மத்திய அரசின் மாநில போட்டிக்கு பள்ளி அளவிலான தகுதி தேர்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 15, 2014

மத்திய அரசின் மாநில போட்டிக்கு பள்ளி அளவிலான தகுதி தேர்வு.


சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மத்திய அரசின் நீர் வாரியத்தால் நடத்தப்படவுள்ள போட்டிக்கு மாணவர்களை தேர்வு செய்யும் தகுதி போட்டி நடைபெற்றது.
மத்திய நீர் வாரியம் சார்பில் நீரை சேமிப்போம்,வருங்காலம் காப்போம் என்ற தலைப்பில் நீர் வண்ண பூச்சு ஓவிய போட்டிகள் நடைபெற்றது.

6,7,8 வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் இந்த போட்டியில் பள்ளி அளவில் கலந்துகொண்ட 80க்கும் மேற்பட்ட மாணவர்களில் மாநில அளவில் கலந்துகொள்ள மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.போட்டிக்கான நிகழ்ச்சியில் ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .தேவகோட்டை முதல் தொகுதி நகராட்சிப் பள்ளி தலைமை ஆசிரியை காளீஸ்வரி முன்னிலை வகித்து நீர் சேமிப்பது குறித்து விளக்கி பேசினார்.போட்டியில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகளில் மூவரை தேர்வு செய்து பரிசு வழங்கப்பட்டது.8ம் வகுப்பு மாணவி மங்கையர்க்கரசி முதல் பரிசும்,7ம் வகுப்பு மாணவி தனம் இரண்டாம் பரிசும்,8ம் வகுப்பு மாணவி பூஜா மூன்றாம் பரிசும் பெற்றனர்.நிறைவாக ஆசிரியை முத்து மீனாள் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி