ஆகாஷ் ஏவுகணை சோதனை இரண்டாம் முறை வெற்றி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 19, 2014

ஆகாஷ் ஏவுகணை சோதனை இரண்டாம் முறை வெற்றி

தரையிலிருந்து பாய்ந்து சென்று, விண்ணில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும், 'ஆகாஷ்' ஏவுகணையின் சோதனை, நேற்று இரண்டாவது நாளாக வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

ஒடிசா மாநிலம் பாலாசோரில் உள்ள தளத்திலிருந்து செலுத்தப்பட்ட ஏவுகணை, நிர்ணயித்த இலக்கை வெற்றிகரமாக தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். நேற்று முன்தினமும் இதே ரக ஏவுகணையின் சோதனையின் நடைபெற்றது. இந்த வாரம் முழுவதும், இந்த ரக ஏவுகணைகளின் சோதனை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகாஷ் மத்திய தர ஏவுகணையானது, 60 கிலோ வெடிபொருட்களுடன் தரையிலிருந்து புறப்பட்டுச் சென்று, 25 கி.மீ., தூரத்தில், வான்வெளியில் உள்ள விமானம் போன்றவற்றை தாக்கி அழிக்க வல்லது. ஒரே நேரத்தில், பல இலக்குகளையும், இதன்மூலம் அழிக்க முடியும். ஒருங்கிணைந்த ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த ரக ஏவுகணைகளை, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கி உள்ளது. வான்வெளி யில் இருந்து தரையில் உள்ள இலக்கை நோக்கி வீசக்கூடிய இந்த ரக ஏவுகணைகள் ஏற்கனவே ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி