற்காக மும்பையில் நடைபெற்ற , கார்கான்-2014 உலக அரிமான மாநாட்டில், நேஷனல் அசோசியேஷன் ஆப் காரிசன் இன்ஜினியர்ஸ் இன்டர்நேஷனல் கேட்வே”யின் இந்திய பிரிவு, பேராசிரியர் ராஜேந்திரனுக்கு தேசிய விருது வழங்கி கவுரவித்துள்ளது.

அவர் கூறுகையில், “பாஸ்போனிக் அமிலம், டிரைசோடியம் சிட்ரேட், சோடியம் பொட்டாசியம் டாட்ரேட், கால்சியம் குளுக்கோனேட் போன்ற வேதிப்பொருட்களோடு 'கார்னிக் எக்ஸ்ராக்ட்' எனப்படும் வெள்ளைப்பூண்டுகளின் சாறுகளையும் சேர்த்து நொதிக்க வைக்க வேண்டும். இதில் கிடைக்கும் சாறை துருப்பிடித்த பகுதிகளில் ஊற்றினால், துருப்பிடித்த பகுதிகள் முற்றிலும் மறைந்து உலோகத்தின் ஒரிஜினல் தன்மை கிடைத்துவிடும். ” என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி