ஜி.எஸ்.எல்.வி. மாக்-3 ராக்கெட்
ஆளில்லா விண்கலத்துடன் அதிநவீன ஜி.எஸ்.எல்.வி. மாக்-3 சோதனை ராக்கெட் விண்ணில் வியாழக்கிழமை (டிசம்பர் 18) ஏவப்பட உள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்திலிருந்து அன்றைய தினம் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணிக்குள் இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.
மிக அதிக எடை கொண்ட தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்களை எடுத்துச் செல்லும் ஜி.எஸ்.எல்.வி. மாக்-3 ராக்கெட்டுகள் உதவும்.
இந்தச் சோதனை ராக்கெட்டில் ஆளில்லா விண்கலமும் அனுப்பப்பட உள்ளது. மங்கள்யான் விண்கலம் அனுப்பப்பட்டதற்கு அடுத்து மிக முக்கிய விண்கலத் திட்டமாக ஜி.எஸ்.எல்.வி. மாக்-3 சோதனை ராக்கெட் திட்டம் கருதப்படுகிறது.
இந்தச் சோதனை வெற்றியடைந்தால், அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை ஏவும் திறனைப் பெறுவதோடு, விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்திலும் முன்னேற்றம் பெறலாம்.
ராக்கெட் ஏவப்பட்ட 5 நிமிஷங்களில் இந்த விண்கலம் ராக்கெட்டிலிருந்து தனித்துவிடப்படும். தரையிலிருந்து 125 கிலோமீட்டர் உயரத்தில் இந்த விண்கலம் பூமியின் வளிமண்டலத்துக்குள் மீண்டும் நுழையும். ராக்கெட் ஏவப்பட்ட 20 நிமிஷங்கள் கழித்து வங்காள விரிகுடாவில் விண்கலம் பாராசூட் மூலம் மெதுவாக இறக்கப்படும்.
போர்ட் பிளேரிலிருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் கடலில் விழுந்த விண்கலத்தை கடலோரக் காவல் படை மீட்கும். வளிமண்டலத்துக்குள் நுழையும்போது ஏற்படும் 1,600 டிகிரி வெப்பத்தைத் தாங்கும் வகையில் விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.
வளிமண்டலத்துக்குள் விண்கலம் நுழையும்போது என்னென்ன பிரச்னைகள் ஏற்படுகின்றன என்பதை அறிவதற்காகவும், அதற்கேற்ப விண்கலத்தை மாற்றியமைக்கவும் இந்த விண்கலம் அனுப்பப்படுகிறது.
விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தின் முதல் படியாக இந்தத் திட்டம் அமையும். ராக்கெட் ஏவப்படும் தேதியை இஸ்ரோ அறிவித்திருந்தாலும், அதற்கான கவுன்ட் டவுன் விவரங்கள், செலுத்தப்படும் துல்லியமான நேரம் போன்றவற்றை இஸ்ரோ இன்னும் அறிவிக்கவில்லை.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி