பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 132 மாணவர்கள் பலி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 17, 2014

பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 132 மாணவர்கள் பலி.


பாகிஸ்தானின் பெஷாவர் நகரில், ராணுவப் பள்ளிக்குள் நுழைந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 132 மாணவர்கள் உட்பட 141 பேர் உயிரிழந்தனர்.
பெஷாவரின் வார்சாக் சாலையில் உள்ள ராணுவப் பள்ளியில் பின்பக்கமாக நுழைந்த 9 பயங்கரவாதிகள், அங்கிருந்த மாணவர்களையும் ஆசிரியர்களையும் கண்மூடித்தனமாக சுட்டனர். பயங்கரவாதிகள் தங்கள் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளையும் வெடிக்கச் செய்தனர். பள்ளியை சுற்றி வளைத்த ராணுவத்தினர், அங்கிருந்த தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர். 8 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த சண்டையில் 9 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். இறுதியாக பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த 960 மாணவர்கள் மீட்கப்பட்டனர். பயங்கரவாதிகள் நடத்திய இந்த கொடூரமான தாக்குதலில் 132 மாணவர்கள் உயிரிழந்தனர்.

118 மாணவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் பள்ளியில் பணிபுரிந்த 9 பேரும் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு தெஹரீக்-ஈ-தலிபான் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. தங்களுக்கு எதிராக பாகிஸ்தான் அரசால் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அந்த இயக்கம் தெரிவித்துள்ளது.

9 comments:

 1. 132 மாணவ சகோதரர்கள் , 9 ஆசிரியர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்திப்போம்

  ReplyDelete
 2. காயமடைந்த 118 சகோதரர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுவோம்

  ReplyDelete
 3. காயமடைந்த 118 சகோதரர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுவோம்

  ReplyDelete
 4. இதுபோல் மீண்டும் உலகில் எந்த நாட்டிலும் நடக்க விடக்கூடாது என சபதம் ஏற்போம்


  ReplyDelete
 5. புத்தன் - புத்த மதத்தை சேர்ந்தவர் அல்ல

  ஏசு கிருஸ்து - கிருத்தவ மதத்தை சேர்ந்தவர் அல்ல

  முகமது - இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவரே அல்ல

  அவர்கள் கூறியது எல்லாம் - அன்பு என்ற ஒரு மதத்தை தான் போதித்தனர் - ஆனால் பாருங்கள் தன் வசதிக்கேற்ப்ப அதில் பெப்பர் சால்ட் தூவி மத வெறியர்களாய் மாற்றியது சந்தர்ப்பவாதி மனிதர்கள் தான்.

  எனது மதம் மட்டுமே சிறந்தது.
  அது மட்டுமே எனக்கு வேண்டும்"
  எனச் சொல்லும்......

  ஒரு இந்துவோ அல்லது
  ஒரு இஸ்லாமியரோ அல்லது
  ஒரு கிருத்துவரோ அல்லது
  மற்ற மதத்தவரோ...,

  ஆபத்து என்றவுடன் ரத்த வங்கிகளில்
  ஏனய்யா 'O' நெகடிவ் கொடுங்க...
  'B' பாசிட்டிவ் கொடுங்கனு கேக்குறிங்க ?

  "ஒரு யூனிட் இந்து ரத்தம் கொடு" இல்ல...

  "இரண்டு யூனிட் முஸ்லிம் ரத்தம் கொடு" இல்ல...

  "மூணு யூனிட் கிறித்துவ ரத்தம் கொடு" ன்னு
  கேக்க வேண்டியதுதானே.?

  அந்த நொடியில் மதத்தை மறக்கும்
  நீங்கள் ஏன் மற்ற நேரங்களில்
  இறுக்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள் ?

  ReplyDelete
 6. பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் மயங்கி விழும்
  நிலைக்கு வந்து விட்டான். தாகத்தால் உயிர் போய்விடுமோ என்று நினைத்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது.

  மிகவும் கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான். அங்கே ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப்பும், அதன் அருகில் ஒரு ஜக்கில் தண்ணீரும்
  இருந்தன.

  ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "ஜக்கில் உள்ள தண்ணீரை அந்தப் பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச்
  செல்லவும்."...

  அந்தப் பம்ப்போ மிகவும் பழையதாக இருந்தது. அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது. அவன் யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது.

  ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்தப் பம்பு இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால், இனி தன்னைப்
  போலத் தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போகத் தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது.

  அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை.
  ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்தத்
  தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க
  ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது.
  தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரையும் நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனமும் நிறைந்திருந்தது.

  நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று
  விடலாகாது.

  இந்தக் காலக் கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது.

  "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம்
  இன்பமயமாகி விடுமல்லவா?

  ReplyDelete
 7. காசு இல்லாமல் போன காமராஜர்
  *************************************************
  டெல்லியில் உலகக் கண்காட்சி நடந்த சமயம். அதன் துவக்க விழாவிற்கு நேருவுடன் காமராஜரும் சென்றிருந்தார். தற்போது பேருந்து நிலையங்களிலும், இரயில் நிலையங்களிலும் வெகு சாதாரணமாய் காணப்படுகிற எடை பார்க்கும் எந்திரம் அந்தக் கண்காட்சியில் அறிமுகமாகியிருந்தது.

  நேரு எந்திரத்தில் ஏறி நின்று, காசு போட்டு எடை பார்த்தார். மத்திய அமைச்சர்கள் பலரும் அவ்வாறே செய்தனர். காமராஜர் சற்றே ஒதுங்கி நின்றிருந்தார்.
  நேரு அவரையும் எடை பார்க்கும்படி கட்டாயப்படுத்தினார். அவரோ மறுத்துவிட்டார். சுற்றி நின்றவர்களுக்கு திகைப்பு, `பிரதமர் கூறியும் இவர் மறுக்கிறாரே' என்று.

  நேரு சொன்னார் `காமராஜர் ஏன் மறுக்கிறார் என்கிற காரணம் எனக்குத் தெரியும். இந்த எந்திரத்தில் ஏறிநின்று போடும் காசுகூட இவரிடம் இப்போது இருக்காது' என்றார். பிறகு காமராஜருக்காகத் தாமே காசு போட்டு எடை பார்த்தார். அவர். கறைபடாத கரம், காசுக்கு ஆசைப்படாத மனம்!

  வாழ்ந்த கல்விக்கடவுள் காமராஜரை போல் வாழனும்


  அவரின் எளிமை உலகில் எவரிடமும் இல்லாதது இவ்வுலகம் காமராஜர் ஐயா வை தலையில் வைத்து கொண்டாடணும்

  ReplyDelete
 8. பிற்போக்குத்தனமாக செயல்படும் தலிபான் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை இஸ்லாமிய நாடுகள் கண்டிப்பதில்லை. பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் வெளிப்படையான கண்டனங்களால் தமது இஸ்லாமிய மதத்தை வெறுப்பு அரசியலாக மாற்றி விடுவார்களோ என்கிற அச்சத்தில் தலிபான்களின் நடவடிக்கைகளை கண்டிப்பதில்லை. இப்படி கூறுவதால் முழு பழியையும் இஸ்லாமியர்கள் மீது திணிப்பது தவறு.

  தலிபான்களை உருவாக்கிய அமெரிக்க ஐக்கிய அரசுகளின் இஸ்லாமிய வெறுப்பை உலக அரங்கில் இஸ்லாமியர்கள் என்றால் தீவிரவாதிகள் என்று பேச வைக்க 130 குழந்தைகள் என்ன? ஆயிரக்கணக்கான குழந்தைகளையும் கொல்லும்படி தூண்டிவிடுவார்கள்.

  இன்று பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட பள்ளி குழந்தைகளின் பின்னே இருப்பது இஸ்லாமியர்கள் கல்வி கற்பதை தடை செய்ய தூண்டிவிடும் தலிபான்கள் என்று நினைத்தால் அது மட்டுமே காரணம் என்று நினைப்பது தவறு.


  நோபல் பரிசு பெற்றபோது மலாலா சொன்னாள்

  "தேசங்களை பாதுகாக்கிறோம் என்று பீரங்கிகளை உருவாக்கும் அரசுகளுக்கு ஒரு பள்ளியை கட்டுவது ஏன் சுலபமாக இருப்பதில்லை?"

  கல்வியை தடை செய்வது மனிதனின் அறிவு விருத்தியை கட்டுப்படுத்த. உலக அரசுக்கள் அனைத்துமே இதில் தீவிரமாய் செயல்படுகிறது. கிழக்கத்திய நாடுகளில் மக்கள் தொகையில் சரிபாதியினருக்கு இன்னும் கல்வி கிடைக்கவில்லை.
  பீரங்கி உருவாக்கம் என்பது ஆயுத விற்பனைக்கு. (பிரான்சிடம் இந்தியா வாங்கிய பீரங்கி கணக்குகளை எதில் சேர்க்க?) உலகம் அமைதியாகவே இருந்தால் எப்படி கலவரம் வரும்? ஆயுதங்களுக்கு எப்படி வேலை இருக்கும். இந்த வேலையைச் தேவைக்கு ஏற்ப செய்வதில் அதிதீவிரம் காட்டும் நாடுகள் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மன் உள்ளீட்ட கூட்டணிகள்.
  பாகிஸ்தானை இந்நோக்கில்தான் உலக அரசுக்கள் கையாளுகின்றன.

  அங்கே நடைப்பெற்ற 130 குழந்தைகளின் படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் போலி அரசியல் வாதிகளை நம்பும் மக்கள் இருக்கும்வரை இஸ்லாமிய வெறுப்பு அரசியலை இதுப்போன்ற உலக அரசுக்களும் அரசியல்வாதிகளும் அழகாக அரங்கேற்றுவார்கள்.

  பலியாவது பொது மக்கள் மட்டுமே!

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி