சிறப்பு கவுன்சிலிங் நடத்த ஆசிரியர்கள் வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 19, 2014

சிறப்பு கவுன்சிலிங் நடத்த ஆசிரியர்கள் வலியுறுத்தல்

'கல்வித் துறைக்கு மாறுதல் கேட்டு காத்திருக்கும் கள்ளர் பள்ளி ஆசிரியர்களுக்கு நவ., 25க்கு முன் சிறப்பு கவுன்சிலிங் நடத்த வேண்டும்,' என இணை இயக்குனர் அமுதவல்லியிடம் ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.

தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க கள்ளர் பிரிவு மாநில செயலாளர் அன்பழகன், மாவட்ட செயலாளர் ஸ்ரீரங்கநாதன் கூறியதாவது: மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கள்ளர் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் 109 பேர் பள்ளிக் கல்வித் துறை மாறுதல் கேட்டு ஆறு ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். கள்ளர் பிரிவில் 140 ஆசிரியர் காலிப் பணியிடங்களும் உள்ளன. தற்போது இத்துறையில் காலியான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி நியமன கவுன்சிலிங் நவ., 25, 26ல் நடக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கவுன்சிலிங் நடத்தும் முன் கல்வி துறைக்கு மாற்றம் கேட்டு சொந்த மாவட்டங்களுக்கு திரும்புதற்காக காத்திருக்கும் 109 ஆசிரியர்களுக்கு துறை மாறுதல் உத்தரவுகள் வேண்டும். நவ.,25, 26ல் நடக்கும் கவுன்சிலிங்கில் அதிக இடங்கள் காலியாக இருக்கும். இதுகுறித்து இணை இயக்குனரிடம் வலியுறுத்தினோம், என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி