மின் கட்டணம் 15% உயர்வு: மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 11, 2014

மின் கட்டணம் 15% உயர்வு: மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அறிவிப்பு


தமிழகத்தில் அனைத்து மின் நுகர்வோருக்கும் நாளை முதல் 15 சதவிதம் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் மின் கட்டணங்களை மாற்றியமைப்பது தொடர்பான உத்தேச கட்டண விபரங்களை கடந்த செப்டம்பர் 23ம் தேதி வெளியிட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த கட்டண மாற்றம் குறித்து, சென்னை, திருநெல்வேலி, ஈரோடு நகரங்களில் கடந்த அக்டோபர் மாதம் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றை கருத்தில் கொண்டு, மின் கட்டணம் 12ம் தேதி முதல் அதாவது நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து நுகர்வோர் வகையினருக்கும் 15 சதவீத அளவிற்கு மின் கட்டண உயர்வு இருக்கும் என்றும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. எனினும், நுகர்வோரை பாதிக்காத வகையில் மானியம் வழங்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது.

4 comments:

  1. TNTET CASES HEARING SOON ......

    ReplyDelete
    Replies
    1. Mr.Vijay,
      Soona? Epa hearing ku varuthu?

      Delete
    2. Above 90 ikku eppa nalla thiruppu varum Mr vijay sir????? Ella velai ketaikkada pls

      Delete
  2. உயர்நிலை மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளி நுழைவாயிலில் 10.12.2014 புதன் கிழமை மாலை 5.00 மணியளவில் திரு. வி, வீரமணி அவர்கள் தலைமையிலும் திரு. சி. சரவணன் முன்னிலையிலும் அனைத்து ஆசிரியர்களும் கருப்பு பட்டை அணிந்து “குழந்தைகள் உரிமை” எனக் காரணம் காட்டி ஆசிரியர்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கிய அரசு ஆணைகளை நீக்கக் கோரியும்- தமிழக அரசு அனைத்து ஆசிரியர்களையும் பாதுகாக்கும் வண்ணம் ஆசிரியர் பாதுகாப்பு சட்டம் இயற்றி ஆசிரியர்கள் பணிபுரியும் இடத்தில் பாதுகாப்பும் வழங்க வேண்டும் எனக் கேட்டு கோரிக்கையும், கண்டன ஆர்பாட்டமும் நடைபெற்றது திரு. கோ. பாஸ்கரன் , திரு. ஏ. அந்தோணி ஜோசப் மற்றும் திரு. ஆர். மருதவாணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். திரு,ஜி. செங்குட்டுவன் அவர்கள் நன்றி கூறினார். இதில் 50 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
    :

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி