அம்மாவுக்காக ஒரு கண்டுபிடிப்பு ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 1, 2014

அம்மாவுக்காக ஒரு கண்டுபிடிப்பு !

‘‘என் அம்மா, அப்பா ரெண்டு பேருமே கூலி வேலை யும் வீட்டு வேலையும் செய்றவங்க. சில சமயம் அம்மாகூட போவேன். அப்போ, அம்மா ஒட்டடை அடிக்கிறதுக்கு படும் கஷ்டத்தைப் பார்த்திருக்கேன். ஸ்கூலில் அறிவியல் கண்டுபிடிப்புக்கான போட்டியை அறிவிச்சப்போ, ‘ஆட்டோமேட்டிக் ஒட்டடை மெஷின் கண்டுபிடிக்கணும்’னு முடிவு செய்தேன். அதுதான், இந்தப் பரிசை வாங்கிக்கொடுத்திருக்கு” என்று உற்சாகமாகச் சொல்கிறார் யோகேஷ்.
தேனி மாவட்டம், வடுகபட்டி வேளாளர் நடுநிலைப் பள்ளி யில் 8-ம் வகுப்புப் படிக்கிறார் யோகேஷ். ‘நகரும் தானியங்கி ஒட்டடை இயந்திரம்’ கண்டுபிடித்து, மாநில அளவில் தங்கப் பதக்கம் பெற்றிருக்கிறார்.

இந்தத் தானியங்கி ஒட்டடை இயந்திரம், நீண்ட பைப்பில் சிறிய மின்மோட்டார் பொருந்தியது. அதை இயக்கியதும் நாடா மூலம் மேல் பகுதியில் இருக்கும் உருளை இயங்குகிறது. அங்கே இருக்கும் பிரஷ், ஒட்டடை அடிக்கிறது. தரையில் நின்ற இடத்திலேயே உயரத்தில் இருக்கும் ஒட்டடையை நீக்கலாம்.



தேனி மாவட்டத்தில், 183 பள்ளிகளுக்கு இடையே நடந்த போட்டியில் வெற்றிபெற்று, மாநிலப் போட்டிக்குத் தகுதி பெற்றார் யோகேஷ். ‘‘800 பள்ளிகள் கலந்துகொண்ட மாநில அளவிலான போட்டியில், தங்கப் பதக்கம் கிடைச்சது. அதன் மூலம் டெல்லியில் நடந்த தேசிய அறிவியல் கண்காட்சிக்குத் தேர்வானேன். அங்கே பரிசு கிடைக்கவில்லை என்றாலும், ‘தமிழ்நாட்டின் ஒரு மூலையில் இருக்கும் கிராமத்தில் இருந்து தலைநகர் வரைக்கும் போய் வந்திருக்கேன். அடுத்த முறை நிச்சயம் பரிசு கிடைக்கும்’னு நிறையப் பேர் பாராட்டினாங்க” என்ற யோகேஷ் குரலில் சந்தோஷமும் வெட்கமும் மின்னியது.

தானியங்கி ஒட்டடை அடிக்கும் இயந்திரம் தவிர, ‘நடக்கும் அதிர்வின் மூலம் கிடைக்கும் மின்சாரம்’ என்கிற கருவியையும் கண்டுபிடித்திருக்கிறார் யோகேஷ். வீட்டுக்குள் வரும் வெப்பதைக் குறைக்கவும் யோசனை சொல்கிறார்.

‘‘நம் பாதம் தரையில் படும்போது ஏற்படும் அழுத்தத்தைக்கொண்டு, ‘பீசோ எலெக்ட்ரிக்’ என்ற விளைவின் மூலம் மின்சாரம் கிடைக்கச் செய்யலாம். வேங்கை மரம், நாட்டுக் கருவேல மரம், முருங்கை மரம் ஆகியவற்றின் பிசின், மரவள்ளிக்கிழங்கு மாவு கலந்து, வீட்டின் மேல் பகுதியில் இடும்போது, புறஊதாக்கதிர்களைத் தடுத்து, சூரிய ஒளியினால் ஏற்படும் வெப்பத்தைக் குறைக்கலாம்” என்கிறார், இந்த வில்லேஜ் விஞ்ஞானி.

12 comments:

  1. PG CANDIDATES PLS CONTACT rajarajacholanveera@gmail.com

    ReplyDelete
  2. FLASH NEWS : TET 5% மதிப்பெண் தளர்வு பணிடங்கள் நிரப்ப இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் நோட்டிஸ்
    5% மதிப்பெண் தளர்வு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் ஆசிரியர் தேர்வு வாரியம் பணியிடங்கள் நிரப்புவதற்கு இடைக்கால தடை விதித்து நோட்டிஸ் இதன் முழு விவரம் அடங்கிய அதன் நகல் தற்போது நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது

    இந்த வழக்கு பதிந்தற்கு முக்கிய காரணம் நமது குருகுலம்.காம் வலைதளத்தின் வழிகாட்டுதல் தான்

    ReplyDelete
  3. தேனி மாவட்டத்துக்கு பெருமை சேர்த்த தங்கத்துக்கு

    நன்றிகளும் வாழ்த்துகளும்............

    ReplyDelete
  4. தேனி மாவட்டத்துக்கு பெருமை சேர்த்த தங்கத்துக்கு

    நன்றிகளும் வாழ்த்துகளும்............

    ReplyDelete
  5. 5% மதிப்பெண் தளர்வு மீண்டும் பெற விரும்வோர் கவனத்திற்கு
    5% மதிப்பெண் தளர்வு மூலம் வெற்றி பெற்றவர்களுக்கு அந்த வெற்றியை உறுதி படுத்த தொடர்பு கொள்ளுங்கள்

    www.gurugulam.com வலைதள இமெயில் முகவரியான gurugulam.com@gmail.com அனுகவும். 90க்கு மேற்பட்டவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது இது தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளில் வேலைக்கு அமர்பவர்களுக்கும் இனிவரும் பணிநியமனங்களில் 5% மதிப்பெண் தளர்வை உறுதி படுத்துவதற்கும் உண்டானது

    ReplyDelete
  6. My dear friends.
    Sorry for interfere.

    தேர்வை ஆசிரியர் தேர்வு நடத்தினாலும். சலுகை வழங்கும் அதிகாரம் அந்தந்த மாநில அரசைப்பொருத்தது.
    எனவே. புதுச்சேரியில் உள்ளது போல் தமிழக அரசும் நடக்கவேண்டிய அவசியம் இல்லை.
    மேலும். சலுகை வழங்கும் அதிகாரம் TRB க்கு இல்லை.
    அரசு எந்தவிதமாக அரசாணை வெளியிட்டாலும் அதை அப்படியே கடைபிடிப்பது மட்டுமே இதன் வேலை.FOR INFORMATION ONLY.
    THANK YOU FRIENDS. ALL THE VERY BEST.

    ReplyDelete
    Replies
    1. சார் என்ன சார் இப்படி மன்னிப்பு கேட்டு சொல்றிங்க... இது எதார்த்தம் இதைதான் பதிவு செய்கிறீர்கள். நன்றிகள் சார்.....

      Delete
  7. சூப்பரப்பு!!!!!!

    ReplyDelete
  8. சூப்பரப்பு!!!!!!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி