வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு வாய்ப்பு: தினமலர் செய்தி எதிரொலி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 14, 2014

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு வாய்ப்பு: தினமலர் செய்தி எதிரொலி

தினமலர் செய்தி எதிரொலியாக, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் 2015, மார்ச் 7 க்குள் பதிவை புதுப்பித்துக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலையில் நடந்த தமிழக சட்டசபை கூட்டத்தில் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 2011 முதல் 2013 வரை பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை அளிப்பது குறித்து அறிவிக்கப்பட்டது. இது போன்ற அறிவிப்பு வெளியான சில நாட்களில் அரசு உத்தரவு வௌ?யாகும். ஆனால் நான்கு மாதங்கள் ஆகியும் வராததால் பலர் பாதிக்கப்பட்டனர். இது குறித்து 'தினமலர்' செய்தி வெளியானது. இதனையடுத்து நேற்று அரசு உத்தரவை வெளியிட்டுள்ளது. இதன்படி, '2011 முதல் 2013 வரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க தவறியவர்கள், நாளை முதல் 2015 மார்ச் 7 க்குள் விடுபட்ட பதிவை புதுப்பித்துக்கொள்ளலாம்' என இயக்குனர் சமயமூர்த்தி தெரிவித்துள்ளார்.


முதுகலை பட்டதாரிகள்:

நீலகிரி, கோவை, திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கரூர், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் முதுகலை மற்றும் தொழிற்படிப்பு பதிவுதாரர்கள் மதுரையில் உள்ள தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பு அலுவலகத்தை அணுகி பதிவை புதுப்பிக்கலாம் என உதவி இயக்குனர் மகாராணி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி