இயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25-ம் தேதி அல்ல? இணைய தகவல்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 23, 2014

இயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25-ம் தேதி அல்ல? இணைய தகவல்கள்

 இயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25-ம் தேதி அல்ல என்பதற்கு ரூபகாரம்-1. 
அதாவதுஇயேசு கிறிஸ்துவுக்கு முன்னோடியான யோவான் ஸ்நானகன் என்றஸ்நான அருளப்பர் வயதிலேயே இயேசுவுக்கு ஆறு மாதங்களுக்கு மூத்தவர். எப்படியெனில் காபிரியேல் தூதர்இயேசுவின் தாயாகிய மரியாளுக்கு வாழ்த்துதல் கூறும்போது யோவான் ஸ்நானகனின் தாயாகியஎலிசபெத்துக்கு இது ஆறாம் மாதம் என்றார். 
 ஆகவேஇயேசுவின் பிறந்த நாளை கண்டு பிடிக்கயோவான் ஸ்நானகனின் பிறப்பை கவனிப்பது அவசியம்.  எனவே,லுக்கா 1:5 முதல் 20 வசனங்களை வாசிக்கவும்.
 இதில் 5-ம் வசனத்தில் அபியா என்ற ஆசாரிய முறைமையில் (Order) சகரியா என்ற ஒருவன் இருந்தான் என்றும், 8-9 வசனங்களில் சகரியா தன் ஆசாரியமுறைமையின்படி தேவ சந்நிதியிலே தூபங்காட்டுகிறதற்கு சீட்டைப் பெற்றான் என்றுவாசிக்கிறோம். எனவே யோவான் ஸ்நானகனின் தகப்பனாகியசகரியா ஆலயத்திலே ஊழியம் செய்த,அந்த அபியாவின்முறை என்னவென்றும்அது எக்காலம் என்றும் நாம் அறிவதுஅவசியம்.  அதாவது தாவீது அரசனின் காலத்தில்ஆலயத்தில் ஆசாரிய ஊழியம் செய்ய,முறைமைவகுக்கப்பட்டது எப்படியெனில் ஆசாரிய ஊழியம் செய்ய 24ஆசாரியர்கள் இருந்தார்கள்.  அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு மாதத்திற்கு இரண்டு இரண்டு பேராக 12 மாதத்திற்கும் 24 ஆசாரியர்களாக முறைப்படுத்தப்பட்டனர்.  ஒரு மாதத்தின் முதல் 15 நாட்களுக்கு ஒரு ஆசாரியனும் பின் 15 நாட்களுக்கு ஒரு ஆசாரியனுமாகமுறைப்படுத்தப்பட்டுஆசாரியர்களின் பெயர்களை எழுதி சீட்டுப்போட்டு யார் யார் எப்போது ஆலயத்திலே ஊழியம் செய்ய வேண்டும் என்றுதாவீது அரசன் முறைப்படுத்தி இருந்தான்.  முதலாம் சீட்டுப் பெற்றவன் முதலாம்மாதம் முன் 15நாட்களுக்கும்இரண்டாவது சீட்டுப் பெற்றவன் முதலாம்மாதம் பின் 15 நாட்களுக்கும் ஆசாரிய ஊழியம் செய்யவேண்டும்.  அந்தப்படிஎட்டாவது அபியா என்ற ஆசாரியனுக்குசீட்டு விழுந்தது.  எட்டாவது எண்ணும்போது அபியாவின்ஊழியகாலம் எபிரேயரின் மாதப்படி 4-ம் மாதமாகிய தம்மூஸ் மாதம் பின் 15 நாட்களாகும்.  இந்த காரியங்களை நாளாகம புஸ்தகம் 21-ம் அதிகாரத்தில் பார்க்கலாம்.   எனவேசகரியா ஆலயத்தில் ஊழியம் செய்த காலம் அவனது முன்னோரானஅபியாவின் முறைமையின்படி எபிரேய மாதமான 4-ம் மாதம்தம்மூஸ் மாதத்தின் பின் 15நாளாகும்.   சகரியாவின் இந்த ஊழியகாலம் நிறைவேறியபின்பு அவன் வீட்டுக்குப்போனான்.  எந்தஆசாரியனும் தனது ஆலய ஊழியக்காலத்தில் வீட்டிற்குப் போகமாட்டான்.  அந்த 15 நாட்களும் ஆலயத்திலே தங்கியிருப்பார்கள். ஊழியகாலம் நிறைவேறியபின்பே தங்கள் வீடுகளுக்குப் போவது வழக்கம் அதன்படிசகரியா தனது ஊழிய காலம் நிறைவேறின பின்புதனது வீட்டிற்குப் போனான்.  அதன் பிறகு அவன் மனைவி கர்பவதியானாள்.  (லுக்.1:23-24) எனவே,யோவான்ஸ்நானகளின் தாய் எலிசபெத்து கர்ப்பம் தரித்து எபிரேய மாதப்படி 5-ம் மாதமாகிய ஆப் என்னும் மாதம் இதுதமிழ் மாதத்திற்கு ஆடிமாதம்,ஆங்கிலமாதத்திற்கு ஜீலை மாதமாகும். எலிசபெத்தின்ஆறாம் மாதத்தில் காபிரியேல் தூதர் மரியாவிடம் அனுப்பப்பட்டார்.  (லுக்.1:26-28)ஆகவே,காபிரியேல்மரியாளை சந்தித்து தேவசித்தத்தை தெரிவிக்கவும். உன்னதமானவரின் பெலன் நிழலிடவும்மரியாள் கர்ப்பவதியானாள்.  எனவே மரியாள் கர்ப்பம் தரித்ததுஎலிசபெத்தின் ஆறாம் மாதத்தில்,அதவாதுஆடி மாதத்திலிருந்து ஆறு மாதம் தள்ளிமார்கழி மாதத்திலிருந்து பத்தாம் மாதம் இயேசு பிறந்த மாதம்.  அதாவது மார்கழி 1, தை 2, மாசி 3,பங்குனி 4, சித்திரை 5, வைகாசி 6, ஆனி 7,ஆடி 8, ஆவணி 9,புரட்டாசி 10.  புரட்டாசி மாதமே இயேசு பிறந்தமாதம்.  இது ஆங்கில மாதத்திற்கு அக்டோபர்மாதம்.  எனவேஇயேசு பிறந்தது டிசம்பர் 25-ம் தேதியல்ல தமிழ் மாதமாகிய புரட்டாசி கடைசியிலும்ஆங்கில மாத்திலே அக்டோபர் முதலுக்குமாகும்.  இது எபிரேய மாதத்திற்கு ஏழாம் மாதம்எத்தானீம் மாதமாகும்.
இயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25-ம் தேதி அல்ல என்பதற்கு ரூபகாரம்-2.
 அதாவது இயேசுவின் மரணநாள் வேதத்தில்திட்டமாக கூறப்பட்டுள்ளது. இது யூதர்முறைப்படியான நீசான் மாதம் 14-ம் தேதிமுதல் மாதமாகிய நீசான் மாதம் நமது தமிழ் மாதமான பங்குனிமாதத்திற்கு சமமானது. ஆங்கில மாதம்மார்ச் கடைசியிலோ அல்லது ஏப்ரல் மாதம் முதலுக்கோ இருக்கும்.  இயேசு தமது 33½  வசயதில் மரித்தார் என்பதை தானியேல்தீர்க்கதரிசியின் புத்தகத்தின் வாயிலாக திட்டமாக அறியலாம்.  (தானி.9:24-47) இயேசு 33வயதில் அல்ல. 33½ வயதில் மரித்தார்.  இது மார்ச் மாதக் கடைசியிலோ அல்லதுஏப்ரல் முதலுக்கோ வருகிறது என்றால் அவரது பிறந்தநாள் அதற்கு மாதத்திற்கு முன்னதாக இருக்க வேண்டும்.  எனவேமார்ச் மாதத்திலிருந்து பின்நோக்கி மாதம் சென்றால் மார்ச் 1, பிப்ரவரி 2, ஜனவரி 3, டிசம்பர் 4, நவம்பர் 5,அக்டோபர் 6.  எனவேஇயேசு பிறந்தது டிசம்பர் 25 அல்ல. அக்டோபர்மாதத்தில் என்பது தெளிவு
உண்மையை அறிய

11 comments:

  1. http://iemtindia.com/?p=495

    அந்த கட்டுரையின் உண்மை நிலையை ஆராய்வதுதான் இந்த கட்டுரையின் நோக்கமாகும்

    // கிறித்தவ சகோதரர்கள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ஆம் தேதி அன்று கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடி வருகின்றனர். அன்றைய தினம்தான் ஏசு பிறந்தார் என்று அவர்கள் நம்பிக்கை கொண்டு அந்த நாளை திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர். ஆனால் கிறித்தவ சகோதரர்கள் ஏசு பிறந்த நாளாகக் கருதி கொண்டாடும் கிறிஸ்துமஸ் விழா என்பது டிசம்பர் 25என்பது தவறு என்று கிறித்தவ மதத்ததலைவரான போப் ஆண்டவர் தெரிவித்துள்ளார்.  
     போப் ஆண்டவர் அறிவித்துள்ள இந்தச் செய்தி இத்தனை ஆண்டுகள் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடி வந்த கிறித்தவர்கள் மத்தியில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமா? ஏசு பிறந்த ஆண்டு எது என்பதும் தவறாகவே மக்களுக்கு சொல்லப்பட்டுள்ளது என்ற உண்மையையும் போட்டு உடைத்துள்ளார் போப் ஆண்டவர்./////

    பதில்; 16வது “பென்னடிக்ட்” போப் ஆண்டவர் அவர்களால் எழுதப்பட்டுள்ள ஜீஸஸ் ஆஃப் நஸ்ரேத் : தி இன்பேன்சி நர்ரேடிவ்ஸ் (‘Jesus of Nazareth: The Infancy Narratives’) என்ற புத்தகம் நவம்பர் மாதத்தில் வெளியாகியுள்ளது.அதில் போப் அவர்கள் இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினத்தை குறித்த விடயங்களை பற்றி எழுதியுள்ள விடயங்கள் புதியவை அல்ல.பல கோடி கிறிஸ்தவர்கள் பல ஆண்டுகளாக பிரசங்கித்து வரும் விசயமே.இது ஏதோ புது விசயம் மாதிரியும்,கிறிஸ்தவர்களுக்கு இது தெரியாத மாதிரியும் இஸ்லாமிய அறிஞர்கள் விளக்குவது நமக்கு விசித்திரமாக உள்ளது.இயேசு கிறிஸ்து பிறந்த ஆண்டை குறித்தும் ,அவர் பிறந்த தேதி குறித்தும் பெரும்பான்மை கிறிஸ்தவர்கள் நன்கு அறிந்தவர்களாகவே உள்ளனர்.குறிப்பிட்ட இந்த விசயங்களை பொருத்த வரை நடைமுறையில் உள்ள விசயங்களோடு ஒத்துப் போவதால் எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லாதபடியால் கிறிஸ்தவ மக்கள் அவற்றை அப்படியே பின்பற்றுகிறார்கள்.

    மேலும் இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் பிறந்தார் என்பது வரலாற்று உண்மை.இதை உலகில் அனைவருக்கு அறிவிக்க ஒரு நாள் அது டிசம்பர் 25 ஆக இருந்துவிட்டு போகிறது.கிறிஸ்தவத்துக்கு முன்பு அந்த நாள் வேறு எதற்கோ பயன்பட்டு இருந்தாலும் அதைபற்றிய கவலை நமக்கு இல்லை.இன்றைக்கு அந்த நாளை விசேஷிக்க என்ன காரணம் என்றே நாம் பார்க்க வேண்டும்.எங்களுடைய நோக்கம் இயேசு கிறிஸ்துவை மேன்மைப்படுத்துவதாக மட்டும் இருக்கவேண்டும் என்பதே முக்கியமாக உள்ளது.பிதாவாகிய தேவன் தன் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் மூலம் இந்த மனுகுலத்துக்கு கொடுத்த மிகப்பெரிய நற்செய்திதான் கிறிஸ்துமஸ் .அதைதான் டிசம்பர் 25 ல் நினைவு கூறப்படுகிறது.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. மேலும் விளக்கமாக ஒவ்வொரு கேள்விக்கும் பதில் தெரிந்து கொள்ள
      http://iemtindia.com/?p=495

      மதம் என்பது மனிதன் மனிதனாக வாழ்வதற்க்கு உருவாக்கப்பட்டது என்பதை ஆறியாமல், மதத்தை தான் மதிப்போம் என்று மனித நேயத்தை இழந்து விடக்கூடாது.

      Delete
    5. நன்றி அலெக்ஸ் சார்

      Delete
  2. எங்களுடைய நோக்கம் இயேசு கிறிஸ்துவை மேன்மைப்படுத்துவதாக மட்டும் இருக்கவேண்டும் என்பதே முக்கியமாக உள்ளது.பிதாவாகிய தேவன் தன் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை இந்த மனுகுலத்துக்கு கொடுத்த மிகமுக்கிய நிகழ்வுதான் கிறிஸ்துமஸ் .அதுதான் டிசம்பர் 25 ல் நினைவு கூறப்படுகிறது.
    இந்த பாரம்பரியத்திலிருந்து மாறுபட எந்த ஒரு கிறிஸ்தவரும் விரும்ப மாட்டார்கள்.எனவே இந்த விஷயத்தில் நடைமுறைக்கு முரணான எந்த விவாதங்களும்,தலையீடுகளும் நிச்சயம் ஏற்புடையதல்ல.

    ReplyDelete
  3. Mr. Sooruli sir better to change your thought

    ReplyDelete
  4. கிறிஸ்துவ பத்தி உங்களுக்கு என்னங்க தெரியும்,?அவரு பிறந்த நாளா பத்தி பேச.?

    ReplyDelete
  5. இந்த மனுஷன் பயலுக கடவுள கூட. விட்டு வைக்க. மாட்டிங்கரானுக

    ReplyDelete
  6. இத சொல்லி நீ என்ன பன்ன போர

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி