திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக் கோரி கன்னியாகுமரியில் தமிழ் அறிஞர்கள் ஆர்ப்பாட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 24, 2014

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக் கோரி கன்னியாகுமரியில் தமிழ் அறிஞர்கள் ஆர்ப்பாட்டம்


திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தி, கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்.

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தி, கன்னியாகுமரியில் தமிழறிஞர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர் தமிழ்த்தாய் அறக்கட்டளை, குமரி மாவட்ட தமிழ் நல எழுத்தாளர் சங்கம், தமிழ்நாடு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பினர் இணைந்து காந்தி மண்டபம் முன் நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திருக்குறள் புலவர் நாவை.சிவம், தமிழ்த்தாய் அறக்கட்டளை பொதுச் செயலர் த.உடையார்கோயில் குணா ஆகியோர் தலைமை வகித்தனர்.

திருவள்ளுவர் ஞான மன்றத் தலைவர் புலவர் சி.பன்னீர்செல்வம் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தார். குளித்தலை தமிழ்ப் பேரவைத் தலைவர் முனைவர் கடவூர் மணிமாறன், ஆய்வறிஞர் சிவ.பத்மநாபன், தமிழ்த்தாய் அறக்கட்டளை துணைத் தலைவர்கள் பா.கோ.நாராயணசாமி, குமரி மாவட்ட தமிழ் நல எழுத்தாளர் சங்கத் தலைவர் தியாகி கோ.முத்துக்கருப்பன், செயலர் சி.பா.அய்யப்பன்பிள்ளை, முத்தமிழ் முரசு ஆசிரியர் மு.சுப.கருப்பையா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழறிஞர்கள் கோவை கவிஞர் குடியாத்தம் குமணன், கள்ளக்குறிச்சி எஸ்.கே.மணி, கிருஷ்ணகிரி கவிஞர் தகடூர் தமிழ்க்கதிர், நாகை கவிஞர் ஆவராணி ஆனந்தன், ராமநாதபுரம் கவிஞர் மா.தே.கலைச்செல்வன், நாகர்கோவில் வழக்குரைஞர் ஆர்.ராதாகிருஷ்ணன், க.சத்தியமூர்த்தி, தஞ்சை க.ராமலிங்கம், திருச்சி க.மல்லிகா, சே.சுரேஷ், க.அமலதாஸ், த.தாமஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருக்குறளை தேசிய நூலாக்க வலியுறுத்தி கடந்த 23.11.2003-இல் கன்னியாகுமரியில் இருந்து சென்னை கோட்டை வரை நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் 13.4.2005-இல் இக்கோரிக்கைக்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், திருக்குறளை பன்மொழிகளில் ஆய்வு செய்து புதுதில்லியில் கருத்தரங்கம் நடத்துவது எனவும், அனைத்து தமிழ் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுப்பது எனவும் ஆர்பாட்டத்தின் முடிவில் தீர்மானிக்கப்பட்டது. தமிழ்க்குழவி ஆ.விசுவநாதன் வரவேற்றார். தமிழாலயம் நா.இனியன்தம்பி நன்றி கூறினார்.

8 comments:

  1. அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் மற்றும் எனது நண்பர்களுக்கும் காலை வணக்கம்

    ReplyDelete
  2. உண்மையான கடவுள் திருவள்ளுவர் மட்டுமே , திருவள்ளுவரை உண்மையாக நேசித்தால் உங்களுக்குள் கட்டாயம் ஒரு நல்ல மாற்றம் ஏற்படும்
    உலகத்தில் உள்ள அனைவருக்கும் எப்படி வாழ்க்கை வாழ வேண்டும் என்று கி.மு. 31 லேயே உரைக்க கூறியவர் நமது கடவுள் திருவள்ளுவர்

    ReplyDelete
  3. திருக்குறள் தமிழர்களின் புனித நூலாக அறிவிக்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. திருக்குறள் தமிழர்களுக்கு மட்டும் கிடையாது உலகத்தில் உள்ள அனைவருக்கும் பொதுவானது அதனால்தான் திருக்குறள் உலகப்பொதுமறை. .தயவுசெய்து திருக்குறளையும் தமிழில் உள்ளது என்ற காரணத்தினால் சிறுமை படுத்தி விடாதீர்கள் தனம் சகோதரரே

      நான் கூறியது பிழை எனில் மன்னிக்கவும்
      நன்றி

      Delete
    2. நன்றி நண்பரே ...திருக்குறள் தமிழில் மட்டும் இல்லை ...அது இலத்தீன் ஆங்கிலம் கிரேக்கம் இவைகளில் உள்ளது இப்படி பழமையான திருக்குறள் வடஇந்திய கல்வி பாடத்திட்டத்தில் இதுவரை இல்லாத நிலையில் உள்ளது தற்சமயம்தான் பாடத் திட்டத்தில் சேர்ப்பதாக தகவல்.

      Delete
  4. Akilan sir i am relax appoint teacher any problem sc jugment sir

    ReplyDelete
  5. nichayam payappada vendiya avasiyam ellai brother

    sc judgement yarukkum pathippu ellam than varum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி