சான்றிதழ் நகல்களில் சுயச் சான்று போதுமானது: யுஜிசி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 10, 2014

சான்றிதழ் நகல்களில் சுயச் சான்று போதுமானது: யுஜிசி


சான்றிதழ்களின் நகல்களில் மாணவர்களின் சுயச் சான்று போதுமானது என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது. இதுகுறித்து யுஜிசி வெளியிட்ட அறிவிப்பு:

ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டதுபோல, உண்மையான சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும் இடங்களில் மாணவர்களிடம் சுயச் சான்று செய்த மதிப்பெண்சான்றிதழ்கள், பிறப்பு சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றைப் பெற்றால் போதுமானது.உண்மைச் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படாத இடங்களில் மட்டும், அங்கீகரிக்கப்பட்ட அரசு அலுவலரின் அத்தாட்சியுடன் கூடிய சான்றிதழ்களைச் சமர்ப்பிக்கும் முறையைத் தொடரலாம். இதை அனைத்து பல்கலைக்கழகங்களும், கல்வி நிறுவனங்களும் உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவந்து, அடுத்த 15 நாள்களுக்குள் அதுதொடர்பான அறிக்கையை யுஜிசிக்கு சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி