கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிந்து 4 மாதங்களுக்கு மேலாகியும்இதுவரை தேர்வு முடிவு வெளியிடப்படாததால் தேர்வர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்பட்டது.
காலியாக இருந்த 2,342 காலிப்பணியிடங்களுக்கு மாநிலம் முழுவதிலிருந்தும் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வை எழுதினர். தேர்வு எழுதிய ஒருசில நாள்களிலேயே கீ ஆன்சர் எனப்படும் மாதிரி விடைத்தாளையும் தேர்வாணையம் வெளியிட்டது. தேர்வு முடிவுகள் 3 மாதங்களில் வெளியாகிவிடும் என தேர்வாணையம் அறிவித்திருந்தது. ஆனால், தேர்வு முடிந்து 4 மாதங்கள் ஆகியும் இதுவரை தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுவதால் தேர்வெழுதியவர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். இதுகுறித்து, தேர்வெழுதியவர்கள் கூறியதாவது: தேர்வாணையம் வெளியிட்ட மாதிரி விடைகளை வைத்து பார்க்கும்போது எங்களுக்கு நிச்சயம் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, தேர்வு முடிவுக்காக காத்திருக்கிறோம். தேர்வு முடிந்த 3 மாதத்தில் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 4 மாதங்களாகியும் தேர்வு முடிவு வெளியாகவில்லை. கட்டாயம் தேர்ச்சி பெற்று வேலை வாங்கி விடலாம் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளவர்கள் வேறு பணிக்கு செல்லாமல் தேர்வு முடிக்காக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், அடுத்தபடியாக குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பும் வெளியாகிவிட்டது. கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் வெற்றி பெற்று விட்டால் மீண்டும் குரூப்-4 தேர்வை எழுத வேண்டி இருக்காது. குறைந்தபட்சம் குரூப்-4 தேர்வுக்கு முன்பாவது கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவுகளை வெளியிட அரசுப் பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் அல்லது முன்கூட்டியே கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவு வெளியானால் பயிற்சி மையத்திலாவது சேர்ந்து குரூப்-4 தேர்வுக்கு தயார் ஆகலாம் என்றனர்.
We will expect may be this month?
ReplyDeleteWhat happened to group3 result? Exam conducted on August 3.8.2013.
ReplyDeletego to tnpscexams.net
Deletewhat is in tnpscexams.net??? Kalai???
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete