2016ம் ஆண்டு பொதுத்தேர்வுக்கு வகுப்புகள் : பிளஸ் 1, ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் கதறல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 4, 2014

2016ம் ஆண்டு பொதுத்தேர்வுக்கு வகுப்புகள் : பிளஸ் 1, ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் கதறல்


         தனியார் மெட்ரிக் பள்ளிகளில், பிளஸ் 1 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, அடுத்த கல்வியாண்டில் நடைபெறஉள்ள பொதுத்தேர்வுக்கு, இந்த மாதம் முதலே, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பாடங்கள் எடுப்பதாக புகார் எழுந்துள்ளது. இதற்கான புத்தகங்களை தேடி மாணவர்களின் பெற்றோர் அலைந்து கொண்டு இருக்கின்றனர்.


             போட்டி நிறைந்த இந்த உலகில், யார் முன்செல்வது என்ற போட்டி அனைத்து வகையான நிறுவனங்களிடமும் உள்ளது. அந்த வகையில், கல்வி சார்ந்த நிறுவனங்களிடையே போட்டி இருப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால், மாணவர்களை தங்கள் இசைவுக்கேற்ப வளைத்து, பெற்றோரின் மன அழுத்தம் அதிகரிக்க, இந்த கல்வி நிறுவனங்களின் போட்டியும் செயல்பாடும் முக்கிய காரணியாக அமைகிறது.
             கல்வி நிறுவனங்களின் போட்டியால், எதிர்வரும் கல்வி ஆண்டில் நடைபெறும் பொதுத்தேர்வுக்கான பாடங்களை, நடப்பு கல்வி ஆண்டிலேயே எடுக்க வைத்து, தங்களை முன்னிறுத்துகின்றன. தனியார் பள்ளிகளின் இத்தகைய செயல்பாடுகளால், மாணவர்களுக்கு கூடுதல் சுமையும், அவர்களின் பெற்றோருக்கு அலைச்சல் மற்றும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது.

பெற்றோர் அலைச்சல்
நடப்பு கல்வியாண்டில் அரையாண்டு தேர்வு கூட இன்னும் நடைபெறவில்லை. இந்த நிலையில், பிளஸ் 1 மாணவர்களுக்கு, பிளஸ் 2 பாடங்களையும்; ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, 10ம் வகுப்பு பாடங்களையும் நடத்த, சில தனியார் பள்ளிகள் துவக்கிவிட்டதாக புகார் எழுந்துள்ளது.

ஒரே கல்வி ஆண்டில் இரு வகுப்புகளின் பாடங்களை படித்து, மாணவர்கள் ஒரு பக்கம் சிரமப்படுகின்றனர் என்றால், அதற்கான புத்தகங்களை வாங்க, அவற்றைத் தேடி பெற்றோர் கடும் அலைச்சலுக்கு உள்ளாகின்றனர்.
தங்கள் பக்கத்து வீடு, தெரிந்தவர்கள், கல்வியாளர்களிடம் அடுத்த கல்வி ஆண்டுக்கான புத்தகத்தைத் தேடி பெற்றோர் அலைந்து கொண்டிருக்கின்றனர். பெரும்பாலானோர்,  தற்போது பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் இருந்து புத்தகங்களை வாங்கி, நகல் எடுத்து அதை 'பைன்டிங்' செய்து தங்கள் பிள்ளைகளிடம் கொடுக்கின்றனர்.

எதை படிப்பது?
நுாறு சதவீத தேர்ச்சி அடைந்த பள்ளியாக காட்ட, மாணவர்களை தனியார் நிர்வாகங்கள் சித்ரவதை செய்கின்றன. இதனால், பிளஸ் 1 பாடம் படிப்பதா அல்லது பிளஸ் 2 பாடம் படிப்பதா என, மாணவர்கள் குழம்பி தவித்து, நெருக்குதலுக்கு உள்ளாகின்றனர்.அதிலும் ஒரு சில தனியார் பள்ளிகள், பெயரளவில் ஒன்பது மற்றும் பிளஸ் 1 ஆண்டுத்தேர்வுகளை நடத்துகின்றன
என, பெற்றோர் தெரிவிக்கின்றனர். காஞ்சிபுரம் கல்வி மாவட்டத்தில், 32 மெட்ரிக் பள்ளிகளும், 23 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. இதேபோல், செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில், 103 மெட்ரிக் பள்ளிகளும், 140 மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. இவற்றில் பெரும்பாலான பள்ளிகளில், 2016ம் ஆண்டு நடைபெறவுள்ள, பொதுத்தேர்வுக்கு, இப்பொழுதே, பாடம் நடத்த துவங்கிவிட்டதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுபோன்ற கல்வி நிறுவனங்களை, மெட்ரிக் ஆய்வாளர்கள், கண்டும் காணாமல் இருப்பதாலேயே, மிகுந்த தைரியத்துடன் அடுத்த கல்வியாண்டிற்கான வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

கண் துடைப்பா?

இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மெட்ரிக் இயக்குனரகம் அனுப்பிய சுற்றறிக்கை, வெறும் கண்துடைப்பாகவே கருதப்படுகிறது.
இதுகுறித்து, மெட்ரிக் பள்ளி அலுவலக அலுவலர் ஒருவர் கூறியதாவது:
எந்த பள்ளியில் அவ்வாறு அடுத்த கல்வியாண்டிற்கான பாடம் நடத்தப்படுகிறதோ, அந்த பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே, இயக்குனரகத்தில் இருந்து வந்த சுற்றறிக்கையை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பிவிட்டோம். இருந்தாலும், தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆய்வு நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


13 comments:

  1. மாலை வணக்கம் நண்பர்களே...,,,

    ReplyDelete
  2. TET 2013 5% மதிப்பெண் தளர்வு மூலம் தேர்ச்சி பெற்ற நண்பர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு
    நண்பர்களே நாம் 5% மதிப்பெண் தளர்வில் தேர்ச்சி பெற்று இருந்த நேரத்தில் அதற்கான சாண்றிதழ்கள் பெற்ற பின்பு தற்போது அவை ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்ய வரும் 8 ம் தேதியுடன் இறுதி நாள் ஆகும். எனவே டிசம்பர் 9 ம் தேதிக்கு பிறகு இந்த வழக்கு விசாரனைக்கு வருகிறது.

    5% ஆதரவாக தமிழக அரசு தாக்கல் செய்திருந்தாலும் 5% மதிப்பெண் தளர்வுக்கு எதிரான ஆதரங்கள் வலுவாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றது. எவை எப்படி இருப்பினும் தற்போது ஆசிரியர் தகுதி தேர்வில் 5% மதிப்பெண் தளர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சாண்றிதழ் செல்லும் என்றும் இனி வரும் பணி நியமனங்களில் நம்மையும் சேர்த்து வெளியிட தமிழக அரசிடம் அமைதியாக வலியுறுத்துவோம்.

    அதற்கு 5% மதிப்பெண் தளர்வு மூலம் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட வாரியாக ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவுக்கு 5% மூலம் வெற்றி பெற்றவர்களை தேடி கண்டுபிடித்து ஒரு வெள்ளை தாளில்

    வரிசை எண். பெயர் ஊர் தகுதி தேர்வு எண் கையெழுத்து

    என்ற முறையில் வரிசையாக உங்களால் முடிந்தவரை பெற்று அதனை சொந்த பொறுப்பில் வைத்திருங்கள் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விரைவில் அறிவிப்போம். இவ்வாறு பெறப்படும் இந்த மனுவை ஒரு முறைப்படி மனுவாக எழுதி அதோடு இதையும் சேர்த்து
    மக்களின் முதல்வர் அம்மாவின் மக்கள் நல அரசின் தமிழக முதல்வருக்கு இந்த மனுவை அளிப்போம். கண்டிப்பாக நமக்கு இந்த அரசு ஒரு நல்ல தீர்வை அளிப்பார்கள் என்ற நம்பிக்கையில் இருப்போம். 100% அரசிடம் அமைதியான வழியில் தீர்வை பெறுவோம்.

    இப்படிக்கு
    திரு. பொன்மாரி
    திருநெல்வேலி மாவட்டம் 99767245803
    தமிழக TNTET 2013 - 5% மதிப்பெண் தளர்வு மூலம் வெற்றி பெற்ற நண்பர்கள் அமைப்பு மாநில ஒருங்கினைப்பாளர்

    K.ரஞ்சித்குமார்
    பொள்ளாச்சி கோவை மாவட்டம் 8883161772

    John Shibu Manick நீலகிரி மாவட்டம் 9659340311
    நீலகிரி மாவட்ட ஒருங்கினைப்பாளர்



    மற்ற மாவட்ட நண்பர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும்

    ReplyDelete
    Replies
    1. போன் நம்பர் சரி பார்க்கவும் 10 நம்பர் இதில் உள்ளது
      திரு. பொன்மாரி
      திருநெல்வேலி மாவட்டம் 9976724803
      தமிழக TNTET 2013 - 5% மதிப்பெண் தளர்வு மூலம் வெற்றி பெற்ற நண்பர்கள் அமைப்பு மாநில ஒருங்கினைப்பாளர்

      Delete
  3. நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!

    ReplyDelete
  4. Ippadiye amaithiyaaga irunthaal nammai anaivarune mara thi viduvaargal nanbargale adw candidates please wake up.

    ReplyDelete
  5. good evening to all brte in tamilnadu one good news for all ,our ARGTA brte ASSOCIATION won the brte school conversion case .The madurai court has given the judgement on ( 4/12/14 by 5.00 pm) the judgement say that 884 brtes must send to school within 15 days ,the court has ordered to education secretary ,spd(ssa) director school education thanks by ARGTA ASSOCIATION M.O MADURAI B,O VILLUPURAM DT 9443378533

    ReplyDelete
  6. Brtes na enna? Please tell me......

    ReplyDelete
  7. Ontru pattal undu valvu .adw frds ellarum sernthu muyarchi seivom, nichayam nallathu nadakum

    ReplyDelete
  8. Poraatam than seiyanum. Viraivil case mudikka solla arasai valiyuruthuvom.

    ReplyDelete
  9. Poraatam than seiyanum. Viraivil case mudikka solla arasai valiyuruthuvom.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி