TNPSC:குரூப்-4 பகுதி -8 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 6, 2014

TNPSC:குரூப்-4 பகுதி -8

துணைப்பாடம்: அறிவு நுட்பம்
* ஆடல், பாடல், வட்டம், அழகு ஆகியனவும் பெயர்ச்சொற்கள் ஆகும்.

* நொடி, விநாடி, மணி, பொழுது, கிழமை, வாரம், திங்கள், ஆண்டு என எல்லாமே காலப் பெயர்கள் ஆகும்.
* சினை என்பது ஒன்றின் உறுப்பைக் குறிப்பது ஆகும்.
* வீடு, தெரு, பள்ளி கோவில்,மக்கள் வாழிடம், தோட்டம் என இடங்களைக் குறிப்பனவெல்லாம் இடப் பெயர்கள் ஆகும்.
* பெயர்ச்சொற்களை இலக்கண நூலார் எத்தனை வகைப்படுத்துவர்?
அவை:
1. பொருட் பெயர்
2. இடப் பெயர்
3. காலப் பெயர்
4. சினைப் பெயர்
5. குணப் பெயர்
6. தொழிற் பெயர்

பொருளைக் குறிக்கும் பெயர் - பொருட் பெயர்
* பொருட் பெயர் இரு வகைப்படும். அவை:
* 1. உயிருள்ள பொருள் 2. உயிரற்ற பொருள்
* நாற்காலி, அடுப்பு, தட்டு, எண்ணெய், மண், நீர், காற்று முதலியன உயிரற்ற பொருள்கள்.
* குமரன், மலர்க்கொடி, தென்னை, செம்பருத்தி, வெள்ளாடு, ஓணான் முதலியன உயிருள்ள பொருள்கள்.
* பூங்கொடி பூ பறிக்கிறாள் இத்தொடரிலுள்ள பூ என்பது சினைப்பெயர்.
* சதுரம் இது ஒரு குணப்பெயர்
* கட்டுரை எழுதும் போது பத்திபத்தியாக எழுத வேண்டும்.
* உலகம், சூரியனைச் சுற்றுவதால் இரவுபகல் தோன்றுகிறது.
* நேருவின் அறிவாற்றலைக் கற்றோரும், மற்றோரும் புகழ்நதனர்.

கற்பித்தல் தொழில் பெயர்கள் எனப்படும்.
பெயர் வகை -     பெயர்
1. பொருட் பெயர் - கண்ணன், நாற்காலி
2. இடப் பெயர் -  வேலூர், நாமக்கல்
3. காலப் பெயர் - தைத்திங்கள், நண்பகல்
4. சினைப்பெயர் - முகம், கை
5. குணப் பெயர் - வட்டம், அழகு
6. தொழிற் பெயர் - ஆடல், பாடல்
*  குணப் பெயரைப் பண்புப் பெயர் எனவும் கூறுவர்.
* கவியரசு கண்ணதாசன் சிறுகூடல்பட்டி என்னும் சிற்றூரில் 1927 ஆம் ஆண்டு பிறந்தார்.
* கண்ணதாசனின் இயற்பெயர் - முத்தையா
*  கண்ணதாசனின் புனைப்பெயர்கள் - காரைமுத்துப் புலவர், வணங்காமுடி, பார்வதிநாதன், ஆரோக்கியநாதன், கமகப்பிரியா எனப் பல புனைப்பெயர்கள் உண்டு.
* ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை இயற்றியுள்ளார் கண்ணதாசன்.
* கண்ணதாசன் மறைந்த ஆண்டு - 1981.
* க், ங், ச், ஞ்-- ஆகிய பதினெட்டு மெய்யெழுத்துகளும் உயிர் எழுத்தையோ, உயிர்மெய்யெழுத்தையோ தொடர்ந்து மெய்யெழுத்து வரிசையாக வரும்.
* ஜெர்மன் நாட்டின் கொடுங்கோலராகக் கருதப்பட்டவர் - ஹிட்லர்.
* ஹிட்லருக்கு எதிராகத் திறமையாக வாதாடி, எழுத்து மூலம் ஹிட்லரை மன்னிப்புக் கேட்கச் செய்தவர் - செண்பகராமன்.

செய்யுள்: ஏர்முனை
நெத்தி வேர்வை சிந்தினோமே முத்துமுத்தாக - அது
நெல்மணியாய் விளைஞ்சிருக்குக் கொத்துக்கொத்தாக
பக்குவமாய் அறுத்துஅதைக் கட்டுக்கட்டாக - அடிச்சுப்
பதருநீக்கிக் குவிச்சு வைப்போம் முட்டுமுட்டாக!

வளர்ந்துவிட்ட பருவப்பெண் போல்உனக்கு வெட்கமா?- தலை
வளைஞ்சு சும்மா பாக்கிறியே தரையின்பக்கமா - இது
வளர்த்துவிட்ட தாய்க்குத் தரும்ஆசை முத்தமா? - என்
மனைக்கு வரக்காத் திருக்கும் நீஎன் சொத்தம்மா
- அ. மருதகாசி

பொருள்:
* மாரி - மழை
* சேமம் - நலம்
* தேசம் - நாடு
* முட்டு - குவியல்
* நெத்தி - நெற்றி

ஆசிரியர் குறிப்பு:
* பெயர்: மருதகாசி
* ஊர்: திருச்சி மாவட்டத்திலுள்ள மேலக்குடிகாடு
* பெற்றோர்: அய்யம்பெருமாள் - மிளகாயி அம்மாள்
* சிறப்பு: திரைக்கவித் திலகம்
* காலம்: 13.02.1920 - 29.11.1989
நூல் குறிப்பு:
* "திரைக்கவித் திலகம் அ. மருதகாசி பாடல்கள்" என்னும் தலைப்பில், திரைக்கதைகளுக்கு எழுதிய பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
* அதில் உழவும் தொழிலும், தாலாட்டு, சமூகம், தத்துவம், நகைச்சுவை என்னும் தலைப்புகளில் பாடல்கள் வகைப்படுத்தப் பட்டுள்ளது.
* சமூகம் என்னும் தலைப்பின்கீழ் இடம்பெற்றுள்ள பாடல், பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
* உழவர்கள் செல்வமாகக் கருதுவது - நெல்மணிகளை

பிரித்து எழுதுக:
* நேரிங்கே - நேர் + இங்கே
* சேமமுற - சேமம் + உற
* தேசமெல்லாம் - தேசம் + எல்லாம்
* பருவப்பெண் - பருவம் + பெண்


அம்மானை
வீரன்நெடு வெள்வேல் வியன்செந்தில் எம்பெருமான்
பாரில்உயி ரெல்லாம் படைத்தனன்காண் அம்மானை,
பாரில்உயி ரெல்லாம் படைத்தனனே யாமாகில்
ஆரணங்கள் நான்கும் அறிவனோ அம்மானை,
அறிந்து சிறைஅயனுக் காக்கினன்காண் அம்மானை.
- சுவாமிநாத தேசிகர்

* ஆசிரியர் குறிப்பு:
* திருச்செந்திற்கலம்பகம் என்னும் இந்நூலை இயற்றியவர் ஈசான தேசிகர் என்னும் சுவாமிநாத தேசிகர் ஆவார்.
* ஈசான தேசிகர் என்பது அவரது சிறப்புப் பெயர்.
* பெற்றோர்: தாண்டவமூர்த்தி
* கல்வி: மயிலேறும் பெருமாள் என்பவரிடம் கல்வி கற்றார்.
* திருவாவடுதுறை ஞானதேசிகராகிய அம்பலவாண தேசிகமூர்த்திக்குத் தொண்டராய் இருந்தார்.
* நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்.

* நூல்குறிப்பு: திருச்செந்திற்கலம்பகம் என்னும் இந்நூல், தொண்ணூற்றாறு சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.
* கலம்பகம் = கலம் + பகம் எனப் பிரியும்.
* கலம் - பன்னிரண்டு
* பகம் - ஆறு எனப் பதினெண் உறுப்புகளைக் கொண்டது.
* பல்வகையான பா வகைகளும் கலந்திருத்தலால் இந்நூல் கலம்பகம் எனவும் பெயர் பெற்றது.
* பதினெண் உறுப்புகளில் ஒன்றாகிய அம்மானை என்னும் பகுதி, ஈண்டுப் பாடப்பகுதியாக இடம் பெற்றுள்ளது.

பொங்கல் வழிபாடு
நீயன்றி மண்ணுண்டோ, விண்ணுண்டோ,
ஒளியுண்டோ, நிலவுமுண்டோ,
நீருண்டோ, என்னிடம் வாழத்துப் பொருளுமுண்டோ?
கதிரவா கனிந்து வருவாய்! கரும்பு
மனமும் இனிபாம் உயிரும்
நின்னடி படைத்தது விட்டோம்
கதிரவா! ஏற்று மகிழ்வாய்
உயர்ந்தவா, உயிரின் முதலே!
-ந. பிச்சமூர்த்தி

சொற்பொருள்:
* திரு - செல்வம்
* கனகம் - பொன்
* கோ - அரசன்
* நிவேதனம் - படையல்அமுது
* புரவி - குதிரை
* கடுகி - விரைந்து

ஆசிரியர் குறிப்பு:
* இயற்பெயர்: ந. வேங்கட மகாலிங்கம்
* புனைபெயர்: ந. பிச்சமூர்த்தி
* ஊர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்
* தொழில்: 1924 - 1938 வரை வழக்கறிஞர், 1938 - 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர்.
* எழுத்துப்பணி: கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள்.
* காலம்: 15.08.1900 - 04.12.1976

நூல் குறிப்பு:
* ந. பிச்சமூர்த்தியின் கவிதை நூல்கள் இருபதாம் நூற்றாண்டின் தற்கால இலக்கியத் துறைக்குப் புதிய சிறப்புகளைச் சேர்த்திருக்கின்றன.
* பாரதிக்குப் பின் கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவை இவரது படைப்புகள்.
* ந. பிச்சமூர்த்தி கவிதைகள் என்னும் நூலில் 83 கவிதைகள் உள்ளன.

பிரித்து எழுதுக:
* நெற்கதிர் - நெல் + கதிர்
* நிலவுமுண்டோ - நிலவும் + உண்டோ
* மண்ணுண்டோ - மண் + உண்டோ
* நின்னடி - நின் + அடி
* ஒளியுண்யோ - ஒளி + உண்டோ

உரைநடை: நெசவு
துணி நெய்ய பயன்படும் கருவிகள்:
* அச்சுமரம், படைமரம், விழுதுகம்பு, குத்துக்கம்பி, ஓடம், ஊதுகுழல், பாவு
ிரு.வி.க. வின் கூற்று:
* பூவிலே சிறந்த பூ பருத்திப்பூ என்கிறார் திரு.வி.க.
துணியை பளபளப்பாக்க:
* நெய்த துணிகளை தேய்த்து பளபளப்பாக்கத் "தேய்ப்புக் கல்லைப்" பயன்படுத்துவர்.
* கலிங்கம்: பாவுநூல் மற்றும் ஊடைநூல் இணைத்து கலிங்கம் என்னும் ஆடை உருவாகிறது.

பிரபலமான ஆடைகள்:
* காஞ்சி - பட்டாடைகள்
* திருப்பூர் - பின்னலாடைகள்
* மதுரை - சுங்குடி புடவைகள்
* உறையூர் - கண்டாங்கி சேலைகள்
* சென்னிமலை - பாய் விரிப்புகள்
* ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது

* நகர்ப்புறங்களில் இயந்திர நெசவு நடைபெறுகிறது.
* பட்டாடைகள் தயாரிக்கப் பயன்படுவது - பட்டுப்புழு
* மங்கை தன் பிறந்த நாள் பரிசாகத் தந்தையிடம் கேட்ட ஆடை - கைத்தறி ஆடை
* உலகிலேயே கைத்தறி நெசவின் முன்னோடி - தமிழ்நாடு
* செய்யும் தொழிலில் சீர் தூக்கின் நெய்யும் தொழிலுக்கு நிகரில்லை என்னும் வழக்காறும் உண்டு.
* ஆடையில்லா மனிதன் அரை மனிதன்
* குளிரில் வாடிய மயிலுக்குப் போர்வை போர்த்தியது - வள்ளல் பேகன்

துணைப்பாடம்: தமிழ் நாடக முன்னோடிகள்
நாடகம்:
* கண்ணுக்கும் காதுக்கும் மனத்துக்கும் இன்பம் பயக்கும் கலை நாடகக்கலை.
* உணர்ச்சியை தூண்டி, உள்ளத்தில் புதைத்து கிடக்கும் அன்பையும் அறிவையும் வெளிப்படுத்தி மக்களைப் பண்படுத்தும் சிறந்த கலை நாடகம்.
* சயத்தம், முறுவல், மதிவாணன் நாடகத்தமிழ், செயிற்றியம் முதலிய நாடக இலக்கான நூல்களின் பெயர்கள் மட்டுமே இப்போது கிடைக்கின்றன.
* இடைக்காலச் சோழப் பேரரசர்கள் ஆதரவில் ஆலயங்களில் நாடகங்கள் நடத்தப் பெற்றுள்ளன என அறிகிறோம்.

பரிதிமாற் கலைஞர் (1870 - 1903)
* தமிழ் நாடக பேராசிரியர்
* உயர்தனிச் செம்மொழித் தகுதி தமிழுக்கே உண்டு என அக்காலத்திலேயே முழங்கியவர்.
* சூரிய நாராயண சாஸ்திரி என்னும் தம் பெயரைத் தூய தமிழில் பரிதிமாற் கலைஞர் என மாற்றி அமைத்துக் கொண்டார்.
* இவர், தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டே நாடகத் தொண்டாற்றினார்.
* மேலைநாட்டு நாடக ஆசிரியர்களான ஷேக்ஸ்பியர், எப்சன், மோலியர் ஆகியோரைப் போன்று தமிழகத்தில் நாடகாசிரியர்கள் தோன்ற வேண்டும் எனப் பெரிதும் விழைந்தவர்.
* ரூபாவதி, கலாவதி, மான்விஜயம் என்பது இவரின் நாடகங்கள்.

ரூபாவதி, கலாவதி, மானவ]யம், நாடகவியல்
* இவர் வடமொழி, மேனாட்டு மரபுகளைத் தமிழ் நாடக மரபோடு ிணைத்து "நாடகவியல்" என்னும் நூலைப் படைத்தார்.
* இவரது "மானவிஜயம்" நாடகம், "களவழி நாற்பது" என்னும் இலக்கியத்தை அடிப்படையாக கொண்டு இயற்றப்பட்டது. சேரமான் கணைக்கால் இரும்போரையுடன் புலவர் பொய்கையாரும் இறந்துபடுகின்றன்றார்; இவ்விருவர் இறப்பிற்கும் தானே காரணம் என்று எண்ணிய சோழன் செங்கணான்.

"மானப் பெருமையை மனக்கொண்டு அந்தோ
ஈனப் பாரில் இருத்தல் வேட்டிலை
உண்ணும் போழ்தினில் உன்னைத் கொன்றவன்
செங்கணான் எனும்இச் சிறுமதி யுடையான்"
* என்று புலம்பித் தன்னை மாய்த்துக்கொள்ளும் காட்சி, செந்தமிழ் நடைபயில, அவலச்சுவையை வெளிப்படுத்தும் இடமாகும்.

சந்க்கரதாசு சுவாமிகள் (1867 - 1920)
* நாடகத்தமிழ் உலகின் இமயமலை, தமிழ்த் நாடக தலைமை ஆசிரியர்
* நாடகம் மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பதே சுவாமிகளின் முதல் நோக்கமாகும்.
* எனவே, பாமர மக்களுக்குத் தெரிந்த பழங்கதைகளை நாடகமாக்கினார்.
* நாடகத்தைச் சமுதாய சீர்திருத்தக் கருவியாகவும் கையிலெடுத்த சுவாமிகள், தம் நாடகங்கள் வாயிலாகப் பக்தி, ஒழுக்கம் ஆகியனவற்றை வலியுறுத்தி, மக்களுக்கு நல்லறிவு புகுட்டினார்.
* சிறுவர்களைக் கொண்டு நாடகக் குழுக்களைத் தோற்றுவித்தார்.

நாடகங்கள்:
* வள்ளி திருமணம், கோவலன் சரித்திரம், சதி சுலோச்சானா, இலவகுசா, பக்தப் பிரகலாதா, நல்லதங்காள், சதி அனுசுயா, வீர அபிமன்யு
* இவர் நாற்பது நாடகங்களை இயற்றியுள்ளார்.

புத்தநெறி சுப்பிரமணியம் பாராட்டு:
"துடிப்பிருக்கும் சங்கரதாசு எழுத்தில் எல்லாம்
சுவைசொட்டும் சந்தநயம் தேய்ந்திருக்கும்"
* என்று சுவாமிகளின் சந்தப்பாடல்களை பற்றி புகழ்கிறார்.

சதி சுலோசனா:
* சதி சுலோச்சனா நாடகத்தில் இந்திரசித்து, தன் நண்பனிடம் பூக்கள் பற்ரிக் கேட்க,
"பூவின் வேய்வறம் பலகோடி அதனை
அவர் போதிப்பார் தேடி
அப்பு கலப்பு பதிப்பு கொதிப்பு
செப்பு அருப்பு இருப்பு நெருப்பு
உப்பு உரப்பு கசப்பு புளிப்புஇத்தாதனை பூவிற்குமேல் இரவில் கண்விழிப்பு
இயம்பிய மொழியெல்லாம் தமிழ்ப் புத்தகக் குறிப்பு"
* என அடுக்குமொழி பகர்வது இவரது சந்த நடைக்குச் சான்றாகும்.

கோவலன் சரித்திரம்:
* இவர் இயற்றிய "கோவலன் சரித்திரம்" மதுரையில் அரங்கேறியபொழுது, காற்சிலம்பு விற்று வர நகருக்குப் போவதாகக் கோவலன் கூறக் கண்ணகியோ,
"மாபாவியோர் கூடி வாழும் மாநகருக்கு
மன்னா போகாதீர்"

* என்று பாடுவது போன்ற காட்சி இதனால் அங்கு குழப்பம் ஏற்பட்டது.
* சுவாமிகள் அவையினர் முன்பு, "மா என்பது அலைமகளையும், பா என்பது கலைமகளையும், வி என்பது மலைமகளையும் குறிக்கிறது" என்று திருவிளையாடல்புராணம் சான்று காட்டி விளக்கினார்.
நடிப்புத் திறமை:* நல்ல உடற்கட்டும் எடுப்பான தோற்றமும் உடைய இவர் "எமன், இராவணன், இரணியன்" முதலிய வேதங்கள் புனைந்து மேடையில் நிற்கும் போது பார்பவர்களுக்குக் கிலி அடிக்கும். இவர் எழுத்துத் திறமையோடு நடிப்புத் திறமையும் பெற்றிருந்தார்.

பம்மல் சம்பந்தனார் (1875 - 1964)
* தமிழ் நாடகத் தந்தை, கலைஞர்
* பம்மல் சம்பந்தனார் தனது 18வது வயதில் "சுகுணவிலாச சபையைத்" தொடங்கினார்.
* இவர் தேவையற்ற ஆடல் பாடல்களைக் குறைத்தார்.

கலைஞர்:
* பம்மல் சம்பந்தனார், கட்டுக்குலையாதக் நாடகக் குழுவை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார்.
* அதனால் நாடகர்களால், "கலைஞர்" என மதிக்கப்பட்டார். இவர் நீ4தித்துறையில் பணியாற்றியவர்.

நாடகங்கள்:
* இவர் 94 நாடகங்களைத் படைத்துள்ளார்.
* மனோகரா. யயாதி., சிறுத்தொண்டன், கர்ணன், சபாபதி, பொன்விலங்கு, வாணிபுரத்து வீரன் (ஷோக்ஸ்பியர் நாடகங்களை தழுவி), விருபம்பிய விதமே, அமலாதித்தியன்

கேளிக்கை நாடகம், நையாண்டி நாடகம்:
* இவர், நாடக்க காட்சிக்கேற்பத் திரைச்சீலைகளையும் பொருத்தமான ஓவியங்களையும் தொங்கவிடுமாறு வற்புறுத்தினார்.
* இவர் கேளிக்கை நாடகம் என்ற வகையினையும், நாடக நையாண்டியினையும் தமிழ் நாடக உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார்.

அடுக்குமொழிகள்:
"போட்டும் புனைந்தழகாய்க் கட்டும்
பீதாம்பரமாம் பட்டும்
சோதி செய் பகட்டும்
செயலைக் கண்டு கிட்டும்
வருணிக்கும்
பொழுது எனக்கு மட்டும்.

சபாபதி நாடகம்:
* இவரின் சபாபதி என்ற நாடகம் இன்றளவும் மறக்கமுடியாத நகைச்சுவை நாடகம் ஆகும்.
* சபாபதி என்ற இந்நாடகம் படிக்கவும் பார்க்கவும் நகைச்சுவையை ஏற்படுத்தவல்லது.

குறளை மாற்றுதல்:
குறள் வடிவத்தைத் தன் போக்கிற்கேற்ப மாற்றி எழுதுவார்.

"சூதினும் சூதானது யாதெனில் சூதினும்
சூதே சூதா னது"

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி