அரையாண்டு தேர்வு இன்று முடிகிறது விடுமுறைக்கு பின் ஜன.2ல் பள்ளி திறப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 23, 2014

அரையாண்டு தேர்வு இன்று முடிகிறது விடுமுறைக்கு பின் ஜன.2ல் பள்ளி திறப்பு


தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை முப்பருவ பாடத்திட்டம் அமலில் உள்ளது. 2ம் பருவத்திற்கான தேர்வுகள் கடந்த 10 நாட்களாக நடந்து வருகின்றன. இன்று (செவ்வாய்) கடைசி தேர்வு நடக்கிறது.

இதுபோல் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு போல் பொது வினாத்தாள் தயாரித்து வழங்கப்பட்டு அரையாண்டுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.இந்த வகுப்பினருக்கும் இன்றுடன் தேர்வுகள் நிறைவு பெறுகிறது.

இதையடுத்துஅனைத்துப் பள்ளிகளுக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது.விடுமுறைக்குப் பின்னர் அரசுப் பள்ளிகள் உள்ளிட்ட பல தனியார் பள்ளிகள் ஜனவரி 2ம் தேதி திறக்கப்படுகின்றன. சில தனியார் பள்ளிகள் ஜனவரி 5ம் தேதி திறக்கப்படும் என அறிவித்துள்ளன. அரையாண்டு விடுமுறைக்குப் பின்னர்பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளில் 3ம் பருவத்திற்குரிய பாட புத்தகங்கள் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.

3 comments:

  1. சுப்ரீம் கோர்ட்டில் GO71&5%

    வழக்கு..........விரைவில் தீர்ப்பு

    ReplyDelete
    Replies
    1. Above 90ikku velai kitaikkuma sollunka sir pls

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி