பழங்குடியின சிறுவர்களுக்கு கால்பந்து பயிற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 1, 2014

பழங்குடியின சிறுவர்களுக்கு கால்பந்து பயிற்சி

பழங்குடியின சிறுவர்கள் மத்தியில், கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்க, ஆஸ்திரேலிய பயிற்சியாளரை கொண்டு, சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே, அம்பலமூலா பகுதியில் செயல்படும், நீலகிரி- வயநாடு

ஆதிவாசிகள் நலச்சங்கம் சார்பில், பள்ளி செல்லாமல் இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து, அவர்களை பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் பள்ளியில் சேர்ந்தவர்களில், 100 மாணவர்களுக்கு, கால்பந்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் துவக்க விழாவில், ஆஸ்திரேலிய வாழ் இந்தியரான, கால்பந்து பயிற்சியாளர் பிஜூ பங்கேற்று பேசுகையில், ''பழங்குடியின மாணவர்கள், கால்பந்து விளையாட்டில் ஆர்வத்தை

ஊக்குவித்து, கல்வியறிவையும் மேம்படுத்த முடியும். போட்டிகளில் பங்கேற்கும் வகையில் முழுமையான பயிற்சி அளிக்கப்படும்,'' என்றார்.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி